தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
இம்மாதம் 9 ந் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய தலைவா பல்வேறு காரணங்களால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயக்கம் காட்டி வருவதால், முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஒரு படத்தை வெளியிடுவதோ, தடுப்பதோ அரசின் வேலையல்ல. இந்த படத்தை முதல்வர்தான் தடுக்கிறார் என்கிற தோற்றத்தை இங்கே வேண்டுமென்றே சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று அதிமுக தலைவர்கள் சிலர் முணுமுணுத்து வருகிற நேரத்தில், இவரது குரல் ஆட்சி மேலிடத்திற்கு எட்டவே இல்லை.
இந்த நிலையில் படத்தை வெளியிட கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டி சந்திரபிரகாஷ் ஜெயின், படத்தின் ஹீரோ விஜய், டைரக்டர் விஜய் ஆகியோர் தரப்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் ஜில்லா பட ஷுட்டிங் இன்று துவங்கியது. பின்னில் மில்லில் அவர் எதிரிகளை தாக்குவது போல படமாக்கப்பட்டு வருகிறது. இருக்கிற ஆத்திரத்தில் எந்தெந்த பைட்டர்களுக்கு நிஜ அடி விழப்போகிறதோ?
தலைவா தயாரிப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி…! இதுதான் தமிழனின் கேடுகெட்ட புத்தி ! ஒரு சாதாரண தமிழ் படத்திற்கு இப்படியா கேடு நினைப்பது…அதான்hட தமிழனுக்கு சொந்த நாடே கிடையாது! இருந்த நாட்டையும் அடுகு வசிட்டேங்க! சோழ பாண்டியன் ஒரு போட்டிக்காக நாட்டையே கூறு போட்டவணுங்க…இப்படிப் பட்ட தமிழனுங்க்களா தமிழ் இனத்தை காப்பாற்ற போறானுங்க??
நண்பா! தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி படத்தில் முதலீடு செய்திருக்கிறார். அவரின் பெயரைப் பார்த்தால் குஜாராத்தி சேட்டாக இருக்கலாம். தமிழராக இருந்தால் எப்போதோ அப்போல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பார்கள்!
விஸ்வரூபம் இப்போ தலைவன் இது இரண்டுக்கும் அதே கெதி ? நான் நினைக்கிறன் இது போல ஒரு நாடகம் ஆடி மக்கள் ஆர்வத்தை தூண்டி பேரம் பேசி ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு வசூல் வந்தவுடன் படம் பட மேடைகளில் அட்டகாச வசூல் ஆகும். விவேக் சொன்னதுபோல தமிழ் ரசிகர் கூட்டம் மந்தைகளாக இருக்கும்போது கூத்தாடிகளுக்கு கொண்ட்டாட்டம் இதில் ஜெயாவுக்கும் பங்கோ பங்கு .