சுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் வெகுவாக பயனடைவர் என்கிறது இவர்களது பட்ஜெட்.
மக்கள் கூட்டணியின் சுபிட்சத்தை வழங்கும் வரவு செலவு திட்டம் 2012 எதிர்கால ஒற்றுமையான மலேசியாவை உருவாக்கும் திட்டத்தின் பாற்ப்பட்டதாகும். இது ஏற்கெனவே கூட்டணியால் டிசம்பர் 2009 பொதுநோக்கம் மற்றும் 2010-ன் செம்மஞ்சள் புத்தகம் ஆகியவையின் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
அனைவருக்குமான சுபிட்சம் திறமான அரசியல் மாற்றங்களினால் மட்டுமே சாத்தியம். மலேசியாவில் இருக்கும் பன்முகத்தன்மை நமது வலிமையாகும். ஆகையால் பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் பால், இனம், மதம் ஆகியற்றுக்கு அப்பாற்பட்டு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆகையால் பெண்களுக்கு உதவவும், பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களுக்கு சாதகமான வரவு செலவு திட்டம் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆகையால் சுபிட்சத்தை வழங்கும் வரவு செலவு திட்டம் 2012 பெருகி வரும் விலைவாசியை எளிய மக்கள் சமாளிக்க உதவும் வகையில் இருக்க வேண்டும். ஆகையால் நாட்டின் பொருளாதார வள்ர்ச்சி அனைவருக்கும் சேரும் வகையிலும் மலேசியாவில் ரி.ம 3000-க்கும் குறைவாக சம்பளம் பெரும் 60% மக்களின் வருமானம் பெருகும் வகையிலும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
குறைந்த பட்ச சம்பளத் திட்டம், திறன் குறைந்த வெளிநாட்டு தொழிலாளர்களை எண்ணிக்கையை குறைப்பது, உள்ளூர் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, முக்கியமாக பெண்களை திறன் வாய்ந்தவர்களாக உருமாற்றுவது போன்றவை முக்கிய நடவடிக்கைகளாக எடுக்கப்படும்.
பொது துறை வசதிகள், பொது வீடமைப்பு திட்டங்கள், சுகாதார வசதிகள் போன்றவை அதிகரிக்கப்பதோடு பயன் தரும் மக்களின் வருமானமும் அதிகரிக்கப்படும்.இவ்வருமானம் அதிகரிப்பதால் உள்நாட்டு பொருளாதாரம் நிலையாக இருப்பதோடு தற்போது நிலவும் உலகலாவிய பொருளாதார மந்தத்திலிருந்தும் நாட்டை காக்கலாம்.
ஏற்கெனவே உள்ள பொருளாதார ஆதிக்கங்களை அகற்றி மலேசிய வணிகர்கள் பயனடையும் வழிமுறைகளும் வணிகம் செய்வதற்கான செலவுகளும் குறைக்கப்படும். இதனால் பணவீக்கம் குறையும்.
வளமான நாடு, ஏழை மக்கள் ?
மலேசியா வளமான நாடாகும். துரதிர்ஷ்டவசமாக அவ்வளம் முறையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை.அவை சில மேல்தட்டு மனிதர்கள் மட்டுமே மாபெரும் பணக்காரர்களாக இருக்க உதவியுள்ளது.
தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வாழ்க்கை செலவுகளும் மக்களின் வருமானத்தில் பிரதிபலிக்கவில்லை. நாட்டின் 40% ரி.ம 1500-க்கு குறைவான சம்பளமும் இன்னும் 40% ரி.ம 3500-க்கு குறைவான சம்பளமும் பெறுகின்றனர். ஆகவே 80% மலேசியர்கள் தங்கள் குடும்ப செலவுகளுக்கு சராசரியாக ரி.ம 2500 மட்டுமே ஈட்டுகின்றனர்.
