பாஸ் கட்சியாக மாறும் அம்னோ, அம்னோவாக மாறும் பி.கே.ஆர்.

இராகவன் கருப்பையா -15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமயம், இனம் தொடர்பான 'அரக்கன்' எனும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பொது மக்கள் எவ்வளவுதான் சமய, இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ முற்பட்டாலும் அதனை சீர்குழைத்து நடுவில் குளிர் காய்வது காலங்காலமாக…

மித்ராவை பற்றி பேசினால், ஏன் ம.இ.கா.வுக்கு ஏன் கோபம் வருது?

இராகவன் கருப்பையா - வசதி குறைந்த இந்தியர்களின் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட மித்ரா நிதியை சம்பந்தமே இல்லாத சில பேர் பிரித்து மேய்ந்துள்ள நிலையில் அரசாங்கமும் அதற்குத் தெளிவான ஒரு விளக்கத்தைத் தர இயலாமல் அந்த விவகாரம் இன்னமும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. [caption id="attachment_194812" align="alignnone"…

பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அவசியம்

இராகவன் கருப்பையா - சபாவின் நபாவான் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஒரு ஆற்றை எப்படிக் கடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய காணொலிகள் நாட்டை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள 'ராஃப்ட்' எனுப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள்…

தேசிய கராத்தே வீரர் இலமாறன் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளி…

தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இலமாறன் இன்று பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், நமது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார். 22 வயதான அவர், 84 கிலோ எடைக்குக் கீழான ஆண்களுக்கான குமிதே  இறுதிப் போட்டியில்…

உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான விசாரணை, சட்டதிற்கு அப்பாற்பட்டது!  

  கி.சீலதாஸ்-       மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகம்மது நஸ்லான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை ஆரம்பித்துவிட்டதாம். இந்த விசாரணைக்கு அடிப்படையாக இருப்பது இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜா பெட்ரா கமாருடீன் தமது மலேசியா டுடே (மலேசியா இன்று) வலைத்தளத்தில் நீதிபதி நஸ்லானிடம் “தெளிவற்ற…

மலேசிய சிறையில் மரணம், சிங்கப்பூரிலும் அவலம்!

இராகவன் கருப்பையா -போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரனின் துயரமான முடிவு நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்து. இச்சம்பவம் அனைத்துலக ரீதியில் அதிக அளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் இதில் பெருமைப்படவோ, கொண்டாவோ, யார் மீதும் கோபப்படவோ ஒன்றுமில்லை.…

தொழிலாளர் வர்க்கத்திற்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் – குலா

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் மலேசியாவில் தொழிலாளர் இயக்கத்தின் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அங்கு கட்டாய உழைப்பு, குறைந்த வருமானம் மற்றும் கீழ்மட்ட ஊழியர்கள் ஏணியில் முன்னேறி அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்றபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். முற்போக்கான ஊதியத்துடன் முழுமையாக்கப்படும் வாழ்க்கை ஊதியத்திற்கு…

மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு…

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடந்த மே தின பேரணி தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக மலேசியா சோசியலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் தெரிவித்தார். தன்னைத் தவிர, மற்ற மூவரும் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கோகிலா ஞானசேகரன், சுபாங் கிளையின் டி மோகன்…

ஹாடி ஹராப்பானை நிராகரித்தார்: ‘அவர்களின் கூடாரத்தில் எலிகளும் பூனைகளும் உள்ளன’

பாஸ் கட்சியின்  தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த  பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக நேராகப் போராடும் பக்காத்தான் ஹராப்பானின் ‘பெரிய கூடாரத்தின்’ கீழ் ஒத்துழைக்க முடியாது என்று காட்டமாக கருத்துரைத்தார். பாஸ் அந்த 'பெரிய கூடாரத்தில்' சேராது, மாறாக முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்சிகளான பெர்சத்து மற்றும்…

துபாய் நிகழ்வின் பின்னணியில் ஒரு திறனற்ற அரசின் அடையாளம்!

இராகவன் கருப்பையா - கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புற ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து முஹிடின் தலைமையிலான அரசாங்கம் மட்டுமின்றி அதன் பிறகு சப்ரி தலைமையிலான அரசாங்கமும் திறமையற்ற அமைச்சர்களிடம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கும் அவலத்திற்கு ஒரு முடிவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. கடந்த மாத பிற்பகுதியில் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு…

தெலுக் இந்தான் தொகுதியில் முருகையாவின் முதல் பரீட்சை

இராகவன் கருப்பையா - சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் இலாகாவில் துணையமைச்சராக இருந்த முருகையா தனது அரசியல் பயணத்தைத் தொடருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார். இப்போது ம.இ.கா.வின் உதவித் தலைவராக இருக்கும் அவர் அடுத்த பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிடுவார்…

60 ஆண்டுக் கால குப்பைகள் சேர்த்தது,  தேசிய முன்னணியா? நம்பிக்கை கூட்டணியா? குலா…

நேற்று என்னுடைய கருத்துக்குப் பதில் தெரிவிக்கும் வகையில், எங்களின்  22 மாத கால ஆட்சி “குப்பை” என்றும் அவற்றைச் சுத்தம் செய்ய அவரது அமைச்சு முயல்கிறது என்றும் சரவணன் கூறியிருக்கிறார். பாரிசானின் 60 ஆண்டுக் கால ஆட்சியில் நடந்த சீர் குலைவை சரவணன்  “குப்பை “ என்று சொல்லாமல் சொல்கின்றாரா? சில உண்மைகளை  அவருக்கு நினைவு  படுத்த  விரும்புகிறன். “குப்பை “ என்று…

நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதியை, எம்ஏசிசி விசாரிக்கிறது

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஒரு  விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. விசாரணை தொடங்கப்பட்டதை எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார். தி ஸ்டார் கருத்துப்படி, ஒரு புகார் செய்யப்படும் போதெல்லாம் விசாரணை செய்வது நடைமுறையின் ஒரு…

குட்டையை குழப்பாமலே மீன் பிடிக்கும் அம்னோ!

