ஹிண்ட்ராப் செயல் திட்டமே இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வாகும்

-வி. சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 21/12 2012.

Hindraf-Sampulingam13 ஆவது பொது தேர்தலுக்கான முரசு முழக்கங்கள் முன் எப்போதையும் விட இப்பொதுவெகு சமீபத்தில் ஒலிக்க துவங்கி விட்டன. இனி விடியப் போகும் எதோ ஒரு  நாளில், மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு பொது தேர்தலுக்கான நாள்அறிவிக்கப் படத்தான் போகிறது.  தேர்தல் நிச்சயம் நடக்கும். மலேசியஇந்தியர்களாகிய நாம் அதற்க்கு தயார் ஆகி விட்டோமா என்பதுதான் கேள்வி.

நாம் இதுவரை 12 பொதுத்தேர்தல்களில் வாக்களித்திருக்கிறோம். நம் தாத்தாபாட்டியும்  , பின்னர் நம் பெற்றோர்களும், இப்பொது நாமும் தொடர்ந்துவாக்களித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அடுத்த 13 ஆவதுபொதுத்தேர்தலில் நம்முடைய வாக்குகளை செலுத்துவதற்கு முன், கடந்த பன்னிரண்டுமுறை நாம் போட்ட வாக்குக்களை சற்றே திரும்பி பார்ப்போம். இது வரை நாம்அளித்த வாக்குகள் மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில்   பயன் பட்டிருக்கின்றன என்று   நம்மை நாமே  கேட்டுக் கொள்ள வேண்டியமுக்கியமான திருப்பத்தில இன்று   நின்று கொண்டிருக்கிறோம்.

நம் வாக்குகளின் மூலம் நகர மன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) ஆனவர்கள் ஏராளம் பேர்  ( நான் இந்தியர்களை மட்டும் குறிப்பிடவில்லை). நம்வாக்குகளின் மூலம் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை சட்ட மன்றஉறுப்பினர்களாகவும் , நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உயர்த்தி இருக்கிறோம். நம் வாக்குகளின் மூலம் வாழ்வில் சந்திக்காதவர்களை  மாநில ஆட்சிக்குழுஉறுப்பினர்களாவும் ,  மத்திய மந்திரிகளாகவும்  ஆக்கியிருக்கிறோம். அவ்வளவுதான்!

இவர்களுக்காக கடந்த பன்னிரண்டு முறை வாக்களித்ததின் மூலம் மலேசியஇந்தியர்களாகிய நாம் தினம் தோறும் எதிர்கொள்ள வேண்டிய  சோதனைகளுக்கும்வேதனைகளுக்கும் தீர்வு  பிறந்திருகிறதா  என்றால் நிச்சயம் இல்லை என்றுதான்சொல்ல வேண்டும். நம்முடைய சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு விடிவுபிறந்திருகிறதா என்றால் மீண்டும் நமக்கு ஏமாற்றம்தான்.

12  பொதுத் தேர்தலில் வாக்களித்த இந்திய சமூகத்திற்கு என்று விவசாயதிட்டங்கள் இல்லை,குடியமர்வு திட்டங்கள் இல்லை,வீட்டுடைமை திட்டங்கள்இல்லை,  தொழில் முனைவர் திட்டங்கள் இல்லை, வியாபார திட்டங்கள் இல்லை,நம்பிள்ளைகள் கல்வியில் சிறந்தோங்க திட்டங்கள் இல்லை, தமிழ் பள்ளிகளைமேம்படுத்தும் திட்டங்கள் இல்லை, சமூக பிரச்சனைகளை களைவதற்கு திட்டங்கள்இல்லை, இளையோர்க்கு வழி காட்டும் திட்டங்கள் இல்லை, புராதன சின்னங்களாகபோற்றப்பட வேண்டிய ஆலயங்களை பாதுகாக்க திட்டங்கள் இல்லை, இப்படி பிரத்தியேகதிட்டங்கள் எதுவுமே நமக்கில்லை! காரணம், நம் மீது அக்கறை கொள்பவர்கள்யாரும் இல்லை. அரசியல் வாதிகளுக்கு வேண்டியதெல்லாம்  ஐந்து ஆண்டுக்குஒருமுறை இந்தியர்களின் வாக்கு மட்டும்தான். நாமும் கொஞ்சமும் சளைக்காமல், ஆழமாக யோசிக்காமல் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அவர்கள் கேட்கும் ஓட்டுகளைதாராளமாக வழங்கி வந்திருக்கிறோம்.

அடுத்த பொதுத்தேர்தலில் மீண்டும்  நாம் அரசியல்வாதிகளின் ஆசைவார்த்தைகளிலும் , வெற்று வாக்குறுதிகளிலும் , கபட நாடகத்திலும், கள்ளச்சிரிப்பிலும் ஏமாறத்தான் போகிறோமா?  நம்முடைய இளைய சமுதயாத்தின் , எதிர்கால சந்ததியினரின் உரிமைகளை பற்றி அக்கறை கொள்ளாமல் கண்மூடிகிடக்கத்தான்  போகிறோமா? தேர்தலுக்கு பின் இவர்களிடம் கூனிக்  குறுகி, ஐந்திற்கும் பத்திற்கும் கையேந்தி கொண்டுதான் இருக்கப் போகிறோமா?

