சேரனின் கண்ணீருக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. கடந்த பத்து நாட்களாக கோர்ட் உத்தரவின் பேரில் பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த தாமினி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது விருப்பம் என்ன? காதலனுடன் செல்வதா, அல்லது பெற்றோருடன் செல்வதா? என அவரிடமே கேட்கப்பட்டது. தாமினி பெற்றோருடன் செல்வதாக கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்துருவின் வழக்கறிஞர் சங்கரசுப்பு, அவரது மனதை கலைத்துவிட்டதாகவும் தாமினியை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, சந்துருவுக்கும் தாமினிக்கும் இன்னும் மணமாகவில்லை. எனவே தாமினி எதை விரும்புகிறாரோ, அதை இந்த கோர்ட் அனுமதிக்கிறது என்று கூறிவிட, வேறு வழியில்லாமல் அடங்கியது சந்துரு தரப்பு.
இன்று மாலை தன் அப்பா சேரனுடன் சென்றார் தாமினி. நிஜத்தை புரிந்து கொள்ள அவருக்கு கிடைத்த கால அவகாசம் அவசர கோலத்தில் பள்ளத்தில் விழும் எத்தனை பெண்களுக்கு கிடைக்கும்? அந்த வகையில் தாமினி ஏதோ புண்ணியம் பண்ணியவர்தான் போலிருக்கிறது.
என் மகள் பிறந்த போது அடைந்த சந்தோஷத்தை விட இன்று பன்மடங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்றார் சேரன்.
இனியாவது புத்தியோடு பிழைத்துக்க பாரு கண்ணு.பெத்தவங்க மனசு நோக நடக்கக் கூடாது.சின்ன வயசுலே எடுக்குற எல்லா முடிவும் சரியா இருக்கும்னு நினைக்கக் கூடாது.பெத்தவங்க இதுநாள் வரைக்கும் எவ்வளவோ செய்திருப்பாங்க.உன்னுடைய கல்யாணத்துலேயா தப்பு பண்ணிடப் போறாங்க…..? திரு சேரன் அவர்களே….!!! ஊருக்கு மட்டும்தான் உபதேசம் தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டும் இல்லை என்பது போல இருப்பது தவறு. ரொம்பாதான் படுத்திட்டா.சும்மாவா சொன்னாங்க பெரியவங்க…” பிள்ளையை அடிச்சி வளர்க்கணும் ; பொண்ணை பூட்டி வளர்க்கணும்.னு ” . இனியாவது புத்தியோடு பிழைத்துக்க பாரு கண்ணு.பெத்தவங்க மனசு நோக நடக்கக் கூடாது.சின்ன வயசுலே எடுக்குற எல்லா முடிவும் சரியா இருக்கும்னு நினைக்கக் கூடாது.பெத்தவங்க இதுநாள் வரைக்கும் எவ்வளவோ செய்திருப்பாங்க.உன்னுடைய கல்யாணத்துலேயா தப்பு பண்ணிடப் போறாங்க…..? திரு சேரன் அவர்களே….!!! ஊருக்கு மட்டும்தான் உபதேசம் தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டும் இல்லை என்பது போல இருப்பது தவறு. ரொம்பாதான் படுத்திட்டா.சும்மாவா சொன்னாங்க பெரியவங்க…” பிள்ளையை அடிச்சி வளர்க்கணும் ; பொண்ணை பூட்டி வளர்க்கணும்.னு ” .