ஜீவி காத்தையா, செம்பருத்தி.காம். ஜூன் 18, 2013.
தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், நிலைநிறுத்தப்படும் என்று இன்னொரு தரப்பினரும் மீண்டும் ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த இரு தரப்பினரின் ஒப்பாரிகள் தாய்மொழிப்பள்ளிகளை இடுகாட்டிற்கு அனுப்புவதற்காக தயாராகும் செயல்பாடாகும்.
13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாய்மொழிப்பள்ளிகள் விவகாரத்தில் தாய்மொழிப்பள்ளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அதன் “இறுதிக் குறிக்கோள்” என்ற கொள்கையைக் கொண்ட அம்னோ வாயை மூடிக் கொண்டிருந்தது. பொதுத் தேர்தல் முடிவுற்றதும் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்ற கூப்பாடு மீண்டும் தொடங்கியுள்ளது.
அவுட்சோர்சிங்
மிக அண்மையக் காலம் வரையில் அந்த வேலையை நஜிப் ரசாக் மற்றும் முகைதின் யாசின் போன்ற அம்னோவின் உயர்மட்ட தலைவர்கள் நேரடியாகவே செய்து வந்தனர். அக்டோபர், 2009 இல் ஒரே மொழிப்பள்ளிக்கூடம் ஒரே மலேசியா என்று முகைதின் யாசின் கூறினார். இக்கூற்றை நிராகரிக்காமல், “ஒரே கல்வி முறை, மக்கள் அங்கீகாரத்துடனேயே அமல்படுத்தப்படும்”, என்று நவம்பர் 2009 இல் அம்னோவின் உண்மையான நிலைப்பாட்டை பிரதமர் நஜிப் வெளியிட்டார். ஆனால், இதற்கு முன்பு மார்ச் 7, 2007 இல் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” (ஒரே மொழி கல்வி கொள்கை) வழக்கற்றுப் போன ஒன்று அன்றய கல்வி அமைச்சர் ஹிசாமுடின் கூறியிருந்தார்.
இப்படி எல்லாம் அம்னோ தலைவர்கள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை நேரடியாகக் கக்கிவிட்டு மாட்டிக் கொள்வதால் இப்போது இது போன்ற நாசகார வேலைகளை அம்னோ “அவுட்சோர்சிங்” செய்துள்ளது. மலாய் இனம், இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் மேளாண்மை போன்ற தீவிரவாத கோரிக்கைகளை எழுப்பி அவற்றுக்காக போராட்டம் நடத்தும் வேலையை அம்னோ, பெர்க்காசாவிடம் அவுட்சோர்சிங் செய்துள்ளதைப் போலவே தாய்மொழிப்பள்ளிகளுக்கு எதிரான அதன் போராட்டத்தை கல்விமான்கள், முன்னாள் நீதிபதி, மலாய்-முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகள் போன்றவற்றிடம் அவுட்சோர்சிங் செய்துள்ளது. இது அம்னோவின் தாய்மொழிப்பள்ளி அழிப்பு கொள்கை அமலாக்கத்திற்கான இருவழித் திட்டங்களில் ஒன்று.
இன்சோர்சிங்
இன்னொரு வழி கல்வி அமைச்சுக்குள்ளேயே “இன்சோர்சிங்” செய்யப்பட்டதாகும். இது அம்னோவின் தாய்மொழி அழிப்பு இறுதிக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பெருந்திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தது.
இந்த இன்சோர்சிங் குழுவில் ஏராளமான டத்தோக்களும், டான் சிறீகளும், உள்ளூர் வெளியூர் பேராசிரியர்களும், கல்வி நிபுணர்களும் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் டிசுல்கிப்ளி அப்துல் ரசாக். இவர் அல்புகரி அனைத்துலகப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராவார். இவர் ஒரே கல்வி முறையைப் பரிந்துரைத்த நாட்டின் முதல் கல்வி அமைச்சர் அப்துல் ரசாக்கின் “ரசாக் அறிக்கையை” முழு மூச்சாக ஆதரித்து அப்பரிந்துரைதான் “இன்னும் இந்நாட்டு கல்வி அமைவுமுறையின் அடித்தளம்” என்று வாதாடுகிறவர். இவரைப் போன்ற பலர் ஆய்வு செய்து, மக்களுடன நாடுதழுவிய அளவில் கலந்துரையாடல்கள் நடத்தியதின் வழி பெற்ற கருத்துகளை கவனத்தில் கொண்டு வரையப்பட்டு பிரதமர் நஜிப் ரசாக்கால் செப்டெம்பர் 11, 2012 இல் வெளியிடப்பட்டதுதான் மலேசிய பெருங்கல்வித் திட்டம் 2013-2025.
