-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 5, 2013.
தமிழும் சீனமும் உலகின் மூத்த மொழிகள். இவ்விரண்டு மொழிகளுமே அவற்றின் தாயகமான இந்தியா, சீனா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே பள்ளிகளில் முழு நேரமாகப் போதிக்கப் படுகின்றன.
இவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகவும் விளங்குகின்றன. இது அவ்விரு மொழிகளுக்கும் கொடுத்த முக்கியத்துவதுத்துடன், மலேசிய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது நாள் வரையில் கடை பிடித்து வந்த வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கோட்பாட்டையும் நன்கு பிரதிபலிக்கிறது.
கடந்த 200 ஆண்டுகளாக இந்நாட்டில் வேறூன்றிப் படர்ந்திருக்கும் இவ்விரு மொழிகளுக்கும் இப்பொழுது மலேசிய கல்விப் பெருந் திட்டம் வழி பங்கம் வரப்போகிறது.
இந்த மலேசிய கல்விப் பெருந் திட்டத்தில் மலாய் மொழிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டி அதனின் கற்பித்தல் நேரம் வாரம் 570 நிமிடங்கள் என ஆகி அதனால் தமிழ்ப் மொழிப் கற்பித்தல் வெறும் 300 நிமிடங்களுக்கு குறைக்கப்படுகிறது. அதோடு அரசாங்கத்தின் ஒரே மொழிக் கொள்கைக்கு இது முதல் கட்ட நடவடிக்கையாக அமையவிருக்கிறது என்பதனை பலர் அறியாமலிருக்கின்றனர்.
இது தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையை பாதிப்பதோடல்லாது நாளடைவில் தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் படிப்படியாக மூடுவிழா காண வழி கோலும் திட்டமாகும்.
தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மௌனம்!
இந்தப் பெருந்திட்டத்தை அமுலாக்குவதற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதனை நடைமுறைப் படுத்தியே தீருவோம் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறியிறுப்பது மேலும் இதற்கு வலு ஊட்டுவதாக அமைந்துள்ளது.
இதை மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றமும் (டோங் ஸோங்), சீனப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றமும் கடுமையாக எதிற்கும் வேளையில் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றம் ஒப்புக் கொள்வது போல மௌனம் சாதிப்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியிலும், தமிழ்மொழியை காப்பதிலும் அதிக அக்கறைக் காட்ட வேண்டிய தலைமை ஆசிரியர் மன்றம் தனது எதிர்ப்பையோ கருத்தையோ கூறாதிருப்பது தமிழ் மொழியின் மேல் அவர்களுக்கிருக்கின்ற அறியாமையையும் , அக்கறையின்மையும் காண்பிக்கிறது.
மலேசிய நாட்டில் எத்தனையோ தமிழ் மொழி சார்ந்த அரசு சார இயக்கங்கள் இருந்தும், தமிழ் அறவாரியமும், சுவாரம் தலைவர் கா. ஆறுமுகமும் தவிர வேறு யாரும் இதில் அக்கறை கொள்ளாதது மிகவும் வேதனை அளிக்கிறது. மலேசிய இளைஞர் மணிமன்றம், மலேசியத் திரவிடர் கழகம், மதியழகன், சம்பந்தன் பஞ்சமூர்த்தி ஆகியோருடன் உள்ள ஐபிஎப் கட்சிகள், தனேந்திரனின் மக்கள் கட்சி, ,கேவிஎஸ்ஸின் பிபிபி கட்சி, கிம்மா இயக்கம், இவைகள் யாவும் இந்தப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்ததாகத் தெரியவில்லை. செனட்டர் பதவிக்கும், மானியங்களுக்கும் பிரதமர் நஜீப்பை நாடும் இவர்கள் தமிழ் மொழி ஓரம்கட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்கின்றார்கள் என்பது புரியவில்லை? நாட்டில் என்ன நடக்கின்றது என்று இவர்களுக்கு தெரியவில்லை போலும்.
அரசியல் கட்சியாக இருந்து கொண்டு ஆட்சியில் பங்கு கொண்டுள்ள மஇகாவோ தனது திருவாயை இதுவரை திறக்கவில்லை. தமிழ் மொழி இந்த நாட்டில் நிலைத்திருப்பது ம.இ.காகாரர்களுக்கு உடன் பாடு இல்லை போலும். ம.இ.கா என்கின்ற கட்சி இது நாள் வரை தமிழ் மொழியைக் காப்போம் தமிழ்ப் பள்ளிகள் அழியவிடமாட்டோம் என்றெல்லாம் வாய் கிழிய கத்தி வந்துள்ளனர். இப்பொழுது தமிழுக்கும், அதனை வளர்க்கும் பள்ளிக்கும் ஆபத்து என்ற நிலையில் மௌனமாகிவிட்டனர்.