இந்த கேள்விகளுக்கு ஹிண்ட்ராப் சந்தித்த ஆயிரமாயிரம் மலேசிய இந்தியர்களின் திடமான பதில்   “இல்லை!”  என்பதாகும்.

அதேசமயத்தில் இந்த இக்கட்டான சூழ் நிலையில் இருந்து விடுபடுவது எப்படி என்றுஅவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலாக அமைந்ததுதான் ஹிண்ட்ராப் அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அடுத்த ஐந்து ஆண்டிற்கான  செயல் திட்ட வரைவாகும்.

hindraf_watha13 ஆவது பொதுதேர்தலுக்கு  ஹிண்ட்ராபின் 6 பரிந்துரைகள்

இந்த செயல் திட்ட வரைவின் மூலம் மலேசிய இந்தியர்களை, இந்நாட்டின் தேசியவளர்ச்சி நீரோட்டத்தில் இணைப்பதற்கான 6  அடிப்படை திட்டங்களை முன்மொழிந்திருக்கிறோம்.

1. இந்நாட்டில் வேலைகளை இழந்து ரப்பர்தோட்டங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சுமார்  எட்டு லட்சம்மலேசிய இந்தியர்களின் சோக வரலாற்றை பெரும்பாலோர்  அறிந்திருக்கவில்லை.அவர்களைப் பற்றி எவரும் அக்கறை கொள்வதுமில்லை. நம்முடைய சமூக அவலங்களுக்குஅடித்தளமாக அமைந்ததே இந்த 8 லட்சம் பேரின் சோக சரித்திரம்தான்.

* இவர்களுக்காக FELDA   திட்டத்தை போல சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலப் பரப்பில்ஏறக்குறைய 20,000 பேரை விவசாய மற்றும் ஆடு, மீன், இறால்,கோழி மற்றும்மாட்டுப் பால் உற்பத்தி போன்ற பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தஆண்டொன்றுக்கு சுமார் 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டும்.

* மேலும் தோட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்க உதவியுடன்  சுமார் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலானவீடுகளை, ஆலயங்கள், விளையாட்டு மைதான வசதிகள், சமூக மண்டபங்கள் , இடுகாடுசுடுகாடு  வசதிகள் போன்ற கட்டமைப்பான சூழலில்  புற நகர் மற்றும் கிராமப்புறங்களில் நிறுவுவதற்கு ஆண்டொன்றுக்கு சுமார் 1 பில்லியன் ரிங்கிட்செலவிடப் பட வேண்டும்.

* இவர்களின் செயல் திறனை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  நாட்டில்உள்ள 78 கம்யுனிட்டி கல்லூரிகள்  மற்றும் 176 கியாட் மாரா கல்லூரிகளில் 10,000 இடங்களை ஒதுக்கி நம் இந்திய இளைஞர்களுக்கு  தொழில் பயிற்சிகளை கற்றுத்தர வேண்டும் .பயிற்சிகளுக்கு  பின்னர்  அவர்கள்  செயலாக்கத்தை  துரித  படுத்தும்  வகையில்  வேலை   மற்றும்  சிறு  வர்த்தக  வாய்ப்புகளை  ஏற்படுத்தி  தர  வேண்டும்  . அந்த  இளைஞர்கள்   வெற்றி  பெரும்  வகையில்  இறுதி  வரை  அவர்களுக்கு  தேவையான  அணைத்து  உதவிகள் , வழிகாட்டல்கள் , ஆலோசனைகளை  வழங்கி  இந்த  முயற்சியை  வெற்றியடைய செய்ய  ஆண்டொன்றுக்குசுமார் 200 மில்லியன் வழங்க   வேண்டும்

* மேலுமொரு சோகம் என்னவென்றால் சுமார் 100  , 150 , 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து ஆலயங்களும் இடுகாடுகளும்  தோட்ட நிலங்களிலேயே இன்னும்இருகின்றன. தனியாரால் வாங்கப்பட்ட இந்த தோட்ட நிலங்களில் இவை இருப்பதால்அவற்றை சட்ட விரோதம் என்று கூறி உடைத்து அப்புறப் படுத்தும் அபாயத்தைஆலயங்களும் இடுகாடுகளும் எதிர் நோக்கி இருகின்றன. நாடு முழுதுமுள்ள இந்தபழமை வாய்ந்த ஆலயங்கள் மற்றும் இடுகாடுகளுக்கு  மாநில அரசுகள் நிலத்தைஒதுக்கி தரவேண்டும் என்று ஹிண்ட்ராப் பரிந்துரைக்கிறது . 100 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த ஆலயங்களை புராதான சின்னமாக போற்றி பாதுகாக்க தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஆண்டுக்கு 400 மில்லியன் நிதி ஒதுக்கப் படவேண்டும்.