அடுத்ததாக மலேசியாவில் இத்தனை புறவளர்ச்சிக்குப் பிறகும் 70% மக்கள் SPM தகுதியை மட்டுமே பெற்றிருக்கின்றனர். நாட்டின் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அங்காடி கடைகள், சுயவேலை, கூலி வேலை, மட்டுமே செய்கின்றனர். ஆகையால் நாட்டின் பணக்காரார் ஏழைகளுக்கான வித்தியாசம அதிகமாக இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. நாட்டின் 40% ஏழை மக்கள் நாட்டின் வளப்பத்தில் 15% அனுபவிக்கும்போது 20% பணக்காரர்கள் 49% வளத்தை அனுபவிக்கின்றனர்.
இப்படி சில பேர் மட்டுமே அனுபவிக்கும் பொருளாதார திட்டங்களைக் கொண்டுள்ள தேசிய முன்னணியின் பொருளாதார கொள்கைகளை காலத்தால் பின் தங்கியதாகும். இதனால் மலேசியா பொருளாதார மந்த நிலையை அடையும்.
மலேசியா மக்களின் பொருளாதார நிலை பின்வருமாறு:
i. நாட்டின் பெரும்பான்மை மக்கள் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாத நிலை.
ii. நாட்டின் படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கும்போது முதலாளிகள் சரியான திறன் வேலையாட்கள் இல்லை என குறைப்படும் நிலை.
iii. 10 மடங்கு வரை உயர்ந்துவிட்ட உதவி தொகையை தேசிய முன்னணி அரசு மீட்டுக் கொள்ளும் நிலை.
iv. உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளதும் மலேசிய மட்டுமே ASEAN நாடுகளில் இந்நிலையில் உள்ளது.
ஏற்கெனவே உலகம் பொருளாதார மந்த நிலையில் இருப்பதால் நம்முடைய இந்த சொந்த குறைகளும் அவைற்றை மேலும் மோசமாக்கியுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பாவினர்களின் முதலீடு குறைந்துள்ள சூழலில் மாற்று முதலீடுகளை அடையாளம் காண்பதே முறையாகும்.
சுபிட்சத்தை நோக்கிய வரவு செலவு திட்டம் 2012
இவ்வரவு செலவு திட்டம் நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்துவதோடு சிறந்த பொருளாதார கட்டுமானங்களைக் கொண்டு மக்களின் மானத்தை மீட்பதும் ஆகும். இவ்வரவு செலவு திட்டம் பெரும் திட்டங்களை கொண்டதல்ல, தங்களின் பினாமிகளுக்கு சாதகமானதல்ல. மாறாக முறையான வணிகத்தையும், உற்பத்தியையும், வேலை திறனையும் முன்னெடுப்பதே ஆகும்.
முறையான செலவு திட்டங்கள்
மக்கள் கூட்டணி 2012 வரவு செலவு திட்டத்திற்கு ரி.ம 220 பில்லியனை ஒதுக்கியுள்ளது. அவை சிறந்த முறையிலும் பொறுப்புடனும் சிறப்பான வகையிலும் நிர்வகிக்கப்படும்.பற்றாகுறை 2011-ன் 6%-லிருந்து 4.4%-க்கு KDNK-லிருந்து குறைக்கப்படும். இதனால் மக்கள் பணத்தில் ரி.ம 14 பில்லியனை சேமிக்கலாம்.
நாட்டின் வருமானம் மக்களை பாதிப்ப்புறாமலேயே செய்யலாம். அரசின் பெர்மிட்டுகள் முறையாக விநியோகிக்கப்பட்டாலே வருமான உயரும். எடுத்துக்காட்டாக AP-ஐ உயந்த மதிப்பில் கேட்பவர்களுக்கு கொடுத்தாலே ரி.ம 1.2 பில்லியன் கூடுதல் வருமானம் கிடைக்கும். முறையான திட்டங்களினால் விரயத்தை தவிர்த்து திட்டமிட்டாலே ஒவ்வொரு ரி.ம 1-க்கும் 20% கூடுதலான மதிப்பை மக்கள் பெறலாம.
உதாரணமாக, மக்கள் கூட்டணி ரி.ம. 4..4 பில்லியனை பின்வருவற்றுக்கு ஒதுக்குகிறது :
i. செம்மஞ்சள் புத்தகம் (Buku Jingga) சொல்லப்பட்டது போல நாட்டின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்வியாளர்களுக்கு மாதம் ரி.ம 500 வழங்கப்படும்.
ii. நாட்டின் கடைநிலை அரசு ஊழியர்களுக்கு குறைந்தப்பட்ச சம்பளமாக ரி.ம 1000 வழங்கப்படும். இதனால் கிட்டதட்ட 300000 பேர்கள் பயனடைவர்.