இராகவன் கருப்பையா -எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் எனும் அம்னோவின் வியூகம் தற்போது மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட், துணைத் தலைவர் முஹமட் ஹசான், முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் ஊழல் வழக்குகளில் மாட்டியுள்ள…

நிரபராதிக்கு வழக்குரைஞர் தேவையில்லை – கி. சீலதாஸ்

தனிப்பட்டவர்களிடையே அல்லது குடிமக்களுக்கும் மாநில, நடுவண் அரசுகளுடன் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே நாடெங்கும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் தனிநபர்களுக்கு உரிமை பரிகாரம் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த உரிமையியல் அதிகார வரம்பு ஒரு புறமிருக்க குற்றவியல் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டு. குற்ற நடவடிக்கை சமுதாயத்திற்கு எதிரானவை என்பதால்…

புதிய புக்கிட் ஈஜோக் பள்ளிக்கு உதவுங்கள்

இராகவன் கருப்பையா- தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகள் அமர்ந்து கல்வி கற்கத் தேவையான மேசை நாற்காலிகள் தேவைபடுகின்றன. செப்பாங், சுங்ஙை பிலேக் வட்டாரத்தில் தேசிய வகை லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிடம் பிரமாண்டமான வகையில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமாகத் திறப்பு விழாக் காண்பதற்கு…

ஜோகூர் மிதிவண்டிகள் அசம்பாவிதமும் மலேசியாவின் இனவாதமும்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜோகூர் பாருவில்,  நடந்த மிதிவண்டிகள் – வாகன விபத்தில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் பின்னணியில் நடக்கும் இனவாத நடப்புகள் மலேசியாவில் மக்கள் குறிப்பாக அரசியல் சார்புடைய வகையில் செயலாற்றும் இனவாதிகள் இந்த நடத்தையை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்று காண்போம். முதலில் இந்த மிதிவண்டிகள் அசம்பாவிதம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். மாமூடியா இடுகாட்டுக்கு அருகில் உள்ள லிங்காரன் சாலையில் நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3 மணியளவில் காரில் பயணித்துக்…

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி விலக வேண்டும்

கி.சீலதாஸ் -  அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூடவே பொது பதவி வகிப்பவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் பதவி விலக வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்குவாதம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிவருவது உண்டு. அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் அல்லது…

 ‘அமெரிக்கா’ மீது பாதுகாவலர் சுப்பிரமணியம் போட்ட வழக்கு – கூட்டரசு…

அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தனது சட்டவிரோத பணிநீக்கம் வழக்கை எதிர்த்துப் போராடுகிறார்  ஒரு சாதரண  பாதுகாவலர். கடந்த மார்ச் 28 அன்று அனைத்து தரப்பினரின் வாய்மொழி சமர்ப்பிப்புகளையும் கேட்ட கூட்டரசு நீதிமன்றம், மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை ஒத்திவைத்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்கிறார், இந்த…

வாழ்வா சாவா போராட்டத்தில் பெர்சத்துவும் பெஜுவாங்கும்

இராகவன் கருப்பையா -நாட்டில் கடந்த இரு வாரகால அரசியல் நடப்புகளை வைத்துப் பார்த்தால் முஹிடினின் பெர்சத்துவும் மகாதீரின் பெஜுவாங் கட்சியும் வாழ்வா சாவா எனும் விளிம்பில் பரிதவித்துக் கொண்டிருப்பது மிகத் தெளிவாக ஊர்ஜிதமாகியுள்ளது. நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுமே படுதோல்வியைத் தழுவியதானது மக்களிடையே அவற்றுக்கு…

கடிகாரத் தொழிலில் கைதேர்ந்த குணாளன்

இராகவன் கருப்பையா- இந்நாடடில் காலங்காலமாக சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் கடிகாரத் தொழிலில் பல்லின மக்களும் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகிறார் ஓர் இந்தியர். கடந்த 20 ஆண்டுகளாக தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் 'குலோரி டைம் எண்டர்பிரைஸ்' எனும் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாகக் கடிகாரத் தொழில் செய்து வரும்…

இக்கட்டான சூழலில் மாட்டித் தவிக்கும் சப்ரி-யின் சகாப்தம்

இராகவன் கருப்பையா- ஜொகூர் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்து என்ன, என்று சிந்திக்கும் போது மிகப் பெரிய சுமையைத் தன் தலையில் சுமந்து நிற்கும் பிரதமர் சப்ரியின் மீதுதான் தற்போது எல்லாருடைய பார்வையும் திரும்பியுள்ளது. நாடாளுமன்றத்தைக் களைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி விட வேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் …