2. நம்முடையஇரண்டவாது மிகப் பெரிய பிரச்னை இந்நாட்டில் வாழும் சுமார் 350000 மலேசிய இந்தியர்களுக்கு  முறையான அடையாளப் பத்திரம் இல்லாததாகும். இதுஉண்மையிலேயே அரசாங்க அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கூறுவதை போன்று சிக்கல்கள் நிறைந்த பிரச்னை அல்ல . இது முற்றிலும் ஒரு அரசியல்விவகாரமாகும். இந்த பாதிப்பிற்கு ஆளாகிஇருப்போர் அனைவரும் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து இங்கேயே மடியவம் போகிறார்கள்.அவர்களின் பெற்றோரும் பாட்டனார்களும்அநேகமாக இங்கேயே பிறந்து வளர்ந்து மடிந்திருப்பார்கள்.

இந்தபிரச்சனையை களைவதற்கு ஹிண்ட்ராப் சுலபமான எளிமையான நடைமுறைகளின் மூலம்பாதிக்கப்பட்டோருக்கு  முறையான அடையாள பத்திரங்களை வழங்கபரிந்துரைகளை முன்வைக்கிறது.

indians* சிவப்பு நிற அடையாள அட்டை வைத்திருப்போர் நிரந்தர வாசிகள் என்று பொருள்படும். அதாவது இவர்கள் வேறு ஒரு நாட்டின் பிரஜைகளாக இருந்து மலேசியாவில் நிரந்தரமாக வசிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அவர்களை அப்படி அழைக்கலாம். ஆனால் இந்த நாட்டிலேயே 4ஆவது , 5ஆவது  தலைமுறையினரை அப்படிஅழைப்பது வேடிக்கையான ஒன்றாகும். காரணம் அவர்களுக்கு தாய் நாடு என்று வேறுஒரு நாடு கிடையாது. அவர்கள் மலேசியர்கள். எனவே அவர்களுக்கு அடுத்த தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீல நிற அடையாள அட்டைகள் வழங்கப் பட வேண்டும்.

* அடுத்து முறையான பிறப்பு பத்திரமோ அடையாள அட்டைகளோஇல்லாதவர்கள்   நன்கு அறிமுகமான இருவர் அவர்களின் பிறப்பையும் அவர்களின்பெற்றோர்களையும் பற்றியும்   சத்திய பிரமாணம் மூலம் உறுதி படுத்தியபட்சத்தில் அடையாள பத்திரம் வழங்கப்பட வேண்டும். இந்த சுலபமான நடைமுறையால்இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு அமையும் .

3. மலேசிய இந்தியர்களின் மூன்றாவது மிகப் பெரிய பிரச்னை அவர்களின்குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி வாய்ப்புகளாகும். ஆரம்ப கல்வி கூடங்கள்மிகவும் பரிதாபமான நிலையில் இருகின்றன. சில பள்ளிக்கூடங்கள் இடிந்துவிழும் அபாயத்தில் இருகின்றன. இந்த பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்  நிதியோவெகு சொற்பம்.இதனால் அந்த பள்ளிகள் சரிவர இயங்கி தேசிய தரத்திலான அடைவுநிலையை எட்ட முடியாமல் நிலை குத்தி நிற்கின்றன.

ஆரம்ப  பள்ளிகளுக்கு செல்லும் 50 விழுக்காட்டு இந்திய மானவர்கள இத்தகைய பள்ளிகூடங்களில்தான் பயில்கிறார்கள். ஆண்டு தோறும் கல்விக்காகஒதுகாப்டும் மிகப் பெரிய தொகையான  50 பில்லியன் ரிங்கிட்டில் தமிழ்பள்ளிகளின் மேம்பாடிற்கு  வெகு வெகு சொற்பமானதொகையே வழங்கபடுவதாகஅறிவிப்புகள்  வருகின்றன.

ஆண்டுதோறும் 30  விழுக்காட்டு இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வு எழுதுவதற்கு முன்னேரே பள்ளிகளுக்கு செல்வதை நிறுத்தி கொள்கின்றனர். எஞ்சிய 70 விழுக்காட்டு மாணவர்களில் 50 விழுக்காட்டினரே எஸ்.பி.எம் தேர்வில்தேர்ச்சி பெறுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.  மாணவர்களின் அடிப்படை கல்வி வலுவாக அமைந்தால் இத்தகைய மோசமான முடிவுகளை நம்மாணவர்கள் பெறமாட்டார்கள்.

* எனவே கல்வி தொடர்பான ஹிண்ட்ராபின் முதல் பரிந்துரை, நாட்டில் உள்ளஅணைத்து தமிழ் பள்ளிக் கூடங்களும் அரசாங்க முழு உதவி பெரும் பள்ளிகளாகபிரகடனப் படுத்தப் பட்டு,  நிர்ணயக்கப்பட்டுள்ள தேசிய பள்ளிகூட  கட்டுமானதரத்திற்கு ஏற்ப புது வடிவம் பெற  வேண்டும் என்பதாகும்.இந்த நோக்கத்திற்காகஆண்டொன்றுக்கு சுமார் 850 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டும்.