இப்பெருந்திட்டத்தில் “சீன மற்றும் தமிழ் மொழிகளைப் போதனை மொழியாகக் கொண்ட தேசிய மாதிரி தொடக்கப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்” (“…National-type primary schools where the medium of instruction is in Chinese language and Tamil will be maintained.”) என்று கூறப்பட்டுள்ளது. (7-16)
இப்போது தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் தாய்மொழிப்பள்ளிகள் “நிலைநிலைநிறுத்தப்படும்” என்று அரசாங்கத் தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது.
ஜூன் 14 இல் வெளியான நாளிதழ் செய்தியில் “நாட்டின் கல்வி துறையின் மேன்மைக்காக 2013-2025 தேசிய கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு இணையாக தாய்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்”, என்று கல்வி துணையமைச்சர் II பி.கமலநாதன் அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது. (தநே ஜூன் 14)
கமலநாதன் சொன்னதாக கூறப்பட்டிருப்பதில் அர்த்தம் தெளிவாக இல்லை என்றாலும், அவர் மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 இல் கூறப்பட்டுள்ளவாறு தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்பதைத்தான் கூறியுள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
தாய்மொழிப்பள்ளிகளை மூடுவதற்கான முன்னோடி
கிட்டத்தட்ட மில்லியன் சொற்களையும், ஏராளமான புள்ளிவிபரங்களையும் கொண்ட அந்த மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 தாய்மொழிப்பள்ளிகளின் எதிர்காலத்தை சில நூறு சொற்களில் முடிவு செய்து விட்டது.
சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுற்றி வளைத்து தேசிய ஒற்றுமைக்கு பேரிடர் என்று அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:
“In general, there are signs of increasing ethnic stratification in schools. More Indian and Chinese students are enrolling in National-type schools today than 10 years ago (Exhibit 3-30). The proportion of Chinese students enrolled in SJK(C)s increased from 92% in 2000 to 96% in 2011. The shift for Indian students was even more dramatic, showing an increase from 47% to 56% enrolment in SJK(T)s. As such, 94% of students in SKs are now ethnically Bumiputera. This suggests that there is a risk of declining diversity and ethnic mixing across all school types, which in turn reduces the ability of schools to effectively foster unity through inter-ethnic interaction.” (3-24)
இதற்கு ஒரு வழி காண்பதற்கு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ரிமூவ் வகுப்பை அகற்றுவதற்கும், மலாய் மொழி போதனை நேரத்தைக் கூட்டுவதற்கும் பெருந்திட்டத்தில் வழிகள் கூறப்பட்டுள்ளன. (4-9) பார்ப்பதற்கு பெருந்தன்மையானதாக இருந்தாலும் இதன் உள்நோக்கம் தரமான மலாய் மொழி தேசியப்பள்ளிகளில் போதிக்கபடுகிறது. அங்கு சீன மற்றும் இந்திய மாணவர்கள் மலாய் மொழியைக் கற்றுக்கொள்வதோடு சீன மற்றும் தமிழ் மொழிப் பாடங்களையும் அங்கேயே கற்றுக் கொள்ளலாம் என்பதாகும். மேலும், இடைநிலைப் படிப்பிற்கு எல்லாரும் தேசியப்பள்ளிக்குதானே போக வேண்டும். ஏன் தொடக்கத்திலேயே போகக் கூடாது? இது கற்பனை அல்ல. இதற்கான முயற்சிகள் கல்வி அமைச்சின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருந்திட்டத்திலும் இது கோடி காட்டப்படுள்ளது. (7-16)
இதனையடுத்து, மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகள் இதர வெளிநாட்டு மொழிகளான அரபு, பிரஞ்ச், ஸ்பேனிஸ் ஆகியவற்றுடன் தேர்வு பாடமாகவும் கொள்ளலாம் என்றும் பெருந்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறிய மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக (UiTM) வேந்தராக பணி புரியும் அப்துல் ரஹ்மான் அர்ஷாத் “இதர மொழிகள் ஓகே, பள்ளிகள் நோட் ஓகே” என்றார். ஆனால், இது சீன மற்றும் தமிழ் மொழிகளைக் கற்கக் கூடாது என்றாகாது என்றும் அவர் கூறினார்.
