கமலஹாசனின் ‘விஸ்வரூபம்2’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்துக்கும் இதுபோல் சர்ச்சைகள் ஏற்பட்டன. முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டின. இதையடுத்து படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிய பிறகு படம் வெளியானது. அதுபோல் ‘விஸ்வரூபம் 2’ படமும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த படத்தையும் கமலே இயக்கி நடித்துள்ளார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்–2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.
யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2’ திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய முஸ்லிம்கள் காயப்பட மாட்டார்கள். விஸ்வரூபம் 2 காயடிக்கப்பட்டால் கூட இங்கு வர வாய்ப்பில்லை! அதற்கென்ன, வழியா இல்லை பூமியில்!
வேண்டுமென்றால் வேரிலும் காய்க்கும்..
அதுதான் கள்ள வி சி டி இருக்கே!!!!
படமே வெளியாகவில்லை அதுக்குள்ள முஸ்லிம் அன்பர்களின் மனது காயம் padithurucha , என்ன கொடுமை சார் இது.