இருப்பினும் பெட்ரோனாஸ் தொடர்ந்து உலக அரங்கில் போட்டி தன்மையோடு இருக்க அதன் வளத்தை ஒரு வரையறையில்லாமல் சுரண்டுவதை நிறுத்த வேண்டும். நாம் அதன் பணத்தில் லாப பங்காக ரி.ம 26 பில்லியனே எடுக்கப்படும். இது தேசிய முன்னணி 2011 பெற்ற ரி.ம 30 பில்லியனை விட குறைவானதே ஆகும்.
வருமானத்தை அதிகரித்தல்
மக்கள் கூட்டணி குடும்ப வருமானத்தையும் தொழில் திறன் மேம்பாட்டையும் அதிகரிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது. மலேசிய தொழிலாளர்களின் சம்பளம் குறைவானதாகும். 40% ரி.ம 1500 குறைவாக பெறுவதால் :
i. வெளிநாட்டு தொழிலாளர்களை குறைவான சம்பளத்திற்கு எதிர்பார்க்கும் நிலை உள்ளது.
ii. திறன் வாய்ந்த தொழிலாளர்கள் குறைந்த நிலை.
iii. தனியார் நிறுவனங்களில் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை
மக்கள் கூட்டணி சம்பள நிர்யணம் உற்பத்தி ஆற்றலை முன்னிட்டே உள்ளதை ஏற்றாலும் தற்போதைய தொழிலாளர் சந்தையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலும் கருத்துக் கொண்டுள்ளது.
ஆகவே மக்கள் கூட்டணி :
i. கடைநிலை ஊழியர்கள் தங்களின் அடிப்படை செலவீனங்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை உறுதி செய்தல்.
ii. சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவும் வகையில் ரி.ம 2 பில்லியன் ஒதுக்கீடு.
iii. தொழீல் திறன் கொண்ட தொழிலாளர்களை அதிகரிக்க தொழில்திறன் கல்விகளுக்கு கூடுதலாக ரி.ம 1.6 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.
iv. மேலும் 10,000 ஆசிரியர்கள் ப்யிற்றுவிக்கப்படுவதோடு சீன, தமிழ், ஆங்கிலம், சமய ஆசிரியர் பற்றாக்குறையைத் தவிர்க்க ரி.ம 200 மில்லியன் ஒதுக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ரி.ம 200 மில்லியன் சீன, தமிழ், சமயப்பள்ளிகளின் கட்டட வசதிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
மேலாதிக்கத்தை ஒழித்தல்
மக்கள் கூட்டணி பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்து மக்களின் வாழ்க்கை செலவீனங்களைக் குறைப்பதோடு சிறு மற்றும் மற்றும் நடுத்தர வணிகர்களின் முதலீட்டையும் அதிகரிக்க உதவும். அது திறந்த ஒப்ப்ந்தங்களின் மூலம் திறமையானவர்களுக்கு வழங்குமே தவிர பினாமிகளுக்கும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கும் வழங்காது. இவை தொடர்ச்சியாக மலாய்/பூமிபுத்ரா மற்றும் மற்றவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் தொடரும். இவ்வுதவி திட்டங்கள் புதிய மலாய்/பூமிபுத்ரா வணிகர்களையும் மற்ற குழுவினரையும்கல்வி, பயிற்சி மற்றும் பண உதவிகள் மூலம் உருவாக்கும் திட்டமும் உள்ளது.
பொது நீதிக்கு எதிரான ஒப்பந்தம் சட்டம் இயற்றப்பட்டு அரசின் ஒப்பந்தங்கள் அநீதியாக வழங்கப்படுவது அடையாளம் காணப்பட்டு நிறுத்தப்படும்.
மக்கள் கூட்டணி மேலும் அரசு ஊழியர்கள் மீண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவான பணிகளை ஏற்க செய்யவும் மக்களுக்கு தங்கள் பட்டம் பதவியை தாண்டி பணியாற்றுவதையும் உறுதி செய்யும்.