* தமிழ் பள்ளிக்கூடங்கள்   அமைந்திருக்கும் இடங்கள் அதிகமான இந்தியர்கள் வாழும் பகுதிகளில் அமையவேண்டும். பட்டதாரி மற்றும் பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்ற மொழி பள்ளிகளுக்கு இணையாக இருக்கவேண்டும்.

* தமிழ் பள்ளி மாணவர்களின் அடைவு நிலைகளை உயர்த்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை உடனடியாக அமல் படுத்த வேண்டும். இந்த நோக்கத்திற்காக ஆண்டுக்கு 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப் படவேண்டும்.

tamil_school_students* நம்மாணவர்களின் கல்வி தேர்ச்சியை உறுதி படுத்த வேண்டிய மற்றுமொரு திட்டம் UPSR தேர்வில் சிறப்பு தேர்வடையும் மாணவர்களை  MRSM கல்லூரிகளிலோ அல்லது அதற்க்கு இணையான கல்லூரிகளிலோ சேர்த்து கொள்வதாகும். இதற்க்கு முன்னர்மறுக்கப்பட்ட இத்தகைய வாய்ப்புகள் இனிமேல் நம் மாணவர்களுக்கு வழங்கப் படவேண்டும். குறைத்து 10  விழுக்காட்டு இடங்கள் மாணவர்கள் தங்கி பயிலும் பள்ளிகளில் நம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் அல்லது இந்தியமாணவர்களுக்காக பிரத்தியேகமான தங்கும் வசதிகள் கொண்ட பள்ளிகள் இந்தியர்கள்அதிகம் வசிக்கும் மாநிலங்களில்  நிர்மாணிக்கப் பட வேண்டும். இந்தநோக்கத்திற்காக ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படவேண்டும்.

* நம் நாட்டில் 20 அரசாங்க பல்கலைகழகங்கள் மற்றும் 78 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்வி கூடங்களில் தகுதி பெற்றிருந்தும் இந்தியமாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் இதுநாள் வரையில்  நம் உரிமைகளை மறுக்கப்பட்டிருகிறது. தற்சமயம் இந்த கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களின்எண்ணிக்கை வெறும் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு மட்டுமே.

* இந்த பிரச்சனைக்கு தீர்வாக அனைத்து புகுமுக பாடத்திட்டங்களை வழங்கும்மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பல்கலைகழகங்கள்அனைத்திலும் தகுதி அடிப்படையில் அணைத்து துறைகளிலும் இன மத பேதம்பார்க்காமல் மாணவர்களை சேர்க்க வேண்டும் அல்லது இந்திய சமூகத்தின்விழுக்காட்டிற்கு  ஏற்ப கோட்டா முறையை அரசு அமல் படுத்த வேண்டும் என்று உறுதியாக பரிந்துரைக்கின்றோம்.

* மேலும் இந்திய மாணவர்கள்  உயர் கல்வி பெறுவதற்கு பிரத்தியேக உபகரசம்பள திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஆண்டுக்கு 100 மில்லியன்இத்திட்டத்திற்கு ஒதுக்குவதன் வழி ஆண்டொன்றுக்கு சுமார் 200 இந்திய மாணவர்கள் வெளி நாட்டில் கல்வி பயில வழி வகுக்கப்படவேண்டும்.

* PTPTN  கடனுதவி திட்டம் இந்திய மாணவர்கள் உள்நாட்டு  மற்றும்வெளி நாடு பல்கலைகழகங்களில்     கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக  வழங்கப் படவேண்டும் எப்போது பாலர் பள்ளி முதல் பல்கலைகழகம் வரைக்குமான கல்வி பயணம் சுமூகமாக அமைகிறதோ அப்போதுதான் சமுதாய வளர்ச்சிக்கான வாய்ப்புகள்தடையின்றி கிடைக்கும். இந்த வாய்ப்புகள் இத்தனை ஆண்டுகள மறுக்கப்பட்டதின்  விளைவு நம் சமுதாயம் ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு பின் தள்ளப்பட்டதற்கான மிகமுக்கிய காரணிகளில்  ஒன்றாகும்.எனவே  உயர் கல்விக் கூடங்களில்  இந்தியமாணவர்களின் முறையான மற்றும்  வெளிப்படையான  சேர்க்கையில்  பேரம்பேசுவதற்கு ஏதும் இல்லை. இது கட்டாயமாக அமல் படுத்தப் பட வேண்டியஒன்றாகும்.

4. மலேசிய இந்தியர்களின் நான்காவது பெரிய பிரச்னை அரசாங்க மற்றும் அரசுதொடர்பு நிறுவனங்களில் வேலை வாய்புகள் மறுக்கப்படுவதாகும்.