தமிழ் சார்ந்த அமைப்புகளும், தமிழ் மேல் பற்றுள்ள அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தேசிய மொழியாகிய மலாய் மொழி முன்னிலைப்படுத்த வேண்டுமென்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், அதே வேளையில் அது தாய்மொழிப் பாடத்தில் ஊடுறுவித்தான் அதனைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து அதற்கு தகுந்த வழி காணவேண்டும் என்பது எனது கருத்து.
தமிழன் இதுவரைக்கும் எதுக்கு சார் வாயை திறந்திருக்கான்..!!! நம்ம ஆளுங்க..சாபிடுவதக்கும் ..ஊரு கத பெசுவதக்கும் தான் வாயை ரெடியா வைச்சிரூபாங்க…! மத்தபடி அடுத்த இனத்துக்கு எதூம் கூஜா- கிஜ துக்கனுமா குப்பிடுங்களேன்..தூ வந்துதேன்னு ஓடியாந்துருவாங்க பிக்களிங்க..!!!
தமிழ் பள்ளிகளை உடைத்தனர்,கோவில்களை உடைத்தனர்,தமிழ் சரித்திரம் அளித்தனர்.. இப்பொழுது தமிழ் மொழிக்கு ஆப்பு வைக்கின்றனர். அம்னோவை ஒலிக்க வேண்டும்..
ஐயா குலசேகரன் அவர்களே,
தமிழ் பால் கொண்டுள்ள அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.
உங்கள் போராட்டத்தின் பிரதிபலிப்பு பேராக் தமிழ் பள்ளி
நிலப்பிரச்சனைக்கு ஒரு திருப்பு முனையை கொண்டுவந்துள்ளது. வாழ்த்துகள்.
புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு பாதிப்பு வருகிறது என்பதை உணர முடிகிறது ஆனால், எவ்வகையில் பாதிக்கப்படுகிறது என்பதனை யாரேனும் சற்று தெளிவாக விளக்கினால் நமது இந்திய சமுதாயத்துக்கு புரிய வாய்ப்புண்டு. கல்விக் கொள்கையில் தமிழ் மொழியைப்பற்றி என்ன குறிப்பிட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்துக்கு இந்த கல்விக் கொள்கையில் எதிர்ப்பு இருந்தாலும் அதனை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வது கடினமே. அரசாங்க ஊழியர்கள் அல்லவா. எதிர்த்தால் அவர்களுக்கு பாதிப்பு வருமல்லவா. அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதே!!
ஐயா,
இயன்றால் மாபெரும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள். தமிழ் பள்ளியின் பால் தொடர்புடைய அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுங்கள். யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்தீர்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிவியுங்கள்.
நமது தமிழ் கல்விக்காக ஒரு சேர்ந்து எடுக்கும் முடிவினை அரசாங்கத்துக்கு தெரிவிப்போம்.
இன்றைய சூழ்நிலையில் நமது மொழிக்கு நாமே ஆதரவு கொடுக்கவில்லையென்றால், கூடிய விரைவில் தமிழன் என்ற ஓர் இனம் இருந்ததாக தொல்பொருள் காட்சியகத்தில் இடம் பெறுவது திண்ணம்..
தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவன் பி எண்ணின் காலை பிடித்து படம் எடுத்து பத்திரிக்கையில் போடுவதில் தான் மும்முரம் காட்டுவன். ம இ கா காரனுங்க்களே சொல்லவே வேண்டாம். அரசு சாரா இயக்கங்க்களும் எதிர்கட்சிகளின் அழுத்தம் மட்டுமே இவன்களின் கொட்டத்தை அடக்க முடியும். இப்போல்துள்ள மலாய் மொழி ஆங்கில மொழியைப் போல அல்லவா அழிவை நோக்கி செல்கிறது. உண்மையில் அமோளியில் அக்கறையுள்ள மடையன்கள் அதன் தனித் தன்மையாவது காப்பாற்ற வேண்டுமே? அவ்வளும் நடிப்பு.
தயவு செய்து ‘மலேசிய கல்விப் பெருந்திட்டம்’ பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். நாளிதழ்களிலும் அதனை வெளியிடவும்.
