“தலைவா’ பட பிரச்னையில் முதல்வர்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் கண்ணீர் மல்க கூறினார்.
பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நடுத் தெருவில் நிற்கும் நிலைக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:
தமிழ் திரையுலகில் நாணயமான தயாரிப்பாளராக செயல்பட்டு இதற்கு முன் 2 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த “தலைவா’ படத்தை தயாரித்து இருக்கிறேன்.
கடந்த 9-ஆம் தேதி படத்தை வெளியிட விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருந்தேன். படம் வெளியாக இருந்த இரு நாள்களுக்கு முன்பு திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெயிட அச்சம் காட்டினர். இதனால் படம் வெளியாகவில்லை.
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் படம் வெளியானது. இதனால் இணையதளங்கள் வாயிலாகவும், திருட்டு சி.டி. விற்பனை மூலமாகவும் “தலைவா’ படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி விட்டது.
கடந்த சில நாள்களில் படம் வெளியாகி இருந்தால், ரூ.30 கோடியிலிருந்து ரூ.40 கோடி வரை படம் வசூல் செய்திருக்கும். இந்த நிலையில் இந்த வாரம்கூட படம் வெளியாக விட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாவேன். இந்த நஷ்டத்தால் நான் என் குடும்பத்துடன் நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்.
“தலைவா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதனால் தமிழக முதல்வர் மனமிறங்கி “தலைவா’ பட பிரச்னையில் தலையிட்டு படம் வெளிவர நடவடிக்கை எடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என சந்திரப்பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது “தலைவா’ படத்தின் இயக்குநர் விஜய் உடனிருந்தார். அவர் பேசும் போது, குறிப்பிட்ட சில வசனங்கள் இருப்பதாக வரும் செய்திகள் முழுக்க முழுக்க வதந்திதான். சத்யராஜின் கதாபாத்திரத்துக்கு அண்ணா என பெயரிடப்பட்டுள்ளது. இதில் எந்த வித அரசியலும் இல்லை. “தலைவா’ அரசியல் கதையும் அல்ல என தெரிவித்தார்.
யாரும் காப்பாற்ற மாட்டார்கள் ,இலங்கை தமிழர் படுகொலைக்கே எவனும் காப்பாற்ற வில்லை ,,,தமிழனாச்சே ,தமிழனுக்கு தமிழன் குழி பறிக்கத்தான் தெரியும் ,,,
இந்த படத்திலே அப்படி ஒன்னும் செக்ஸ் காட்சிகள் இலையே ! ஒரு சாதாரண நடிகனாகிய விஜய் அப்படி என்ன தப்பு செய்தார் ? அட அறிவுகெட்ட அரசியல் வாதிகளா ,என்னாடா அட்சி நடதுறேங்க ,நடிகனை நோண்டியே உங்க பொழப்பு ஓட்டுறேங்கலாடா ,நாசமா போனவனுங்க்கள ,தமிழனுக்கு தமிழந்தாண்டா எதிரி!
படத்தை வெளியிட வில்லைன்னா ,விஜய் ரசிகர்களை ஏவிவிட்டு ,பயங்கர கலவரத்தை உருவாக்க செய்யுங்கள் ,எந்த தரப்பினர் தடை உத்தரவு போட்டார்களோ அவர்களை அரிவாளை கொண்டு தாக்குங்கள் ,,அறிவை கொண்டு தாக்கினால் இவனுங்களுக்கு புத்தி வராது !
ஜெயலலிதாவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது விஜய் ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும். தயாரிப்பாளரே! போய் அவர் காலில் விழுங்கள். இல்லாவிட்டால் அம்மா மன்னிக்க மாட்டார்! இல்லாவிட்டால் அம்மாவுக்கு ஏதாவது ‘பெரிய அளவில்’ செய்யுங்கள். சந்திரசேகர் அண்ணாச்சியும் போய் காலில் விழுந்தால் தான் காரியம் நடக்கும்.என்னா செய்வது! பணம் போட்டவன் பாடு தானே திண்டாட்டம்! இனி மேல் விஜய்யை போட்டுப் படம் எடுப்பவர்கள் கொஞ்சம் அதிகம் யோசிக்கவே செய்வார்கள்!