* அணைத்துநிலை அரசாங்க மற்றும் அரசு தொடர்பு நிறுவனங்களில்  குறைந்தது 10 விழுக்காடுஇந்தியர்கள் பணியமர்த்தம் செய்யப் பட வேண்டும் என்பது ஹிண்ட்ராப்முன்வைக்கும் பரிந்துரையாகும்.

* வியாபார வாய்ப்புகளை பொறுத்த மட்டில் அரசு சரிநிகரான பல்வேறு வணிக  பெர்மிட்டுகளையும் , லைசென்சுகளையும் இந்தியர்களுக்கு வழங்க வேண்டும்.பாரபட்சமான போக்கை கடைப்பிடித்து வந்துள்ளதால் இப்படிப் பட்ட வாய்புகள்நமக்கு மறுக்கப்பட்டு வந்தன. இந்நிலை தொடரக்கூடாது. அணைத்து தொழில் முனைவர் திட்டங்களிலும் இந்தியர்களுக்கு முறையான பங்களிப்பை ஒதுக்கவேண்டும். தெக்கூன் திட்டம் இந்தியர்களுக்கு மேலும் விரிவாக சென்றடைய வேண்டும் அல்லது பிரத்தியேக தெக்கூன் போன்ற திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களுக்கு அறிமுகபடுத்தப் படவேண்டும்.

1polis 3 mother5. போலீஸ் காவலில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் திடீர் திடீர் என்று இறப்பது உடனடியாக நிறுத்தப் படவேண்டும். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப் படுபவர்களை நீதியின் முன் நிறுத்தி குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளிக்கும் பட்சத்தில் தண்டனைகளை நிறைவேற்றுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இந்த உலகில் மனிதராய் பிறந்த ஒருவரின் உயிரை பறிக்கும்உரிமை நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது என்பதை  நாம் புரிந்து கொள்ள  வேண்டும். குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது எங்களின் நோக்கமல்ல , மாறாக  எந்த குற்றமும் புரியாத ஒரு நபரை சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமேமையமாக வைத்து கைது செய்யும் போது அந்த நிரபராதிக்கு மரணம்ஏற்ப்பட்டுவிட்டால் அது நம் நாட்டின் நீதி பரிபாலனத்திற்கு நீங்காகளங்கத்தை ஏற்படுத்துவதோடு அந்த நபரின் குடும்பத்தார் அனுபவிக்க போகும்சிரமங்களையும் நாம் சீர் தூக்கி பார்க்க வேண்டும். இந்த காரணங்களுக்காக போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணிக்க சுயேட்சையான ஆணையம் உருவாக்கப் பட்டு போலீசாரின் அத்து மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஹிண்ட்ராபின்ஐந்தாவது பரிந்துரையாகும்.

6. மலேசியாவில் ஆட்சி முறைக்குட்படுத்தப்பட்ட இன ரீதியிலான கொள்கைகளால், அடிப்படை மனித உரிமைகள் மீறப் படுவது நியாயப் படுத்தப் படுகிறது. இன்றைய 21 ஆம் நூற்றாண்டிற்கு இத்தகைய கொள்கைகள் ஒத்துவராது. ஒரு நாட்டில் இருதரத்திலான குடிமக்களை கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளகூடிய ஒன்றல்ல. சுபிட்சமான , அமைதியான , மகிழ்ச்சியான நாட்டை இதுபோன்ற அமலாக்கங்களினால் எட்டமுடியாது. எனவே அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப நம்முடையசட்டங்களும் மனித உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றப்பட வேண்டும் என்பதுஹிண்ட்ராப் முன்வைக்கும் ஆறாவது பரிந்துரையாகும்.

கையெழுதிட்ட எழுத்துபூர்வமான உறுதிமொழியின் அவசியம் என்ன ?

இந்த பரிந்துரைகள், நம் தாய்நாட்டின் இறையாண்மைக்கு களங்கத்தைஏற்ப்படுத்தாது, மாட்சிமை தங்கிய பேரரசருக்கு எதிரானது  அல்ல, நம்  அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை, மலாய் முஸ்லிம் சமூகத்தினருக்குஎதிர்ப்பானது அல்ல,நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலை விளைவிக்காது, யாரையும்புண்படுத்தாது. அதே சமயத்தில் மலேசிய திருநாட்டின் வளர்ச்சிக்கும் , மான்மைக்கும் மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதை யாராலும் மறுக்கவும்  முடியாது.

இத்தகைய பண்புகளை உள்ளடக்கிய ஹிண்ட்ராபின் இச்செயல்  திட்ட வரைவை,  அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சியமைக்கப் போகும் அரசியல் கூட்டணி  நிறைவேற்றும் என  எழுத்து மூலமாக , கையெழுத்திட்டு உறுதி அளிக்க வேண்டும்என்பது 13 ஆவது பொதுத்தேர்தலின் போது  மலேசிய இந்திய வாக்காளர்களின் ஒட்டுமொத்த உரிமை குரலாய் ஒலிக்க வேண்டும்.

