வடிவேலு நடித்து வரும் புதிய படம், “ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையிலுள்ள ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் செட் அமைத்து, 12 நாட்கள் நடந்தது.
தெனாலிராமன் கெட்டப்பில், வடிவேலு நடித்த பாடல் காட்சியை முதலில் படமாக்கினர். அதில், வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கேரக்டர்களை வைத்து, பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர்.
தான் நடிக்கும், ஒவ்வொரு காட்சியும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, கேமரா முன் வருவதற்கு நல்ல பயிற்சி எடுத்த பிறகே நடித்தாராம்.
அடுத்து, தென்மாவட்டங்களில் தெனாலிராமன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால், லொகேஷன் பார்க்க இயக்குனர் சென்றுவிட்ட நிலையில், மதுரையில் இருக்கும் தன் வயதான அம்மாவை பார்க்க புறப்பட்டு விட்டார், பாசக்கார வடிவேலு.
நல்லா வருவீங்க மிஸ்டர் வடிவேலு அங்கிள்… கோட் ப்லேஸ்ட் யு….
நீங்கள் சார்ந்த சினிமாத்துறையினர் …கேவலம் ,இவ்வளவு …….,
வடிகட்டிய கோழைகளாக,எவன் எவனுக்கோ அஞ்சிய பேடிகளாக …,
ஒருவனுடைய உண்மையான திறனை மதிக்கத்தெரியாத …அதனை
வளர்த்து தானும் உயர்ந்து அவனும் உயர்ந்து எனும் நல்லது எண்ணும்
நற்பண்பு இல்லா …மனிதர்களை அதிகம் கொண்ட இடமாக அமைந்து
விட்டது !
அதனால் தான் அரசியலில் எத்தனையோ விதமான….(….)….. ………செய்தவன் எல்லாம் இருக்க உன்னை பலி கெடா (ஆடு )…
ஆக்கினார்கள் .
இவை எல்லாம் தமிழன் வரலாற்றில் சகஜம் !
நமக்கு நாமே வெந்து தணிய வேண்டியதுதான் .
காலம் கடந்து வருந்துவார்கள் .!!!