தாய்மொழிப்பள்ளிகளை தேசியப்பள்ளிகளாக மாற்ற வேண்டும். அதற்கு ஒத்துக்கொள்ளாதவர்கள் ஒன்றுமைக்கு எதிரானவர்கள் என்று முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதி முகமட் நூர் கூறியுள்ளார். அவர் தமிழ் மொழியை சரளமாக பேசுகிறவர். ஆனால், தமிழ்ப்பள்ளியில் படித்தவரல்லர். அவரைப் போலவே தமிழ்ப்பள்ளிக்குப் போகாமலே தமிழ் கற்றுக் கொள்ளக் கூடாதா என்ற கேள்வி அடுத்து எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
தாய்மொழிப்பள்ளிகளுக்கு முடிவு கட்டுவதற்கு இவ்வாறான தந்திரங்களை இப்பெருந்திட்டத்தில் புகுத்தி விட்டு, இறுதியில் தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று பெருந்திட்டம் கூறுகிறது:
“The current structure of the Malaysian education system will remain. In particular, National-type primary schools where the medium of instruction is in Chinese language and Tamil will be maintained.” (7-16)
மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 இல் கூறப்பட்டுள்ள இம்முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது? எடுத்தது யார்?
இம்முடிவு மலேசிய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்டதா? இல்லை.
இம்முடிவை எடுத்தது யார்? பிரதமர் நஜிப்பா? கல்வி அமைச்சர் முகைதினா? அமைச்சரவையா? இல்லை, இல்லை, இல்லை.
இம்முடிவு மலேசிய கல்வி பெருந்திட்டம் குறித்து நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் தேசிய கலந்துரையாடலின் போது அதில் பங்கேற்றவர்களின் பெரும்பான்மையான கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்:
“This decision is in line with the majority of views raised during the National dialogue.” (7-16)
மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 இல் தாய்மொழிப்பள்ளிகள் தேசிய கலந்துரையாடலில் பங்கேற்ற பெரும்பானையினர் அளித்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் தாய்மொழிப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காதிருந்தால், தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படும் என்று இப்பெருந்திட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கும் என்று நாம் நினத்தால் அது தவறாகாது. ஆனால், அது அம்னோவின் தற்போதையத் திட்டமல்ல. தற்போதைய அரசியல் சூழ்நிலை அதனைச் செய்வதற்கு அம்னோவுக்கு சாதகமாக இல்லை.
எதிர்காலத்தில் தாய்மொழிப்பள்ளிகளை மூடுவதற்கான பாதையை அமைக்க இப்பெருந்திட்டத்தின் வழி ஒரு முன்னோடியை அம்னோ உருவாக்கியுள்ளது: பங்கேற்றவர்களின் பெரும்பான்மை கருத்து அல்லது மக்களின் அங்கீகாரம் என்ற அடிப்படையில்தான் தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுட்த்தப்படுமா அல்லது மூடப்படுமா என்ற முடிவு எடுக்கப்படும். இதில் அடங்கியிருப்பதுதான் அம்னோவின் சூழ்ச்சி.
அடுத்து வரும் மலேசிய கல்வி மாபெருந்திட்டத்திற்கு மக்களுடன் நாடு தழுவிய அளவில் தேசிய கலந்துரையாடல் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் மக்களில் பெரும்பான்மையோர் தாய்மொழிப்பள்ளிகள் வேண்டாம். ஒரே மொழி கல்விக் கொள்கைதான் வேண்டும் என்று கருத்து தெரிவித்தால் அது நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான முன்னோடிதான் மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 இல் பெரும்பானமையினர் தெரிவித்த கருத்தின்படிதான் தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன என்ற அறிவிப்பு.
இங்கு, நவம்பர் 2009 இல் பிரதமர் நஜிப் கூறியதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்: “ஒரே கல்வி முறை மக்கள் அங்கீகாரத்துடனேயே அமல்படுத்தப்படும்.”
அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அம்னோ அதன் அவுட்சோர்சிங் வழி முடிக்கி விட்டுள்ளது. சரியான நேரத்தில், அம்னோ அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று நிச்சயமக நம்பலாம். அந்த அங்கீகாரம் அம்னோவுக்கு கிடைக்கும் வரையில் தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
வச்சாண்டாத் தமிழ் பள்ளிக்கு ஆப்பு…..!
