பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான விஷால் மருத்துவமனையில் சிகிச்சை!

madha gaja raja lyrics magicalsongsவிஷால் நடித்த மதகஜராஜா நிதி சிக்கலில் சிக்கி ரிலீசாகாமல் இருந்தது. விஷாலே அந்த படத்தின் நிதி சிக்கலை தீர்த்து தனது விஷால் பிலிம் பேக்டரிக்கு வாங்கி இன்று (செப்டம்பர் 6) ரிலீசுக்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து ஏற்பாடு செய்தார்.

விளம்பரத்துக்கே சில கோடிகளை செலவு செய்தார். ஆனால் அப்படி இருந்தும் படத்தின் சிக்கல் தீர்ந்தபாடில்லை.

அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் இப்போது வரிசை கட்டி நிற்கிறார்கள். தங்கள் கடனை கொடுத்துவிட்டுத்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான விஷால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு சென்றார்.

மதகஜராஜா வெளிவராத இந்த திடீர் கேப்பை பயன்படுத்திக் கொண்டார் ராம நாராயணன். அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்திருந்த அவரது ஆர்யா சூர்யாவை இந்த வாரமே அதாவது நாளை (செப்டம்பர் 7) வெளியிட முடிவு செய்தார்.

இதையொட்டி படத்தின் பிரிண்டுகளை மதகஜராஜா திரையிட இருந்த தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக இறங்கி விட்டார். எனவே இந்த வாரம் போட்டி வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கும், ஆர்யா சூர்யாவிற்கும்தான்.