காதலை நான் எதிர்க்கவில்லை, அதற்காக கெட்டவன் என்று தெரிந்தும் என் மகளை எப்படி கட்டிக் கொடுக்க முடியும் என கண்கலங்கிய படியே பேட்டி அளித்துள்ளார் சேரன்.
இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து இன்று பகல் 12.30 மணிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறுகையில், இதுவரை வெளி உலகிற்கு என் மனைவியை நான் அறிமுகப்படுத்தியது இல்லை.
தற்போது அவரை அறிமுகப்படுத்துகிறேன். இவர் தான் என் மனைவி.
எனக்கு 2 மகள்கள், நான் பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா ஒரு தியேட்டர் ஊழியர், அம்மா ஆசிரியை.
என் மகள்களுக்கு சினிமா பின்னணியும், பணக்கார வாசனையும் வராமல் இருக்க அவர்களை மிகவும் கவனமாக வளர்த்தேன்.
நான் என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளையவள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் அவளை செல்லமாக வளர்த்தோம்.
தாமினிக்கு 18 வயதில் காதல் வந்தபோது அதை நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொடுக்கிறோம் என்றோம்.
ஆனால் பையனை பற்றி விசாரித்தபோது அவனது பின்னணி எங்களுக்கு பயத்தை அளித்தது.
இருதய நோயுள்ள தாயுடன் தான் இருந்தான், வேலை இல்லை. நான் சந்துருவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினேன். மாதம் ரூ. 10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதி, வாழ்க்கையில் முன்னேறிக் காட்டு, 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன்.
அதுவரை ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றாதீர்கள் என்று அவனிடம் கேட்டுக் கொண்டேன். அவனும் சரி என்றான், ஆனால் எனக்கு தெரியாமல் அவர்கள் தொடர்ந்து பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவன் என் மகளை எனக்கு எதிராக திருப்பிவிட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை.
பேசாமல் இருந்தால் செத்துவிடுவேன் என்று என் மகளை பேச வைத்தான்.
நான் உடனே அவனுக்கு போன் போட்டு கொடுத்து என் மகளை பேச வைத்தேன். எந்த தகப்பனும் செய்யாததை செய்தேன். அதன் பிறகு அவன் நிறைய பொய் கூறினான்.
என் மகளுடன் பேசக் கூடாது என் நான் கூறிய நாட்களில் இரவு நேரத்தில் அவன் பிற பெண்களுடன் வெகு நேரம் பேசி இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அவன் ஃபேஸ்புக்கில் என் மூத்த மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறான். அவனுக்கு 7,8 பெண்களுடன் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க நாங்கள் தயார். மோசமான நடத்தை, பொருளாதாரம் சரி இல்லை, பெண்களுடன் தகாத தொடர்பு என்று இதை எல்லாம் பார்த்த பிறகும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்.
உன் அப்பாவின் படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து எழில் இயக்கும் படத்தில் அவனை நடிக்க வைக்குமாறு என் மகள் என்னிடம் தெரிவித்தாள்.
என் மகளை வைத்து பணத்தையும், சொத்துக்களையும் பறிக்க திட்டமிட்டதை உணர்ந்தேன்.
அவனை நான் அடிக்கவும் இல்லை, கொலை மிரட்டலும் விடுக்கவில்லை. என் மகள் ஒரு கட்டத்தில் மனம் மாறி சந்துரு வேண்டாம் என்றாள். ஆனால் தற்போது அவள் மனதை மாற்றி மூளை சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறான்.
நல்ல குடும்பமாக இருந்தால் நானே சேர்த்து வைப்பேனே. அவனது குடும்பப் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரிக்க வேண்டும் என்றார் இயக்குனர் அமீர்.
இவ்வாறு பெற்றோர் அழுதபடி பேட்டி கொடுக்க, ஆனால் தாமினியோ பெற்றோர் வேண்டாம், காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.
விடுங்க சேரன் ,மகள் உயிருக்கு ஆபத்து வரமால் பார்த்துக்கொள்ளுங்க ,,கெட்டவனாக இருந்தாலும் ஒரு நாளைக்கு திருந்துவார்கள் ,அந்த நம்பிக்கையுடன் இருங்கள்
ஆமாம் சேரன் ! மோகன் போன்ற ஆட்கள் எல்லாம் திருந்தி விட்டார்கள் ,உங்கள் மருமகன் திருந்தமாட்டாரா !