அம்னோ ஆட்சி பிற மொழிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்று நினைத்து ஓட்டுப்போட்டோம் அது தப்பு என்று அம்னோ நிரூபித்து வருகிறது.மற்ற மொழிகளை புறக்கணிக்கும் இவர்களுக்கு அடுத்த முறை ஓட்டு போடக்கூடாது.
அம்னோகாரர்கள் முடிவெடுத்தால் நாங்கள் எல்லாம் தலை
ஆட்டணுமா?
அம்னோ நினைத்தது போல் அனைத்தும் நடந்து விடுவதில்லை. அது போல் தான் இதுவும்!
இவனுங்களுக்கு ஓட்டு போட்டீங்களே.இதுதான் அவனுங்க உங்களுக்கு வைக்கிற ஆப்பு இதுதான்.
இதைப் படிக்கும் மானம் கெட்ட ம.இ.கா மந்திரிகள், இதற்கு ஒரு முடிவு காணமுடியாவிட்டால், எங்களிடம் மாங்கொட்டையும் இல்லை, புளியங்கொட்டையும் இல்லை, தமிழர்களே நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கைகளைத் தூக்கி சரணடைந்துவிடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலயான தீர்வுகாண ‘நம்ம’ அரசுக்கும் மனமில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான ‘பேமாணிகள்’ நமது மதம் மொழி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் கைவைக்கிறார்கள். அரசியல் அமைப்பை அவமதிக்கும் இத்தகையோரை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க முடியாத இவர்கள் மக்களுக்கு நல்லது செய்வது எப்போது? தேர்தல் வரும்போது தான்.
தமிழன் கலுத்துக்கு தூக்கு கயிறு மாற்றிவிட்டு, வாய்க்கு மிட்டாய் கொடுக்கிறார்கள். ஓட்டு போட்டு ஏமாந்து போன தமிழா. வெள்ளி 500க்கு ஆசைப்பட்டு தமிழ் மொழியை விற்றுவிட்டோம்!
என்னதான் அம்னோ காரன் பசுத்தோல் போர்த்தியிருந்தாலும் சுயரூபத்தை காட்டத்தானே செய்யும்!! இவனுங்களுக்கு ஓட்டுப் போட்ட மரமண்டைங்கள் திருந்தினால் ஒழிய இதை மாற்றவே முடியாது…!
வண்டி வண்டியா BN க்கு ஓட்டு போட்டுவிட்டு குய்யோ முய்யோ என்று ஒப்பாரி எதற்கு ?
நன்றாக சொல்லி எல்லாரையும் அவவங்க்களோட குறைகளை சுட்டி கட்டீருக்கிரை.
அடேய்…! ஏங்கடா டேய், எப்பப் பார்த்தாலும் தமிழனுக்கே ஆப்பு அடிக்கிறேங்க? தமிழ்ப் பள்ளியை எவன் மூடவேண்டும் என்று சொல்லுரானோ, அவன் குடும்பம் கட்டேல தாண்டா போகும்…
BN ன்னுக்கு ஒட்டு போட்டு இப்ப குத்துன்னு கொடைய்டுதுன்னு ஒப்பாரி எதற்கு ?ஆண்டவன் மூளை கொடுத்து இருக்கான் ,பயன் படுத்த மாட்டேங்கலாடா
பாரிசான் வெற்றியை உறுதி செய்வோம் என்று முழங்கிய ஐ .பி எப் தலைவர் சம்பந்தனிடம் முறையிடுவோம்.
ஒரு பக்கம் மலாயா பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்கு சங்கு ஊதிக்கொண்டு இருக்கிறார்கள்… அதற்கு தலைவராக இருப்பவர் ..???.. மதத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்…. மறு பக்கம் ஆரம்ப பள்ளிக்கு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் … எதிர் கட்சிக்கு ஆதரவு கேட்டால்… அவன் என்ன கொடுக்கிறான்.. ஆளும் கட்சி அரிசி… பருப்பு … பணம் கொடுக்கிறான் என்கிறார்கள்… இன்னொரு பக்கம் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நம்மையே குறி வைத்து நமது இளைஞர்களின் அட்டகாசம்…. என்ன செய்வது என்றே தெரியவில்லை….