மதிப்பிற்குரிய மாண்புமிகு குலசேகரன் அவர்களே, உங்களது மொழிப்பற்றும் இனப்பற்றும் போற்றத்தக்கது. இதில் பாதியாவது நமது ம.இ. கா வினருக்கு இருந்தால் நமது இனமும், மொழியும்,கலாச்சாரமும் காப்பாற்றப்படும் …..ஆனால் அதில் நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது!!. தமிழ் மொழியையும் பள்ளிகளை காப்பாற்றும் நோக்கமும், அதற்குரிய தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படும் அதே வேலை , நமது குழந்தைகளை தமிழ் பள்ளியில் அனுப்பப்படுவதையும் ஒரு தலையாய கடமையாக , நடவடிக்கையாக இந்த சம்பந்தபட்ட இயக்கங்களும் தலைவர்களும் மேற்கொள்ளவேண்டும் ….செய்வார்களா ? இதற்காகவாவது ஒன்று சேர்வார்களா? ..இல்லை இதற்கும் நாற்காலி சண்டை போடுவார்களா? ஸ்ரீ பிஷ் தானா மலாய் பள்ளியில் நடந்த மூன்றந்தர கேவலமான பிரச்சனைக்குப் பிறகு நமது இனத்தில் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கும் என நம்புவோம் !! சரி…நீ முதல்ல உன் பிள்ளைகளை எங்கு சேர்த்தாய் என்ற கேள்வி!!……எனது 3 அருமை பிள்ளைகளும் தமிழ் பள்ளிகள்தான்…மிகச்சிறப்பாகவே படிக்கிறார்கள். வாங்கையா….சிறப்பான , ஆக்ககரமான பிரச்சார நடவடிக்கையில் இறங்குவோம் . நாலு பேருகிட்ட ‘உங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேருங்க , பிஷ்தான மலாய் பள்ளியில் நடந்த கேவலம் நமது தமிழ் பள்ளியில் நிச்சயம் நடக்காது, கலாச்சரதொடு இன, மொழி பற்றோடு நமது பிள்ளைகள் நன்றாக வருவார்கள்’ என்ற நம்பிக்கையோடு பேசுவோம். அதுவே மிகச்சிறப்பான பிரசார இயக்கம்…தலைவர்கள் செய்கிறார்களோ இல்லையோ…நாம் நாலு பேருகிட்ட பேசி நமது கடமையை செய்வோம்…வாங்க! உடனே செய்வோம்.! தலைமை ஆசிரியர்களே , தமிழ் பள்ளி ஆசிரியர்களே…நீங்களும் தயாரா?
இதில் முக்கிய பங்கு பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுக்கு உண்டு. வேற்றுமைகளையும் பகைமைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு , தமிழுக்காகவும், இந்த இனத்திற்காகவும் பிரச்சார இயக்கித்தில் இறங்கவேண்டும். வீடு வீடாக பிரச்சாரத்தில் இறங்கவேண்டும். அதே நேரத்தில் பள்ளியோடு இணைந்து நமது பள்ளியை சீர் செய்யுங்கள் . மலாய் பள்ளியில் அவன் அதை செய்கிறான் இதை செய்கிறான், அரசாங்கம் அதை கொடுகிறது , இதை கொடுக்கிறது என்ற கூப்பாடு இனி தேவையில்லை. அவன் நமக்கு நமக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தரவில்லை! ஒன்று மட்டும் நிச்சயம்… அவன் மாறவே மாட்டான்! நம்மை இனியும் மதிக்கவும் மாட்டான். அதை விடுங்க…அவன் கொடுப்பதை கொடுக்கட்டும். சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இன்று நமது இன இளைய தொழில் அதிபர்களிடையே ஒரு மிக பெரிய மொழி வெறியும், இன பாசமும் நிறையவே தெரிகிறது. அவர்களை அடையாளம் கொண்டு, அவர்களுக்கு தர வேண்டிய அடையாளத்தையும் , மரியாதையும் அங்கீகாரத்தையும் தந்து இந்த பிராசசர நடவடிக்கை நடந்தால் வெற்றி நிச்சயம். தலைவர்களை நம்பி புண்ணியம் இல்லை, வேலைக்கும் ஆகாது. தமிழ் நாளிதழ்களையும் உடன் இணைத்துக்கொண்டு ஒரு தீவிர புண்ணிய போராக இதனை செய்ய வேண்டும். பெற்றோர் சங்க உறுப்பினர்களே, தலைவர்களே ஒன்று சேருங்கள்…தமிழுக்காக, நமது பள்ளிகளுக்காக ஒன்று சேருங்கள். நம்ம ஆளுங்க சொன்னா கேட்பார்கள். ….நல்லபடியா பேசுங்க, நம்பிக்கையோடு , அக்கறையோடு பேசுங்க, நிச்சயம் மாறுதல் வரும். வாங்கையா..பள்ளியிலே உடனே கூட்டத்தை போட்டு நடவடிக்கையிலே இறங்குங்க. …பகவத் கீதை சொன்னதுதான்….கடமையை செய்…பலனை எதிபார்காதே. …இந்த விஷயத்துலே…இந்த கடமைக்கு நிச்சயம் பலன் உண்டு…அந்த பலன் நமது மொழிக்கும் இனத்திற்கும் நிச்சயம் உண்டு.
