அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் -பகுதி 1

நெட்டானியல் தான் -அரசியல் அரங்கில் இது பரபரப்பான காலம் - நூறு விதமான நாடகங்கள் ஒரே நேரத்தில் அரங்கேற்றமாகின்றன. இந்த விநோதமான நேரத்தில் ஜோகூரின் மந்திரி பெசார் நியமனம் பற்றிய சட்ட ஆய்வை அலசலை நழுவ விடுவது எளிதாகி விடுகிறது. இந்த அலசல் அதிக கவனத்தை ஈர்க்காததற்கு ஒரு காரணம், ஜோகூருக்கு வெளியே உள்ள பலர் (ஒருவேளை ஜோகூருக்குள்ளேயே ஒரு…

மத மாற்றத்தைக் குறைப்பதில் இந்து கோயில்களின் பங்கு

இராகவன் கருப்பையா-  நம் நாட்டில் அறிந்தோ அறியாமலோ சிறார்கள், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்படுவது அண்மைய காலமாக கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும் பிள்ளைகளும் கணவன்-மனைவி விவாகரத்தின் விளைவால் இலக்கு இழந்து பரிதவிக்கும் பிள்ளைகளுமே இத்தகைய பரிதாபகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மாதிரியான சூழலில்…

கூத்தாடிகளாக அரசியல்வாதிகள்: சிறுமைப்படுத்தப்படும் இந்தியர்கள்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கும் போதுதான் இந்தியர்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர் எனப் பல வேற்று இன அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வருகிறது. அரசியல் கட்சிகள் அதிகமாகும்போது, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே, நாடு முழுவதும்  நிறையத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான்…

மலேசியாவின் அரசியல் எதிர்காலம் ஜொகூரின் கையில் – பாகம் II

கி.சீலதாஸ் -  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு அரசியல் கட்சி பெற்றுவிட்டால் அது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மதமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் அவலநிலையை மறக்க முடியவில்லையே. இந்த நிலை மறுபடியும் தலைதூக்கக்கூடாது என்பதில் மலேசிய…

வாழ்நாள் சாதனையாளர்களை வாழும் போதே வாழ்த்தவேண்டும்

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு துறைகளிலும் நம் சமூகத்தினர் புரிந்து வரும் எண்ணற்ற சாதனைகள் உண்மையிலேயே அளப்பரியது. விளையாட்டுத் துறை, அரசாங்கப் பதவி, எழுத்துத்துறை, அறிவியல், தொழில் துறை, மருத்துவம், சட்டத்துறை, புத்தாக்கம், கலைத்துறை போன்ற பலதரப்பட்ட துறைகளில் நம் இனத்தவர்கள் மிளிர்வது பல்வேறு காரணங்களினால் அண்மைய…

அன்புள்ள நஜிப், நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்

பி. குணசேகரம் - அன்புள்ள டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்,  அல்லது நான் உங்களை “அப்பா மாலு போஸ்-கு” என்றும் அழைக்கலாம். அப்படி அழைப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவது போல் தெரிகிறது. வெளிப்படையாகச் சொன்னால்  நீங்கள் வெட்கம் அல்லவா பட வேண்டும். மலேசியாவில் உள்ள மற்ற எவரையும் விட மிகவும்…

பழகிப்போன வெள்ளம்- ஓர் “உலகத் தரமான” தோல்வி

ஆண்ட்ரூ சியா - நேற்று மீண்டும் கோலாலம்பூரில் பழகிப்போன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட்டது. "உலகத் தரம்" நகரமாக இருக்க வேண்டியது ஆனால் இது இன்னொரு தோல்வி, ஏமாற்றம். இந்த பேரிடர் பற்றிய எட்டு முக்கிய குறிப்புகள் இங்கே. 1) சில மலேசியர்கள் பேரழிவில் மகிழ்ச்சி அடைகிறார்கள் வெள்ளப்பெருக்கை…

1எம்டிபி கடனைத் அடைக்க பொது நிதிகளை பாவிக்கவில்லையா?  நஜிப்பின் கூற்றை…

1எம்டிபி கடன்களின் முக்கியத் தொகையை திருப்பிச் செலுத்த அரசாங்கம் பொது நிதியில் ஒரு சென்ட் கூட பயன்படுத்தப்படவில்லை என்று பெக்கான் எம்பி நஜிப் அப்துல் ரசாக் கூறியதை முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மறுத்துள்ளார். 1எம்டிபி கடன்கள் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, எனவே 1எம்டிபி கடன்களைத் திருப்பிச் செலுத்தத்…

கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் ராஜா சூலான், புடு, புக்கிட் ஜலில், கிளாங், கோம்பாக் மற்றும் சுங்கை பூலோ ஆகியவை அடங்கும். ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்) மற்றும் குச்சாய் லாமா ஆகியவை குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாலை 5 மணி…

‘அதிகாலை தாக்குதல்’ விடியாத மக்களாகத் தோட்டத்தொழிலாளர்கள்    

இந்த ஆய்வுக்கட்டுரை, சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா பல்கலைக்கழக மலாயாவின்  வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்த போது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 7, 1981, ஆகஸ்ட் 31, 1957க்குப் பிறகு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாக இருப்பது பலருக்குத் தெரியாது. அப்போது,  பிரதமராக இரண்டு மாதங்கள் மட்டுமே பதவியிலிருந்த டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சில இறுதிச்…