Hindraf meeting with Anwarகையெழுத்திட்டு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்ற ஹிண்ட்ராபின் கோரிக்கையை ஒரு சிலர் விமர்சிக்கலாம். ஆனால் வெறும் வெற்று வாக்குறுதிகள் இந்திய சமுதாயத்திற்கு புளித்து விட்டது. 55 ஆண்டுகளுக்கு பின்னரும்  நம்சமுதாயம்  ஏமார்ந்துவிடக் கூடாது என்பதில் ஹிண்ட்ராப் மிக மிக கவனமாகஇருப்பதே இதற்க்கு காரணமாகும். வாக்குகளுக்காக அரசியல் தலைவர்கள் எதனையும்உதட்டளவில் ஒப்புகொள்ள   தயங்க மாட்டார்கள் என்பதை விமர்சகர்கள்கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

1999 ஆம் ஆண்டு  மலேசிய சீன சமூகத்தின் தேவைகளை 17 கோரிக்கைகளாக  சூட்ச்யு (SUQIU ) என்ற இயக்கம் முன்னாள் பிரதமர் டாக்டர் மாஹதீரிடம் முன்வைத்தார்கள். இந்த கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே பாரிசான் நேசனல் கூட்டணிக்கு ஆதரவு என்று தெரிவித்தார்கள். மகாதீரும்  ஒப்புதல் அளிப்பதாக  கூறினார். தேர்தலில் பாரிசான் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சூட்ச்யு  கோரிக்கைகள் கண்டு கொள்ளப் படவில்லை. இது குறித்துமகாதீரிடம் வினவப்பட்ட போது , அவர் கூறிய பதில் எங்களுக்கு அப்போது ஓட்டுகள்  தேவைப்பட்டன.. அதனால் ஒப்புகொண்டோம்…” என்ற பதில்தான்.  இப்படி ஒரு நிலை நமக்கு பின்னர் நேர்ந்து விடக்கூடாதுஎன்பதற்க்காகத்தான் எழுத்துபூர்வமான உறுதிமொழியை நாம் கேட்கிறோம். வரலாறு நமக்கு உபதேசிக்கும் பாடங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிரமீண்டும் மீண்டும் ஏமாளிகளாக இருக்ககூடாது.

செயல்திட்ட அமலாக்கத்திற்கு எதிரான  சவால்கள்

ஹிண்ட்ராபின் இந்த உறுதியான நிலைப்பாட்டை சிலர் அரசியல் கட்சிகளுக்குநெருக்குதல் கொடுக்ககூடாது எனவும் மலிவு ஆலோசனை  செய்கிறார்கள். இதனை நெருக்குதலாக ஏன் கருதவேண்டும்? இந்தியர்களின் வாக்கு முக்கியம் என்றுநினைப்பவர்கள், இந்தியர்களின் வாக்குகள் புத்திரா ஜெயாவை கைபெற்ற நிச்சயம்தேவை என கருதும் அரசியல் கூட்டணிகள், பதிலுக்கு இந்த நியாமான பரிந்துரைகளுக்கு எழுத்து மூலம் உத்திரவாதம் கொடுக்க ஏன் தயக்கம் காட்டவேண்டும்? மனதில் வஞ்சம் இருந்தால்தானே தயக்கம் தோன்றும். அத்தகைய வஞ்சத்திற்கு மீண்டும் நம் இந்திய சமூகம் பலியாவதை நாம் வெறுமனே வேடிக்கைபார்ப்பதா?

அடுத்து ஹிண்ட்ராப் பரிந்துரைகள் நிறைவேற நமக்கு ஆண்டுக்கு சுமார் 4.5 பில்லியன் ரிங்கிட் தேவைபடுகிறது. மேலோட்டமாக பார்த்தால்  இது மிகப்   பெரிய   தொகையாக தோன்றலாம். ஆனால் அறிவுபூர்வமாக நோக்கினால் இது ஒன்றும்பெரிய தொகை கிடையாது. 2013 ஆம் ஆண்டிற்கான மலேசிய வரவு செலவு திட்டத்தில் 250 பில்லியன் ரிங்கிட்  ஒதுக்கப்படிருகிறது. ஒட்டு மொத்த இந்தியசமூகத்தின் முன்னேற்றத்திற்கு முதலீடு செய்ய  நாம்  கேட்பதோ வெறும் 4.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே. மொத்த பட்ஜெட்டில் இது 2 விழுக்காட்டிற்கும்குறைவே.