தமிழ்ப்பள்ளியையும் தமிழ் மொழியையும் அரசாங்கம் அழிக்காது, நாமே அழித்து விடுவோம். அதற்கு எவ்வளவு காலம் என்பது தற்போதைய கேள்வி. ஒட்டு மோடு மொத்த இந்தியர்களும் தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் வரை தமிழ்ப்பள்ளிக்கும் , மொழிக்கும் எந்த ஆபத்தும் கிடையாது.தமிழ் நாட்டிலேயே தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம் தலைவர்கள் தமிழ் பள்ளிகள் இந்து வழிபாடு தளங்கள் பற்றி கவலை இல்லை ஒன்றும் கேட்காது பேசவும் முடியாது கடும்
மௌன விரதம் எடுகிறார்கள் .
பிஜி தீவுகள் ..மொரிசியஸ் ..ஆகிய நாடுகளில் இன்றும் ஆரம்ப பாடசாலைகளில் தமிழ் போதிக்க படுகின்றது ..தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பகுதி நேர பாடசாலைகளில் தமிழ் போதிக்க படுகின்றது …பிரான்சில் secondary school cretificate பரீட்சை tamil உண்டு
கருத்துகளுக்கு நன்றி. எப்படி செயலில் இறங்குவது பற்றி பேசினால் நன்றாக இருக்கும். இந்த சவாலை (Positive energy) அக
எட்டுதுக்கொள்வோம். இப்பிரச்சனை நமக்குள் உள்ள விழிப்புணர்வை
மற்றும் மொழி, இனம் பற்று பிரதிபலிகிறது. அரசியல் கட்சி, ஆசிரியர்கள் இந்திய மக்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்ஹை தெரிவிக்க வேண்டும். பிரிந்திருத்த நம் இன்று ஒன்று சேருகிறோம். செயலில் இடுபடுவதை பற்றி பகிர்த்து கொள்ளுங்கள். தயவு செய்து தமிழ் நாளிதழை வங்கி
படியுங்கள். விழிப்பாக இருங்கள். நாளிதழில் இதனை பற்றி நிறைய செய்திகளை வெளிபடிதினால் மிகவும் சிறப்ஹகே இருக்கும்.
குலசேகரன் அவர்களுக்கு நன்றி. நான் பேரக் மாநிலத்தில் உள்ள
ஓர்
தமிழ் பள்ளியில்தான் படித்தேன். இப்போழுது நான் அந்த தோட்டத்தை விட்டு வெளிஎர்விதேன். அடிகடி அங்கே செல்வேன்.என்ன கொடுரம். பங்களா மற்றும் இந்தோனேசியர் நிறைய பேர் இருக்கிரர்கேல். நம்முடைய வேலைகள் எல்லாம் அவர்கள் பார்கிறார்கள். மாண்டோர், HA , CC , கவல்கரர்கள் அனைவரும் மலைகரர்களும் வெளிநாட்டு பிரகைகளும்தான்.நோக்கம் நம் மக்களின் வாய்பை பறித்து கொண்டு திய வழியில் ஈடுபடுத்துவது. இப்போழுது நம் இனத்தை அளித்து விடுவதுதான்.
ஆனல், நமது தடயம் தமிழ் பள்ளியும், கோயில்களும்தான். தயவு செய்து அதனை பாதுகாப்போம்.
நம் சமுதாயத்தை நாம் காக்கா வில்லையில் நாளை இந்தோனும் பங்களாவும் நம்மை பார்து சிரிக்கும்.
ம இ க மௌனம் சாதிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ் மொழியில் நாம் அக்கறை எடுக்காவிட்டால் வேறு யார் எடுக்கபோகிறார்கள். வேதனை ! வேதனை !
இந்த கூஜ துகிகள் இருக்கும் வரையில் நம் தமிழுக்கு அழிவு காலம்தான்.மனம் வேதனையாக உள்ளது.
இந்த கூஜதூக்கிகல் இருக்கும் வரையில் நம் தமிழுக்கு அழிவு காலம்தான். மனம் வேதனையாக உள்ளது.
