நான் காந்தியின் ரசிகன்! -கமல்

kamalவிஸ்வரூபம்-2 பட வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் கமல். அதனால்தான் எந்தவொரு விழாக்களிலும் அவர் தலைகாட்டுவதில்லை. படப்பிடிப்பு ஒரு பக்கம், போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் இன்னொரு பக்கம் என பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் கமல்.

இந்த நேரத்தில், தேசப்பற்றுள்ள கதைகளிலேயே நீங்கள் படமெடுப்பதேன்? என்று அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நான் காந்தியின் ரசிகன். அதனால்தான் தேசப்பற்றுள்ள படங்களாக எடுக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், காந்தி ஒரு சாதாரண மனிதராக இருந்து தேசத்துக்காக பாடுபட்டவர். அதைத்தான் எனது ஹேராம் படத்தில் படமாக்கினேன். நல்லதொரு மனிதராக இருந்து நிறைய சாதித்தவர் காந்தி.

மேலும், நான் எடுக்கும் படங்களில் தேசப்பற்று உள்ளது என்பதை மக்கள் உணர்ந்தாலே மகிழ்ச்சிதான். அந்த தேசப்பற்றுக்காகத்தான் விஸ்வரூபம் படத்தை வெற்றி பெறச்செய்தார்கள் என்று கூறியுள்ள கமல், இப்போது நான் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி போன்று தெரியாது. ஆனால், படத்தின் முடிவு அதை உணர்த்தும் என்கிறார்.