அரசுடன் இணைப்புள்ள நிறுவனங்கள் அரசியல் பிடியிலிருந்து விலக்கி வணிகத்தை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும். எதிர்காலத்தில் மக்கள் கூட்டணி சிறந்த அரசுடன் இணைப்புள்ள நிறுவனங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தும். சிறப்பாக செயல்படும் நிறுனங்கள் மட்டுமே தொடர்ந்து இருக்கவும் அனுமதிக்கப்படும்.
2010 போட்டி சட்டம் மற்ற பொருளாதார பிரிவுகளான தொலைதொடர்பு, கட்டணத் தொலைகாட்சி, மற்றும் மேலாதிக்கத்தால் அதிகம் நலிவடைந்த ஆற்றல் பிரிவுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
பின்வரும் மேலாதிக்கங்கள் நாட்டின் மக்களின் வருமானத்தையும் வணிக செலவீனங்களை அதிகரிக்கவும் செய்தன :
i. BERNAS-ன் அரிசி இறக்குமதியை நிறுத்துதல். மாறாக இந்த இறக்குமதி உரிமம் முறையான திறந்த முறையில் மற்றவர்களுக்குத் தரப்படும்.
ii. டெலிகோம் மலேசியா (TM) தன் இணைய அகண்ட அலைவரிசை சேவையில் மற்ற சேவையாளர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் அதன் செலவீனங்களைக் குறைத்து சேவையை மேலும் சீரிய வழியில் கொண்டுச் செல்லலாம்.
iii. தொலைதொடர்பு நிறுவனங்களின் வரியை அகற்றுதல்
iv. செய்திதாள் மற்றும் ஊடகங்களின் வரியை அகற்றுதல்
v. அஸ்டோரோவின் மற்ற கட்டண ஒலிபரப்பு சேவைக்கான மேலாதிக்கம் அகற்றப்படும்.
vi. வாடகை வண்டிக்கான உரிமம் நேரடியாக வாடகை வண்டி ஓட்டுனர்களுக்கே வழங்கப்படும்.
சிரம திசையில் கைக் கொடுத்தல்
மக்கள் கூட்டணி விலைவாசி ஏற்றத்தால் நலிவுறும் மக்களின் வேதனையை உணர்ந்து தெளிந்தும் உள்ளது. அதை சீர்ப்படுத்தும் நடு மற்றும் நீண்ட தூர திட்டங்களை கொண்டிருக்கும் அதே நேரத்தில் தற்போதைய மக்களின் வேதனையையும் துடைக்கும் கடமையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
அதன் தொடர்ச்சியாக அதை செயல்படுத்தும் முயற்சிகளாக பின்வருபவை :
i. ரி.ம.1.7 பில்லியன் ஒதுக்கீட்டில் 60 வயதிற்கும் மேற்பட்ட (ரி.ம 18,000 குறைவான வருமான உள்ளவர்கள்) வருடத்திற்கு ரி.ம 1000 வழங்கப்படும்.
ii. ரி.ம 2 பில்லியன் ஒதுக்கீட்டில் குடும்ப மாதர்களுக்கு வருடத்திற்கு ரி.ம 1000 வழங்கப்படும் ( குடும்ப வருமானம் ரி.ம 18000-க்கும் குறைவாக மற்றும் 18-க்கும் குறைவாக ஒரு பிள்ளையும் இருக்க வேண்டும்.)
iii. மிகவும் ஏழையான மக்களின் மாத வருமானத்தை ரி.ம 550 ஆக்குவதோடு மற்ற பொதுநலப் பிரிவின் உதவிகள் அத்தனையும் ரி.ம 550-ஆக நிலைநிறுத்துவது.
iv. ரி.ம 1000-க்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பத்திற்கு பிள்ளை பராமரிப்பு செலவாக வருடத்திற்கு ரி.ம 1000 வழங்கப்படும். முதலாளிகள் மற்றும் பராமரிப்பு மையங்களின் உதவியோடு திறன் வாய்ந்த பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் இதன் வாயிலாக பெண்களையும் தொழிற்துறையில் இணைப்பதோடு அதன் விகிதாச்சாரத்தையும் 46%-லிருந்து 55%-மாக உயர்த்துதல்.