அதுவும் சரிதான். சம்பந்தந்தான் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும். உயர்திரு மாண்புமிகு வேதமூர்த்தி அவர்களும், மக்கள் சக்தி டத்தோ தனேந்திரன் அவர்களும், பேச்சாளர் பினாங்கு மானில ஐபிஎஃப் தலைவர் என்று கூறும் அவர்களும் இதைப்பற்றி பேச வேண்டும். வேள்பாரி, சரவணன், டத்தோ டாக்டர் சுப்ரமனியம், மாண்புமிகு கமலனாதன், அரசியல் சாணாக்கியன் …ஹ ஹ ஹ இராஜரத்தினம், தி.மோகன் யாவரும் பேச வேண்டும். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மானில ம.இ.கா தலைவர்களும் இதைப்பற்றி பேசினால் தீர்வு காணலாம். எதிர்க்கட்சி மட்டும் பேசாமல் இருக்கலாமா? உயர்திரு மாண்புமிகு மக்கள் தொண்டன் ஹ ஹ ஹ இராமசாமி அவர்களும் இதைப்ப்ற்றி பேச வேண்டும். கஸ்தூரியும் பேசலாம்….நல்லது நடக்க தமிழ் அரசியல்வாதிகள் தாராளமாக பேசலாம்
வந்துட்டாரையா சமுக நல போராட்ட தியாகி ,,அறிவாளி ,,முதலில் நீ போயி வாயை திறந்து பேசும் ,தமிழ் பள்ளிகூடத்தை முட சொன்னவன் ஒருத்தன் ,பாட்டு வாங்கி கொள்வது தமிழனா ,,சொன்னவன போயி எதிர்த்து நில்லுங்கடா ,,ஆ ஊன்னா ,தமிழன் இதுல கோலாட்டம் அடிக்கிறேங்க .கஸ்துரி வந்து பேச மாட்டாங்க ,வேணும்னா கஸ்துரி பாயை வந்து பேச சொல்லுங்க ! அவங்கள போயி கல்லறையிலே தான் எழுப்பி கூட்டி வரோனோம்
வந்துட்டாரு புலவரு வால்டரு ,,55 வருசமவா தீர்வு கானுறேங்க ?
டேய் ,அறிவுகெட்ட அறிவாளி எங்கையா போயிட்ட ,?உங்கோயாள,,,,
தமிழ் மொழி நிலைக்க வேண்டும் எனில் ,தமிழ் பள்ளிகள் நிலைக்க வேண்டும் எனில் தமிழன் மாற வேண்டும். ஆம் .தமிழன் ஒன்றுபட வேண்டும்.வேற்றுமை உணர்வுகளை ஒழிக்க வேண்டும். ஒவ்வொருவனும் சமுதாயத்தின் கீழ் தட்டில் இருப்பவர்களை தூக்கி விட முயற்சி செய்ய வேண்டும். தமிழ் வறியவனின் மொழி என்ற நிலை மாறி வசதி படைத்தவன் மொழி என்ற நிலை ஏற்படுபோது நம் மொழி ,நம் பள்ளிகள் நிலைக்கும்.
நம் நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் சொல்லப்பட்டது என்ன? சுதந்தரமான வழிபாடு, அன்றிருந்த தமிழ் சீன தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்திருக்கும் என்றுதானே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், நம் நாடு சுதந்திரம் பெற வேண்டி நம் மதிப்பிற்குரிய சுதந்திரத் தந்தையான துங்கு அவர்கள் நம்மிடம் கொடுத்த வாக்குறுதி இதுதான். ஆதலால், இனிமேல் தாய் மொழிப் பள்ளிகள் மூடப் படவேண்டும் என்றக் குறுகிய மனம் கொண்டக் கோரிக்கையாளர்கள் மீண்டும் கூச்சலிட்டால், முதல் தேர்தல் கூட்டணி அறிக்கையை முதலில் படிக்க சொல்ல வேண்டும். பிறகு அவர்கள் தங்கள் கருத்தை வெளியிடச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு புரியும்; நம் நாடு எப்படி ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது அவர்களுக்குப் புரியும். தொடர்ந்திருக்கும் என்ற வார்த்தையை அவர்கள் மூடப்படும் என்று அர்த்தம் கொள்ளுவது அவர்களின் குறுகிய மனப் பான்மையே எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ் வளம் கருதி தமிழ் பள்ளிக்கு தொண்டாற்ற வேண்டும் இன்று நாட்டில் 523 தமிழ் பள்ளிகள் செயல் படுகின்றன .322 தமிழ் பள்ளிகள் குறைந்த உதவியுடன் தனியார் நிலத்தில் செயல் படுகின்றது .201 தமிழ் பள்ளிகள் முழு மணியம் பெற்ற பள்ளிகளா ?