இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாம் நடித்துள்ள படம் மெட்ராஸ் கபே. வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ள இப்படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளார்களாம்.
அதனால் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், அப்படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தீவிரவாதி போல் சித்தரித்துள்ள வேடத்தில் நடிகர் அஜய்ரத்னம் நடித்துள்ளதால் அவருக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், பிரபாகரன் தமிழர்களின் அடையாளம், விடுதலைப்போராட்ட வீரர். அவர் அப்பாவி சிங்களர்களை ஒருபோதும் கொன்றதில்லை. அதனால் அப்படிப்பட்ட பிரபாகரனை தீவிரவாதி போன்று காண்பித்திருப்பதும், அப்படிப்பட்டதொரு வேடத்தில் அஜய்ரத்னம் நடித்ததும் கண்டிக்கத்தக்கது.
அதனால் அஜய்ரத்னத்துக்கு இயக்குனர்கள் வாய்ப்பளிக்கக்கூடாது. தமிழக ரசிகர்களும் அவர் நடிக்கும் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உன் நடிப்பு திறமையை காட்டி நீ ஒரு பச்சோந்தி என்பதை அடையாளம் கட்டிவிடீர். அழிந்து போ, சாபம் விடுகிறேன்.
ஹிந்து மக்கள் கட்சி எதிரக்கிறதா ? தமிழர் கட்சி அல்லவா எதிர்க்கவேண்டும் ! அப்பாவி ஈழ மக்களை சிங்களம் ராணுவம் கொல்லும்போது ,எந்த ஹிந்து கட்சியும் வாய் திறக்கவில்லையே !