21-இல் சினிமா நூற்றாண்டு விழா: ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

cinemaஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னையில் தென்னிந்திய திரைப்படத்துறையின் சார்பில் செப்டம்பர் 21 முதல் 24 வரை நான்கு நாள்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கல்யாண் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். 23 ஆம் தேதி ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட சாதனையாளர்கள் கெüரவப்படுத்தப்படுகிறார்கள். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். இவ்விழாவையொட்டி18 முதல் 24 ஆம் தேதி வரை படப்படிப்பு ரத்து செய்யப்படுகிறது.