மும்பை, ஆகஸ்ட். 27- மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ஆம் தேதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி குறித்து, பல ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் கோபத்தை இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சோனம் கபூரும் ஒருவராவார்.
இவர் நடிகர் அனில் கபூரின் மகளாவார்.முன்னாள் மாடல் அழகியான இவர், பிரான்ஸ் நாட்டு அழகுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான லோ ரியலின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார்.
மும்பையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்காக தான் மிகவும் வெட்கக்கேடாக உணருவதாகவும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் சோனம் கபூர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இவரது தலைமையில் ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் உட்பட பலர் ஒரு ஊர்வலம் நடத்தினர்.
ஜோகர்ஸ் பூங்காவிலிருந்து கார்ட்டர்ஸ் சாலையில் இருந்த திரை அரங்கு வரை நடந்து சென்ற இவர்கள், ‘கற்பழிப்புக்கு எதிரான இந்தியா’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் தாங்கிச் சென்றனர் பாடகி சோனா மகோபத்ரா,கன்னட நடிகை ரேஷ்மா டிசோஸா,டிவி நடிகர் கரன்வீர் போரா, டீஜே சிது, குஷால் பஞ்சாபி, தலிப் தஹில்,பாபா சித்திக் போன்றோர் இவருடன் இணைந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அரபு நாடுகள் மாதிரி சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.
சோனம் கபூர் உங்களைப் பாராட்டுகிறேன்! உங்களுக்கு இருக்கும் வசதிக்கு இந்த ஊர்வலத்திற்குத் தலைமை தாங்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் மக்கள் நலன் கருதி செயல் படுகிறீர்களே அந்த நல்ல மனசுக்காக எமது வாழ்த்துக்கள்!
60 -80 களில் வந்த ஹிந்தி திரைப்படங்கள் போலவா இப்போது படமெடுகிறார்கள்? ஆபாசத்தின் உச்சிக்கே போய்விட்டது ஹிந்தி படங்கள். திரை ரசிகர்களை காம வெறியர்களாக ஆக்கிவிட்டதும், பல கொடூரங்களை செய்ய தூண்டி விட்டதும் இந்த நாசமா போன ஆபாச காட்சிகள் கொண்ட படங்களே!! இப்போது தமிழ் படங்கள் கூட ஹிந்திக்கு நிகராக உள்ளது. மொத்தத்தில் இந்திய சினிமா துறையின் திசை மாறி போய்விட்டது . காம களியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டது.