முக்கியமான பொருட்களுக்கான உதவித் தொகைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும்.அதற்கான உதவி தொகையாக ரி.ம 22 பில்லியன் ஒதுக்கப்படும். உதவி தொகை மற்றும் பெட்ரோல் விலையும் பின்வருமாறு மாற்றியமைக்கப்படும்.
i. மேலாதிக்க மனோபாவத்துடன் இயங்கும் அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கான உதவிகள் நிறுத்தப்படும்.
ii. பொது உதவி தொகைகள் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நேரே சேரும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும்.
பட்டணம் – கிராமத்திற்கான இடைவெளியைக் குறைத்தல்
மக்களி கூட்டணி கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வருமானத்தையும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்.
BERNAS வைத்திருக்கும் அரிசி இறக்குமதி மேலாதிக்கத்தை அகற்றி திறந்த ஒப்பந்த வகையில் வழங்கப்படும்.விவசாயிக்களுக்கான உதவித்தொகைகள் நேரடியாக வழங்கப்படும்.
சிறு வணிகர்களுக்கு தங்கள் கடையின் சுத்தத்தைப் பேணவும் வசதியாக இருக்கவும் 100 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.
தரமான வாழ்க்கைக்கு மேம்படுத்துதல்
மக்கள் கூட்டணி மக்களுக்கு தரமான வாழ்க்கையை வழங்கப் பாடுபடும்.
காவல்துறை மீண்டும் குற்றச்செயல்களை குறைக்கவும் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் முடுக்கி விடப்படும்.
மலிவு மற்றும் நடுத்த வீடுகள் பயனீட்டாளர்களின் பாதுகாப்பிற்காக ‘கட்டி முடித்து விற்கபடும்’ நிலை கொண்டு வரப்படும். மலிவு விலை வீடுகளுக்கான ஒதுக்கீடுகளாக ரி.ம 1 பில்லியன் ஒதுக்கப்படும்.
தேசிய போக்குவரத்து திட்டத்தின் மூலம் பொது போக்குவத்தை ‘ போக்குவரத்து மக்களின் பயணத்திற்கு, சாலைகளின் வாகனங்களைக் கூட்ட அல்ல’ என்ற நிலை கொண்டு வரப்படும். தரை வழி போக்குவரத்து ஆணையம்(SPAD) பிரதமர் அமைச்சிலிருந்து போக்குவரத்து அமைச்சுக்கு மாற்றபபடும்.
பசுமை தொழில்நுட்பம் பயன்படுத்துவது அதிகரிக்கப்படும்.இதனால் சிறந்த, மக்களுக்கு பாதுகாப்பான சக்தி பயன்பாட்டை வழங்குவதோடு பொதுப்பணிக்களுக்கான செலவீனங்களை கட்டுப்படுத்தவும் உதவும்.
அரசியல் மாற்றம்
மக்கள் கூட்டணி மக்களாட்சி நாடாளுமன்றம் மற்றும் கூட்டரசு சிந்தனை மேலும் உறுதிப்படுத்தும்.
மக்கள் கூட்டணி கூட்டரசு அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல மாநிலங்களுக்கு மேலும் நீதியான பங்கீடுகளை வழங்கும். மக்கள் கூட்டணி பின்வரும் மாற்றங்களையும் கொண்டு வரும்:
i. அனைத்து ஊரடங்கு சட்டங்களும் விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப்படும் சட்டங்களும் ஒழிக்கப்படும். இது மார்ச் 2011-ல் மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த உரடங்கு ஒழிப்பு சட்டத்தின் படி வழி செய்யப்படும்.
ii. பொது புகார் மையத்தை முறைகேள் அமைப்பாக மாற்றம் செய்ய வேண்டும்.
iii. தேசிய கணக்கு துறை, கணக்கியல் துறை, நீதி துறை ஆணையம், ஊழல் ஒழிப்பு ஆணையம், தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம் மற்றும் முறைகேள் துறை அனைத்தையும் நாடாளுமன்றத்திற்கு கீழ் கொண்டுவருவது.
