இப்போதெல்லாம் ரசிகர்கள் ரொம்ப தெளிவானவர்களாக இருக்கிறார்கள். உலக அளவிலான சினிமாக்களை, இசையை கேட்பதால் அவர்களது ரசனையும் உலகதரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. ஆனால், அப்படி அவர்கள் உலக அளவிலான படைப்புகளை பார்ப்பது இங்குள்ள காப்பி கலைஞர்களுக்கு பெரிய தலைவலியாகி வருகிறது.
குறிப்பாக, கம்போசிங் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்லும் சில இசையமைப்பாளர்கள், அவர்கள் செல்லும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரபலமான ஆல்பங்களில் இருந்து நல்லதை சுட்டுக்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் அதை வெளியிடும்போது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று மோப்பம் பிடித்து விடும் ரசிகர்கள், சம்பந்தப்பட்ட பாடல்கள் எந்த இசையமைப்பாளர் மூலம், எந்த ஆல்பத்தில் இடம்பெற்றது என்பதை புடடு புட்டு வைத்து விடுகிறார்கள்.
அப்படி, மின்னலே படம் மூலம் என்ட்ரி கொடுத்த அந்த இசையமைப்பாளரை, நம்முடைய இளையதலைமுறை ரசிகர்கள் திட்டோ திட்டென்று திட்டி வருகிறார்கள்.
அதிலும் சிலர் பேஸ்புக்கில், அவர் எந்தெந்த படத்திற்கு எந்தெந்த ஆல்பத்தில் இருந்து பாடல்கள் சுட்டார் என்பதை பட்டியலிட்டு காட்டுகிறார்களாம்.
இதனால் செம டென்சனில் இருக்கிறார் மேற்படி இசைமைப்பாளர். இதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலோ அல்லது மறுப்பு சொல்லிக்கொண்டிருந்தாலோ நமக்குத்தான் நஷ்டம் என்பதால் கண்டும் காணாததும் போல் இருந்து வருகிறார்.
மேலும், இனி, அப்பட்டமாக காப்பியடிப்பதை குறைத்து விட்டு, தனது சொந்த கற்பனை மூலம் அடக்கிவாசிக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம் மேற்படி இசைக்கலைஞர்.
அப்படினா இவர் இசை அமைப்பாளர் கிடையாது ; இசை களவாணி.இப்படியுமா பேர் வாங்குறது….????
சும்மா ஒருவரை குறிப்பிட்டு சாடுவது சரியல்ல. இசை என்பது உலக மயமாகி விட்டது. எந்த மொழியிலிருந்து எந்த மொழியில் களவாடப்படுகிறது என்று சொல்லுவது கடினம். இசை உலகம் எந்த ஒரு உலக இசையையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஒன்றை வியட்நாமிய மொழியில் கேட்டேன். அவர்களின் இசையை எடுத்துக்கொண்டு நம் பண்பாட்டுக்கு ஏற்றவாறு அந்த இசையை மாற்றி அமைக்கிறார்கள். இது காலங் காலமாக நடைபெறுகின்ற ஒன்று. புதிய இசை என்று ஒன்றும் இல்லை. அரைத்த மாவையே தான் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கிறோம்!
இசை ஞானி ரிஷி அவர்களே ! சீனன் கடையில் பழைய ஹிந்தி படப்பாடல் குர்பானி இசையில் சீன மொழியில் பாடலை கேட்டு அசந்துவிட்டேன் ஐயா , போதிவர்மரின் கருத்து சரி !
திரு. நந்தா அவர்களே…..!!! என்ன ஒரு அல்சாட்டியம்? நையாண்டி தனம்….!!! மலையை மதுவுக்கு ஒப்பிடுவதா? மயிலை வான்கோழியுடன் உறவிட்டு சொல்வதா? அந்த சிங்கத்தை இந்த சுண்டெலியுடன் ஒன்று சேர்ப்பதா?அவர் எங்கே? நான் எங்கே? இந்த ரிஷி “இசை ஞானி” கிடையாது. ( இன்னொரு பதிவில் ) “அண்ணலும் ” கிடையாது . நான் எப்பவும் உங்களுக்கு நண்பன் மட்டுமே.நிற்க திருட்டு சிறியதாக இருந்தால் என்ன? பெரியதாக இருந்தால் என்ன?,திருட்டு திருட்டுதானே…!!! அது ஆரோக்கியமற்ற செயல்தானே…??? ” கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகலாமா? ” ஒன்று ரெண்டு இசையை சுட்டிருந்தாலும் பரவாயில்லை.படத்துக்கு படம் சுட்டுயிருக்கிறார்.அப்படினா அவர் இசை களவாணி இல்லாமல் இசை கலை வாணியா? போங்கப்பா நீங்களும் உங்கள் ஞாயமும்..!!!!அவருக்கு நீங்கள் ஒத்து ஊதுவது சரியில்லை. அவர் இசை அமைக்கும் இசைக்கு சம்பளம் உண்டுதானே….!!! அப்படினா அது சொந்த சரக்கா இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? இது எனது வெளிபாடு. போதிவர்மன் கருத்தை நான் அமோதிக்கிறேன். ஆனால் தப்பு தப்புதான். யாராக இருந்தாலும் சரி திருட்டு திருட்டு தான். அது எதுவாக இருக்கட்டும். ( நந்தா சார் அதுக்காக அடுத்த பதிவில் என்னை ” கலியுக நக்கீரன்” என்று அடைமொழி இட்டு அழைக்கக் கூடாது.
ரிஷி அவர்கள் ‘ ஓவராக புகழ்வது எனக்கு பிடிக்கவில்லை ! பழைய பாடல் மெட்டை உருவி அடிப்பதால்தான் ,புதிய இசை அமைப்பாளர்கள் அதிகமாக உருவாகி விட்டார்கள் ! தரம்மும் நிரந்தரம் இல்லாமல் போய் விட்டது !
நன்றி நந்தா சார் அவர்களே..!!! இனி நான் என்னை அறிந்து ; அளவாக எழுதுகிறேன்.செய்திகளுக்கு மட்டுமே விமர்சனம். பிறர் கருத்துக்கு அல்ல.இனி இதுவே எனது கொள்கை.: பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது பயனற்றது.