உரிமைக்கு முன் குரல் கொடுத்து கேள்விகளை கேட்டு நெறியாளரை நொறுக்கிய துணிச்சல் மிகு மாணவி பவானிக்கு விழா எடுக்க வேண்டும். பவானி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ஷரிபா, மேடையை விட்டு கீழ் இறங்கி ஒலி வாங்கியை பிடுங்கியது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல். இதனை மன்னிக்க முடியாது.
ஒரு சம தர்ம பொறுப்பில் கூட்டத்தை நடத்த வேண்டிய ஷரிபாவை விவேகமுடன் கேள்விகளை கேட்டு திணறடித்த பவானியைப்போல் நமது தமிழ் பெண்களும் முன்வரவேண்டும். பெர்சே அம்பிகா, பவானிபோல் நமது பல்கலைக்கழக மாண, மாணவிகளும் நமது உரிமைகளை காக்க வீறுகொண்டு எழ வேண்டும்.
இன்னதுதான் கருத்தரங்கு என்ற வரையரை தெரியாதவர்களையெல்லாம் மேடை ஏற்றியது பாரிசானுக்கு கேவளம்! மலேசியா கொள்கை, “உள்ளொன்று வைத்து உறவொன்று பேசி கள்ளொன்று மாந்திக் கனிச்சாற்று – கொள்ளென்று பீற்றும் உறவரைப் பின் தொடர்ந்தென்ன பயன் கூற்றும் உறவெனக் கொண்டு” என்ற முதுமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
இதுதான் பாரிசான் ஏஜன்டுகள் செய்யும் அவசரக் கால தேர்தல் தொல்லைகள். கடந்த தேர்தலின்போது கூட தவறான ஊடக பிதற்றல்களால் பாரிசான் அடிவாங்கியது. அதே நிலைதான் வரும் 13-வது பொது தேர்தலில் ஏற்படப்போகிறது.
தமிழர்களே… இந்நாட்டு மக்களின் இலவசக் கல்விக்காக குரல் கொடுத்த பவானிக்கு அரண் காத்து தோழ் கொடுப்போம் வாரீர். கடல் சுறாவும், ஆமையும் தமிழன் கடல் சார் வாழ்வின் தொன்மை என்பது தெரியாமல் பேசிய இனவாத அம்னோவினால் ஏவப்பட்ட ஷரிபா போன்றோர்களை வளர விடாமல் தடுப்போம்.
பொன் ரெங்கன், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், மலேசியா
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272