iv. 1984 அச்சு மற்றும் வெளியீட்டு சட்டத்தை அகற்றுவதோடு ஊடகத்துறையினரே தங்களின் சுதந்திரத்தை கையாளும் நடைமுறையை ஏற்படுத்துவது.
v. மலேசியாவிலுள்ள பல்கலைகழக விரிவுரையாளர்களின் தன்னாட்சியை மீண்டும் பெறவும் பல்கலைகழகம், பல்கலைகழகக் கல்லூரி சட்டம் 1971-ஐ அகற்றவும் மாணவர்களை மாணவர் பிரச்சனை துறையிடமிருந்து((HEP) மீட்கவும் வகை செய்யப்படும்.
vi. OSA சட்டத்தை அகற்றுவதோடு தகவல் சுதந்திரச் சட்டத்தை அறிமுகப்படுத்தவும் நாட்டின் பாதுகாப்பு விடயங்களைத் தவிர்த்து மற்ற த்கவல்களை மக்கள் பெறும் வழிகளை ஏற்படுத்தவும் ஆவணம் செய்யப்படும்.
அவற்றோடு நாடாளுமன்றத்தின் பணியை மேலும் விரிவாக்குவதோடு பிரதமரை ஒரு சர்வதிகாரியாக செயல்படும் தன்மைகளையும் மாற்ற வேண்டும்.
i. பிரதமரின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் ரி.ம 10 பில்லியன் இவ்வளவு காலம் வீணாக செலவழிக்கப்பட்டது. இவை மற்ற அமைச்சின் திட்டங்களுக்கு வழங்கப்படும்.
ii. செலவீனங்களுக்கான திட்டங்கள் நாடாளுமன்ற குழுவினராலேயே பரிசீலிக்கப்படும். முதல் கட்டமாக நாடாளுமன்ற வரவு செலவு திட்டகுழுக்குள் உருவாக்கப்பட்டு அமைச்சின் வரவு செலவு திட்டங்கள் கவனமாக ஆய்வு செய்யப்படும்.
iii. இக்குழு உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவு திட்டம் சம்பந்தமாக துல்லிய விவரங்கள் பெற நாடாளுமன்ற துணை ஆட்களை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
இளைஞர்களே மாற்றங்களை முன்னெடுப்பர்.
தேசிய சேவை பயிற்சி திட்டத்தை பற்றி ஒரு முழுமையான ஆய்வுக்குப் பின் அதை மாற்றும் வகையில் இளைஞர்களின் உள்ளத்தை மேம்படுத்துகிற திட்டங்கள் பள்ளிகளில் புறப்பாட நடடிக்கைகளாகவோ, சமூக சேவை நடவடிக்கைகளாகவோ முன்னெடுக்கப்படும்.
ரி.ம 100 மில்லியன் ஒதுக்கீடு மூலம் Pilihan Anak Muda திட்டம் வழி 30 வயதுக்கு குறைந்தவர்கள் தங்களுக்கு பிடித்த பொது மக்களுக்கான சேவை திட்டங்களைச் செய்யலாம்.
ரி.ம 50 மில்லியன் ஒதுக்கீட்டின் வழி ஒரு சிறப்பு திட்டத்தில் இளைஞர்களின் படைப்பாற்றலும் பொழுதுபோக்கு அம்சமும் கொண்ட திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.
மக்களின் சுபிட்சமே அனைவரின் சுபிட்சம்
மக்கள் கூட்டணி இத்திட்டங்கள் அனைத்தையும் எவ்வித உதவியுமில்லாமல் நாட்டின் புது தோற்றத்தை அளிக்கும் பணியில் ஈடுபட இயலாது.
மலேசிய மக்கள், ஒரு முதலாளியாக, தொழிலாளியாக, குடும்ப மாதாக, பராமரிப்பாளராக, பட்டதாரியாக, நாட்டின் குடிமக்களாக நாட்டின் வளத்திற்கு தனிப்பட்டவராகவோ அல்லது குழுவாகவோ செயல்பட்டு இந்த தைரியமான திட்டங்கள் நிறைவேற ஆவண செய்வதன் மூலம் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் நாட்டை உருவாக்கலாம்.