சேரன் சாதியையோ, ஏழ்மையையோ, தராதரத்த்தையோ காரணம் காட்டவில்லை. தன் மகள் எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சம் மேலிடத்தான் பேட்டி அளித்துள்ளார். கோத்திறம் அறிந்து பெண்ணை கொடு என்பது தலைவனின் திறம் அறிந்து பெண்ணை கொடு என்பதாகும். பின்னாளில் கொடுமை செய்கிறான் என்று தகப்பனைத் தேடி வந்தால் விரட்டிவிட முடியுமா.. தாமிணிக்கு மோகம் முப்பது நாள்..
ஆமாம் நந்தாவும் ரொம்ப திருந்திட்டாரு, முன்பு வெறும் nantha இப்போ tamilar nantha, நாளை லாடு லபக்கு nantha, நண்பரே சும்மா தமாசு தான்….
பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
நண்பர் மோகன் சொல்வது உண்மை ! நந்தா என்ற தமிழர் நந்தா நான்தான் ! இது வரைக்கும் ஆள்மாறாட்டம் செய்து செம்பருத்திக்கு எழுதியதில்லை ! இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு பிறகுதான் தமிழர் நந்தாவாக மாறினேன் ! தமிழ் நாட்டிலும், மலேசியாவிலும் தமிழருடன் பின்னி பிணைந்து இருந்த தெலுங்கு மற்றும் மலையாளி சமூகத்தினர், சங்கங்கள், யாரும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை ! இலங்கை தமிழர் ஹிந்துக்கள் அதுக்காவது குரல் கொடுத்திருக்கலாம் அல்லவா ? தமிழ் நாட்டில் திராவிடம் என்று சொல்லி அங்குள்ள தமிழர்களை ஏமாற்றி விட்டார்கள் ,அன்று தெளிந்தவந்தான் இன்று தமிழர் நந்தா ! மலையாளிக்கோ ,தெலுங்கருக்கோ நான் எதிரி அல்ல என்று தெளிவு படுத்திக்கொள்கிறேன் !
மனசுக்குள்ளே புகுந்து பார்த்தால் தான் தெரியும் சேரன் ஜாதி அடிப்படையில் எதிர்க்கிறாரா இல்லையா என்று… யாரதான் நம்ப முடியுது இந்தக் காலத்திலே!…முதலில் என்னையே என்னால் நம்ப முடியவில்ல… இது ஒன்னும் பெரிய பிரச்சனை கிடையாது, உலகில் நடப்பவைதானே.
நானும் நண்பர் ‘தமிழர் நந்தா’ போல் பெயரை மாற்றிக்கொண்டேன், என் பெயர் mohan keling… ஏன்னா keling என்ற வார்த்தை கலிங்க நாட்டை குறிக்குது, அர்த்தம் புரியாதவர்கள் தான் கத்தியும் கம்பையும் தூக்குவானுங்க… சீனன் kelingga என்று நாட்டை அடிப்படையாக கொண்டு சொன்னான், மலாய்க்காரன் அர்த்தம் தெரியாமல் கெலிங் என்ற வார்த்தை கேவலம் என்று வசைப்பாடினான்…
சேரன் அவர்கள் நல்ல சிறந்த தமிழ் படங்களை வெளியிட்டு இருக்கிறார், நல்ல தமிழ் உணர்வாளர் இவர், இவருக்கு போயி இப்படி என்றால் என்ன சொல்வது? எது எப்படி இருந்தாலும் சரி எல்லாமே நல்லவிதமாக சுமுகமாக முடிந்தால் சரி
சேரன் அவர்கள் மோகன் போன்ற ஆசாமியை சந்திக்காமல் போனதால், கிடைத்த மருமகனை குறை சொல்கிறார் !
நண்பரே thamilar nanda ,நான் எதுக்கையா காதல் விவாகரத்தின் நடுவுலே ? எல்லாமே நல்லாதானே யா போயி கிட்டு இருக்கு ,இதுலே நான் வேறையா ? சிவன் கோவில் கரடி பூந்த கதையாகி விடுமையா !
உண்மைதான் மோகன் நீங்கள் சொல்வது . எதற்கு கோபப் படுவது என்று தெரியாத தமிழர்கள் இவர்கள் . ஒரு தனி மனிதர் நிலைப்பாடு வேறு . அதனை வைத்து சமுதாயத்தை குறை கூறிவிட முடியாது
. கலிங்க பேரரசினை நினைவு கூர்ந்த உங்கள் தனி தன்மைக்கு பாராட்டுகள் . அதுபோல் புறநானூறு கூறும் “துடியன்,பாணன் ,பறையன் ,கடம்பன்” இவர்கள் சிறந்த குடி என்பதை தமிழர் அனைவர் உணர்வரா ?