மேலும் நம் சமுதாயம் இந்நாட்டிற்கு செய்த அரப்பணிப்புகளோடு  ஒப்பிட்டுபார்த்தல் இது ஒன்றும் அவ்வளவு பெரிய தொகை கிடையாது. அதைப் போலவே நாம்பரிந்துரை செய்திருக்கும் திட்டங்கள் பலனளிக்க துவங்கியதும் கிடைக்கப்போகும் தொகை இதைவிட பெரிய அளவில்தான் இருக்கும் என்று நாங்கள் நிச்சயமாகநம்புகிறோம். பலன் என்று நாம் கூறுவது  ஆயிரகணக்கான இந்திய இளைஞர்கள்தொழில் திறமை பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றவிருக்கும் சீரிய பொருளாதாரபங்களிப்பையும் , குற்ற செயல்களில்  ஈடுபடாமல் இருக்கப் போவதையும்இந்நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத தேச பற்றையும்சேர்த்துதான் சொல்கிறோம்.

கவனக்குறைவான அணுகுமுறைகள் நாம் முன்மொழியும் செயல் திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதில் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். இப்படி எத்தனையோ திட்டங்கள்செயலிழந்து போயிருக்கின்றன. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மீண்டும்நாம் ஏமாறாமல் இருக்க ஹிண்ட்ராப் பரிந்துரைத்திருக்கும் செயல் திட்டங்களை அமல் படுத்துவதற்காகவே தன்னாளுமை  படைத்த புதிய சிறுபான்மை மக்கள் நல அமைச்சுஏற்ப்படுத்தப் படவேண்டும்.

சிறுபான்மை அரசின் அவசியம் என்ன ?

malaysian-indiansசிலர் சிறுபான்மை அமைச்சின் நோக்கத்தை தவறாக புரிந்துகொண்டு பொருந்தாத ஆலோசனைகளை தெரிவிக்க துவங்கி விட்டனர்.

இன்றைய நடைமுறைகளை பார்க்கும் போது இந்தியர்களின் பிரச்சனைகள் என்று வரும்போது அவற்றுக்கான  தீர்வுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஏற்பதில்லை. தமிழ் பள்ளிகள், உயர் கல்வி, வீட்டுடைமை, ஆலயங்கள் , வியாபார வாய்புகள்  போன்ற எப்படிப்பட்ட பிரச்சனைகளையும்  சம்பந்தப்பட்ட அமைச்சுகள்   குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியிடமே திசை திருப்பி விடுகின்றன. பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண்பதில் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இருப்பதில்லை. எனவே பிரச்சனைகள் நாளுக்கு  நாள்  அதிகரித்துக்கொண்டே போகின்றன. மேலும் அவ்வப்போது ஒதுக்கப்படும் சிறி சிறு நிதிகளும் பல்வேறு இலாகாக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து பல கட்டங்களை தாண்டி வரும்போது மிகவும் மெலிந்து போய் விடுகின்றன. சில சமயங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகள் என்ன ஆயிற்று என்பதே தெரியாமல் போய் விடுகின்றன. இதற்க்கான காரணத்தை வாசகர்களே நன்கு அறிவார்கள். அதே சமயத்தில் பெரும்பாலும் மலாய் சமூகத்தினரை மையமாக கொண்ட மீனவர்களுக்கான நிதி, FELDA  போன்ற குடியமர்வு திட்டங்களுக்கான நிதி, கிராம மக்களுக்கான நிதி போன்றவை சம்பந்தப்பட்ட அமைசுகளின் மூலம் விரைவாகவும்  நேரிடையாகவும்  வழங்கப்பட்டு பலனளிப்பதையும்   நாம் காண முடிகிகிறது. எனவேதான் இந்தியர்களுக்காக நாம் வகுக்கும் திட்டங்கள் விரைவாகவும், நேரிடையாகவும் சென்றடைய அதிகாரம் பொருந்திய, தன்னாளுமை மிக்க சிறுபான்மை அமைச்சு இன்றியமையாததாகிறது.

சிறுபான்மை மக்கள் நல அமைச்சு என்று அழைக்கப்படும்  இந்த அமைச்சுக்கு ஹிண்ட்ராப் தலைமை ஏற்கும் . மக்கள் இயக்கப் பிரதி நிதியாக இருந்து ஹிண்ட்ராப் இந்த அமைச்சை முன்னின்று  வழி நடத்தும். வஞ்சிக்கப் பட்டசிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு ஆக்கரமாக செயல் படவே இந்த பொறுப்பைஹிண்ட்ராப்மேற்கொள்ளவிருக்கிறதே தவிர  யாருடைய சுயநல லாபத்திற்காகவும்  அல்ல.

இது  போன்ற  சீர்திருத்த முன்னேற்ற திட்டங்களை அமல் படுத்துவதற்கு விடாபிடியான மனோ பக்குவமும், எடுத்த காரியத்தில்  வெற்றியடைய வேண்டும் என்றவைராக்கியமும் நிறைய தேவை படும். மேற்கொண்ட சவால்களை முடிக்க நமக்குஅசாத்தியமான உறுதி தேவை படுகிறது. இந்த பண்புகளை  ஹிண்ட்ராப்   பெற்றிருப்பதாலேயே இந்த அமைச்சுக்கான தலைமை பொறுப்பை மேற்கொள்ள நாங்கள்முன் வருகிறோம்.