ஊழல் விசாரணையில் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர்

1மலேசியாடெவலப்மென்ட் பெர்ஹாட் (1MDB) நிறுவனத்துடன் தொடர்புடைய நிதியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசியாவின் முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநரின் கணவர் தவ்பிக் அய்மான் சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவ, வெளிநாட்டில் இருக்கும் சாட்சிகள் மற்றும் பல ஆவணங்களை  மலேசியா காவல்துறை கண்காணித்து அடையாளம் கண்டு வருகிறது. புக்கிட் அமான் கமர்ஷியல் சிஐடி துறை இயக்குநர் முகமட் கமருடின் முகமட் டின் , போலீஸ் சம்பந்தப்பட்ட நாடுகளை தொடர்பு கொண்டதாகவும்,ஆனால், தேவையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். " தவ்பிக் மீதான விசாரணை ஆவணம் பூர்த்தியாகி…

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு இறந்த சிறுவனின் பெற்றோரைச் கைரி நாளை…

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு மரணமடந்த ரவினேஷ் குமாரின் பெற்றோரை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாளை சந்தித்து அவர்களின் மகனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடயவியல் அறிக்கையை அவர்களுக்கு வழங்க உள்ளார். அந்த 13 வயது மாணவன் தனது முதல் கோவிட்-19 தடுப்பூசி ஜப் முடிந்து 18 நாட்களுக்குப் பிறகு…

மதமாற்றத்தில் பிள்ளைகள் – யார் காரணம்?

இராகவன் கருப்பையா - பல்லினங்களையும் சமயங்களையும் கொண்ட நம் நாட்டில் மதமாற்றம் என்பது நீண்டகால, விவாதத்திற்குரிய, தீர்க்கப்படாத ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாகச் சிறார்கள், பெற்றோர் இருவருடைய ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்தார்போல் ஒரு நீண்டகாலச் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பதினெட்டு வயதிற்கும் குறைவான பிள்ளைகளை மத…

வரிப்பணத்தை வீணாக்க வழி வகுத்த தேமு-யை  ஜோகூர் மக்கள் தண்டிக்க வேண்டும் – குலா

தேசிய முன்னணி  கூட்டணியில்  ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்த தே மு, இந்த ஓரிரு நாட்களுக்கிடையில்  அந்த நம்பிக்கையை இழந்து இருக்கிறது. அம்னோ துணைத்தலைவர்  முகமட் ஹாசான் பேசிய தோரணையிலிருந்து பார்க்கும்  போது அம்னோ தன் நிலையை  மறு ஆய்வு செய்துவிட்டதாகத்  தெரிகிறது. ஜொகூர் மாநில இடைத் தேர்தலில் …

பிலோமினா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் வியப்புள்ளது – அதோடு ஒரு திகைப்பும் உள்ளது!

பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் இயங்கி வந்த இது 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி  அதிகாரப்பூர்வ தமிழ்ப்பள்ளியானது. பல சிறப்புக்களைத் தமிழ்மொழி ஆர்வலர்களின் வழி அன்று தொட்டே இந்தப்பள்ளியும் பெற்று வருவது பெருமைக்குரியது. அப்பள்ளியின் ஆழமான வளர்ச்சிக்கு…

ஜொகூரின் கையில், மலேசியாவின் எதிர்கால அரசியல் திருப்பங்கள்! – கி.சீலதாஸ்

பொதுவாக மக்களை, குறிப்பாக வாக்காளர்களைக் குழப்புவதில், குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தயங்காது கையாளும் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் வாழ்க்கையில் இந்தக் கலாச்சாரம் தவிர்க்கப்படாத மரபு என்று சொல்லலாம். அரசியல் கலாச்சாரம் அரசியல் கலாச்சாரதெளிவற்ற முறையில் பேசுவது, காலத்துக்கு ஏற்றவாறு எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை…

மக்கள் நீதிக் கட்சி, மூடா கட்சிக்கு எதிராகச் செயல்படாது –…

மக்கள் நீதிக் கட்சி (PKR), மூடா (MUDA) கட்சிக்கு எதிராகச் செயல்படாது – என்ற கருத்தைப்   பாராட்டினார் லிம் குவான் எங். ஜனநாயக செயல் கட்சி (DAP) இதனை வரவேற்பதாகவும், நமது குறிக்கோள் தேசிய முன்னணி (BN)  மற்றும் தேசிய கூட்டணி (PN) கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலாக இருப்பதுதான் என்றார். லார்கின் (Larkin)  தொகுதியில் மக்கள் நீதிக் கட்சிக்கு எதிராக, மூடா என்ற அந்த   இளைஞர் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.…

சாக்கடையில் உழலும் மலேசிய அரசியல்

இராகவன் கருப்பையா - இன்னும் சுமார் 2 வாரங்களில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல் மலேசிய அரசியல் வரலாற்றில்  ஓர் அனல் பறக்கும்  சூழலை  ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு இந்த ஜொகூர் தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் அது ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. அதாவது…

அடிப் மரண விசாரணை – கோயிலில் புகுந்தவர்களை அடையாளம் காட்ட…

நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை  யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அந்த சம்பவத்தின் போது நடந்த…

மதமாற்றத்தில் இந்திரா.. லோ சியூ.. இன்னும் யார்?

இராகவன் கருப்பையா - கடந்த ஒரு மாத காலமாக உள்நாட்டு ஊடகங்களை ஜொகூர் மாநில இடைத் தேர்தல்  தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகிற போதிலும் தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்ஙின் பாசப் போராட்டம் ஒரு பிரதான அங்கமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு…

  குள்ளநரி அரசியலும் நாட்டு மக்களும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் மலேசியர்களிடையே இரண்டு விதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜொகூரைப் பொருத்த வரை முதன் முதலாக இந்தத் தேர்தலில் பதினெட்டு வயதினரின் வாக்களிப்பைக் காண்கிறது. ஜொகூரின் பதினெட்டு வயதினர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதல்ல; அவர்களால் வாக்களிக்க முடிகிறதே என்பதே அந்த மனநிலையின்…