மலேசியாவில் வாலும் தமிழ் மக்கள் நிலையை கண்டு வருந்துகிறேன். நல்ல படித்தவர்கள் தலைவர்களாக வந்து புதிய வழியை காட்ட வேண்டும்.
மாண்புமிகு குலா அவர்களுக்கு நன்றி. தெய்வீகன் உங்கள் தமிழ்மொழி பற்றையும் வரவேற்கிறேன். ஆனால் ஒரு சோகமான செய்தியை சொல்லி வைக்கிறேன். என் உறவுப் பையன் சிறு பிள்ளையிலிருந்தே வெளிநாட்டில் ஆங்கிலம் பேசி வளர்ந்தான். தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்பட்டான். தமிழ் பேசத்தெரியாமல் ஏன் தமிழ்ப்பள்ளிக்கு வந்தாய் என்று அப்பள்ளி ஆசிரியன் மொத்து மொத்தென்று மொத்துகிறானாம். நான் எங்கு போய் முட்டிக்கொள்வது?
தமிழுக்கு முற்றுபுள்ளி… வெச்சங்கே ஆப்பு… சீன சமுதாயேம் போராடுகிறார்கள்… தமிழ் தலைமை ஆசிரியர்கள் வீட்டுலே ஒளிந்துகிட்டு இருகின்றாங்கே… வாயே திருந்து பேசுங்கட… கமலனாதா…. தமிழ் சமுதாயெம் அழிந்தது…
சார் , பினாங்கு காரண் சொன்னது உண்மை. பள்ளிக்கு வரும் முன்பே தமிழ் எழுதப் படிக்க தெரிந்து இருக்க வேணும். இல்லை நம் கண்ணில் ரத்தம்மே வந்துரும், கொடுமையோ கொடுமை. படிக்க லாயக்கு இல்லாதவன் தானே ஆசரியர், படிச்சி கொடுக்க எப்படி தெரியும். சரி நம்பிக்கை இல்லையா, அவர் சேர்ட்டை வாங்கி பாருங்கோ தெரியும். சதா ஆலயத்தை நோண்டினா எப்படி, விடுங்கோ அவுங்க வேலையை அவுங்க செய்யட்டும். குலசேகரன் சார் நீங்க மனுஷன் சார். போராட்டம்னா உடம்புளே வேகம் வரும் ஆனா இவுங்க, காலுல மூத்ரம் வரும். அரசாங்க ஊழியர்க்கு வருமானம் போயிரும், குடும்பம் இருக்கு, வீட்டுக்கு பணம் கட்டனும் காடிக்கு பணம் கட்டனும். ஆனா போராட்ட வாதிக்கு ஒன்னும் இல்லே அப்டிதானே? வாத்யார் உத்தியோகம் கிடைச்சதும், எப்படி பிள்ளைகளை மலாய் பள்ளிக்கு மாத்ரதையும் கத்துகிட்டு தான் வர்றாங்கோ. நல்லா கவனிச்ச தெரியும். விளையாட்டு டான்ஸ் சிறந்த தேர்ச்சி, எல்லா டீச்சர்கு வேண்டிய, ஸ்போன்செர் பிள்ளைகள் தான் பார்க்கலாம். அப்புறம் எப்படி சார் நம்ம பிள்ளைகள், போற போக்க பார்த்தா இந்தோனேசிய தமிழர் போல் மலாய் மொழியில் தான் கோயில்லே பிரார்த்தனை செய்யணும், பேசணும் பழகனும். எவ்ரி தமிழனும் தானா வரணும், தமிழ் பள்ளி-தமிழ் பள்ளி என்று கத்துரோம் ஆனா மலாய் பள்ளியில் சேர்க்குராங்கோ ப்ரோபெலம் வந்தா தமிழர் கிட்டே வராங்கோ.
புதிய கல்வி பெருந்திட்டம் யார் அப்பன் வீட்டு சொத்து ? முஹிடின் அடுத்த பிரதமர் ஆவதற்கு மலாய்காரஅம்னோ பேராளர்களிடம் மக்கள் மெச்ச போடும் அரசியல் விளையாட்டு.இதை படித்த கல்வி மான்கள் ஆகா ஓகோ என்று செய்தி தருவதும் எதோ இத்திட்டம் உலக பெருமை சேர்க்க போவதாக அலட்டிகொள்ளும் அவலம் மறுபடி மத்தடி படும். இன்னொரு புதிய கல்வி அமைச்சர் மேலும் மாற்றுவர்.உலகில் மலேசியாவில் மட்டுமே கல்வி குழப்பம் அதிகம் உள்ளது கின்ன்ஸ் புத்தகம் பத்தாது !