இந்த அமைச்சுக்கு ஹிண்ட்ராப் தலைமை ஏற்ப்பதையும் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் நடைமுறை உண்மை என்று ஒன்று இருக்கிறது. ஹிண்ட்ராபின் இந்தசெயல் திட்ட வரைவு பகிரங்கப்படுத்த்தப் பட்டு சுமார் 1 மாத காலம் ஆகப்போகிறது. இதுவரையில் எந்த அரசியல் வாதிகளும் இது குறித்து வாய்திறக்கவில்லை. அவர்களின் மௌனத்திற்கு  இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்றுஇந்த செயல் திட்ட வரைவில் குறை ஏதும் இல்லை என்பதால் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதாகும்.  மற்றது இந்த செயல் திட்ட வரைவைஅமல்படுத்துவதில் அவர்களுக்கு ஹிண்ட்ராப் கொண்டுள்ளதை போன்ற தீவிர  ஈடுபாடு இல்லாமலிருக்கலாம் . இப்படிப்பட்ட  நிலைபாடில்லாதவர்களிடம் இந்த மாபெரும் பொறுப்பை வழங்கி பின்னர் தேக்கம் காண்பதில் அர்த்தமில்லை. எனவேதான் இந்தசெயல் திட்டத்தை சிறுபான்மை  அமைச்சுக்கு தலைமை ஏற்று  அமலாக்கம் காண ஹிண்ட்ராப் அமைப்பு திடமாக உள்ளது.

ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்

indianமலேசிய இந்தியர்கள் சுமார் 150 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமும் , 55 ஆண்டுகளாக சுதந்திரத்திற்கு பின்னரும் அனுபவித்த இன்னல்களும் , துயரங்களும் நிச்சயமாக களையப்பட வேண்டும் என்ற மாசில்லாத , மறைமுகஎதிர்பார்ப்புகள் இல்லாத இந்த செயல் திட்ட வரைவை, என்னதான் நாங்கள் நியாபடுத்தினாலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 100 மலேசியஇந்தியர்கள் குறை சொல்லவே செய்வார்கள். இவர்கள் ஆளும் கட்சி மற்றும்எதிர்க்கட்சி  அரசியல் தலைவர்களும், அவர்களுக்கு கூஜா தூக்குபவர்களும்ஆவர். அரசியலை வயிற்று பிழைப்பாக கொண்ட இவர்களை பற்றி ஹிண்ட்ராப் கவலைபடுவதே கிடையாது. இந்த 100 பேரின் வட்டத்திற்கு வெளியே உண்மையான வாழ்வாதார முன்னேற்றத்தை விரும்பும் ஆயிரமாயிரம் மலேசிய இந்தியர்களின் அபரிமிதமானஆதரவு  என்றுமே ஹிண்ட்ராப் அமைப்புக்கு  துணை நிற்கும்.

அடுத்தஐந்து ஆண்டுகள் இந்நாட்டை ஆளப்போகும்  அரசாங்கம் ஹிண்ட்ராப்  உருவாக்கியஇந்த அடிப்படையான , அவசியமான செயல் திட்டத்தினை அமல் படுத்தி வெற்றி காணவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த செயல் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். ஹிண்ட்ராபின் இந்த அடிப்படையான , எளிதில் அமல் படுத்தக்கூடிய, நிரந்தர தீர்வை அளிக்ககூடிய செயல் திட்ட பரிந்துரைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து எழுத்து மூலம் உத்திரவாதம் அளிக்க முன்வராத அரசியல் கூட்டணிகள்  மீது நம்பிக்கை வைப்பதில்  பலனில்லை. மேலும் இவர்களால் இந்தியர்களுக்கு எத்தகைய மாற்றத்தையும் நிச்சயம் கொண்டு வருவதற்கு மனதார எண்ணம் இல்லை என்றே  நாம் அர்த்தம் கொள்ள வேண்டும்.

வெற்றி தோல்விகள் நமக்கு போதித்த பாடங்களின்அடிபடையிலும் , பொதுவாக மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பர்புகளையும் மையமாககொண்டு இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்து ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகள் வெற்றிகாணும் போது நாம் புதுமையான மலேசியாவை எதிர்கொள்வோம்.அற்புதமான துவக்கத்திற்கு  நாம் அனைவரும் அப்போது தயாராகிகொண்டிருப்போம்.

அந்த அற்ப்புதமான விடியலுக்கு ஹிண்ட்ராப்பரிந்துரை செய்திருக்கும் செயல் திட்ட வரைவே தீர்வாகும் . மலேசிய இந்தியர்கள் அனைவரும் பிளவுபடாத ஆதரவை வழங்கி நம் சந்ததியினரின் தன்மானத்தை காப்போமாக. நம் பரிந்துரைகளுக்கு கையெழுத்திட்டு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளிக்கும் அரசியல் கூட்டணிக்கு மட்டுமே நம் ஆதரவு என்பதில்திடமாய் இருந்து வெற்றியடைவோம்.

TAGS: