கலைஞர்களின் படைப்புகளை பயன்படுத்தி நன்றி என டைட்டில் போடுவது நொண்டி, மொடம் போன்றது: இளையராஜா

ilayaraja1தமிழ் சினிமாவில் இசைஞானியான திகழ்பவர் இளையராஜா. இவர் 950-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஒரு ரேடியோ எப்.எம். உடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் விடையளித்தார்.

இளையராஜாவுக்குள்ளும் ஒரு கதையாசிரியர் இருக்கிறாராமே? என்று கேட்டதற்கு, கதையாசிரியர் இருக்கிறார். ஆனால் இசை மட்டும்தான் எனக்கு தெரியும் என்றார்.

மேலும், சமீபத்தில் பாடகர்கள் தாங்கள் பாடும் பாடலுக்கு ‘ராயல்டி’ கேட்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தினார்களே? என்று கேட்டதற்கு,

அவர்கள் பாடியதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வேறு எதற்கு ராயல்டி. ராயல்டி கேட்பது அவர்களை உரிமை. அதனால் கேட்கிறார்கள்.

உங்களைப்போன்ற மிகச்சிறந்த படைப்பாளர்களின் படைப்புகளை தற்போது சிலர் பயன்படுத்தி விட்டு நன்றி என்று போட்டுக்கொள்கிறார்களே? இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,

இப்படி அடுத்தவர்களின் படைப்புகளை பயன்படுத்திக் கொண்டு ‘நன்றி’ என்று போடுவது, நொண்டி, மொடம், கையாளாகாத தனம் என்றார்.

இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் டெக்னாலஜியை பயன்படுத்துவது பற்றி தாங்கள் கூறுவதென்ன என்று கேட்டதற்கு,

டெக்னாலஜியை பயன்படுத்துவன் மூலம் இளம் இசையமைப்பாளர்கள் சோம்பேறியாகிறார்கள் என்றார்.