தமிழ்ச் சினிமாவின் மரண ஆண்டாக 2013 ஐச் சொல்லலாம்.. தமிழ்ச் சினிமாவை தூக்கி நிறுத்திய ஒப்பற்ற உன்னதமான கலைஞர்கள் பலர் இவ்வாண்டு இயற்கை எய்தி உள்ளனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார்.
அடுத்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சுகுமாரி மரணம் அடைந்தார்.
இசைத் துறையை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன், டி.கே.ராமமூர்த்தி, லால்குடி ஜெயராமன் ஆகியோர் அடுத்தடுத்து இயற்கை எய்தி இசை உலகில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றார்கள். 50 படங்களை இயக்கிய மணிவண்ணன் மரணத்தை முத்தமிட்டார்.
அவரைத் தொடர்ந்து இயக்குனர் ராசுமதுரவன் இளம் வயதிலேயே புற்றுநோய்க்கு பலியானார்.
ஜெமினி லேப், ஆனந்த் சினி சர்வீஸ் நிர்வாகத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான ரவிசங்கர் பிரசாத் தற்கொலை செய்து கொண்டது சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.
15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து 50 வருடங்கள் தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருந்த காவியக் கவிஞர் வாலி நம்மை விட்டுச் சென்றது சினிமாவில் மட்டுமல்ல நாட்டு மக்களிடமும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த துக்கம் முடிவதற்குள்ளாகவே மஞ்சுளாவை சினிமா இழந்தது.
இப்படி அடுத்தடுத்து சினிமா ஜாம்பவான்கள் மறைந்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.
மரணம் கடவுளின் கையில் என்றாலும் அடுத்தடுத்து அதை சந்திப்பதால் அது கலைஞர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து மரணங்களால் அதிர்ச்சியில் திரையுலகம்,எதற்கு அதிர்ச்சி அடைய வேண்டும் ? வயதானால் போகவேண்டியதுதானே, இறந்தவர்கள் என்ன மகான்களா இல்ல மாஹத்மா காந்தியா? விடுங்கையா விதி வந்த செத்துட்டு போறாங்க… யாருக்கு என்ன லாபம் யாருக்கு என்ன நஷ்டம், வாங்கையா போயி வேலையைப் பார்ப்போம்
கவிஞர் வாலி இறந்தது இழப்பு இல்லையா? மக்கள் திலகம் காலத்திலிருந்து நல்ல நல்ல கவிதையைத் தமிழுக்காக தந்தவர்… அது இழப்பு இல்லையா. சாகிறவரைக்கும் அவரோட கவிதைக்கு எல்லாமே காத்து கிடந்தாங்க… என்னை போல வளரும் கவிஞர்கள் உள்பட…!
வயதானவர்கள் “போவதை” நாம் தடுக்க முடியாது. ஆனால் இளம் வயதிலேயே புற்று நோய்க்குப் பலியானாரே ராசுமதுரவன் வருத்தற்குரிய ஒன்று. வாயில் பாக்குக் கொட்டையை அடக்கி வைத்துக் கொண்டே அடக்கமாக போய்விட்டார்! சிகரெட், மதுபான பிரியர்களே கவனிக்க!
ராசி அவர்களே ! மரணம் என்பது இயல்பு ! நீங்கள் mr கைகுந்தாவிடம் ராசியாய் போவதே சிறப்பு ! உங்களை போன்ற புதுக்கவிஞனை வாழ்த்துவது எங்களின் பொறுப்பு !
கை குந்தாவுக்கு உணர்ச்சி நரம்புகள் மறுத்து போய் விட்டது போலும். இது மென்மேலும் உணர்ச்சி வசப்பட்டு எழுதியதால் வந்த வினையோ? வாலியைப் போல கலைக்கு தொண்டு செய்தவன் என்றும் இறப்பதில்லை. அவருடைய பெயர் நம்மோடு நிலைத்து நிற்கும்.
பிறப்பும் இறப்பும் சகஜம்! இறப்பு என்று ஒன்று இல்லையென்றால் பாரிசான் அரசியல்வாதிகளுக்கு யார் பாடம் நடத்துவது, இறப்பு இல்லையென்று வெட்சுகொவோமே தமிழ் நாட்டிலே அரசியல்வாதிகள் தன் கையை பொன்னால் ஆக்கி காணுவதை எல்லாம் பொன்னாக்கி விடுவர். இறைவன் ஆணவம் பிடிச்சி அலைபவர்களுக்கு இந்த இறப்பு மூலம் முற்றுப்புள்ளி வைப்பார்! ஆனால் நல்லவர்களும் அப்பாவிகளும் இறந்தால் நமக்கு வருத்தமாகத்தான் இருக்கு!
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா