வெளிநாட்டின் உதவியுடன் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதமா?

வெளிநாடொன்றின் உதவியுடன், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதத்துக்கும் மதவாதத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளதா எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், உடனடியாக விசாரணைகளை நடத்தி, சபைக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நேற்றையதினம் பாராளுமன்றில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், மாவனெல்ல புத்தர்…

சமஷ்டிக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!

தமிழர்களுக்கான முழுமையான உரிமைகளை அரசாங்கம் கொடுத்த பின்னரே மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவரும், இந்திய ஒருங்கிணைப்பாளருமான ஃபேர்கஸ் அவுல்ட் இன்று (வியாழக்கிழமை) வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பின் போதே இது…

சுமந்திரன் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. புதிய அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால் எமக்கெதிரான சக்திகள் தலைதூக்கும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

ஈழத்தில் இளம்பெண்களின் ஆபத்தான முடிவுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துவருவது கவலையினை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது. இந்த வருட ஆரம்பத்திலேயே எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் கடந்த 23 நாட்களில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் மட்டக்களப்பு,கல்லடி,நாவற்குடா இசைநடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம்பெண்…

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும்…

நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு கடந்த 14 ஆம் திகதி அப்பகுதித் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காக சென்றவேளை அப்பகுதியில் குடியிருக்கும் பௌத்த துறவிக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.…

கிழக்குஸ்தான் ஆகிறதா தென் தமிழீழம்?

கிழக்குக்கு வந்த சவூதி ஷேக்குகள் தமிழ் பழமொழி ஒன்று உண்டு…. கலியாண வீட்டிலேயே கப்பை கட்டிக் கொண்டு அழுறவன், செத்தவீடு என்றால் சும்மாவா இருப்பான். இந்த படங்களை பார்க்க அதுதான் நினைவுக்கு வருகிறது. கிழக்கில், அரபி கல்லூரி கட்டி, அதில் அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பொறித்த நம்ம…

முதன் முறையாக லண்டன் தமிழர்களால் இன்ரர் போல் பிடியானை- சிங்களவனுக்கு…

வரலாற்றில் முதல் தடவையாக, தமிழர்களின் தூண்டுதலால் இன்ரர் போல் பிடியானை ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. லண்டனில் பிரியங்கவாவை தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. அவர் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியவர். தமிழர்கை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டி. பின்னர் லண்டனில் இருந்து…

முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த சிங்கள நீதிமன்றம்!

முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த இருவருக்கு தலா 25 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ படையணியின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் உட்பட 8 பேரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. குறித்த…

சி.வி.விக்னேஸ்வரன்: “இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்”

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.…

ஈழ வரலாற்றில் நிகழ்ந்த புதுமை பற்றி உங்களுக்கு தெரியுமா?!

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளன. யாழ் – காரைநகர் சாலையில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய குடியேற்றத்திட்ட பிரதேசத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.…

புலம்பெயர் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

சிறிலங்கா இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்பதை புலம்பெயர் தமிழர்கள் ஆதாரத்தோடு தருவார்களா என்று பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார். மேலும் அவ்வாறான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில் அவை தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு தாம் தயாராக இருபதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

அழுக்குகள், பாலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது. அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று பல…

ஈழத்தில் முன்னாள் போராளி கைது; ஆயுதங்களும் மீட்பு!

கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள்…

இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்

இலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. "இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள்…

வடக்கு- கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா அரசு ஏற்பு! வாசுதேவ

வடக்கு- கிழக்கை இணைப்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடரந்து கூறுகையில், “வடக்கு, கிழக்கு…

இணையும் அமெரிக்கா ஸ்ரீலங்கா இராணுவம்; இலங்கை தமிழர்களுக்கும் ஆபத்து?!

இலங்கையில் அமெரிக்க முகாம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட ஆயத்தமாகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த முகாம் அமைப்பதற்கான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி பேச்சுவார்த்தை…

அமெரிக்கா செல்லும் ஈழத்தமிழர்களின் உடலின் எச்சங்கள்!

மன்னார் ‘சதொச’ வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திறமையாகச் செயற்படுகின்றது! கருத்துக்கணிப்பு!!

புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாகச் செயற்படுகின்ற அமைப்பு எது என்று கருத்துக்கணிப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, உலகத் தமிழர் முன்னணி போன்ற அமைப்புக்களின்…

தமிழர்கள் தொடர்பில் முக்கிய கருத்த வெளியிட்ட சீனா!

இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம். இந்நிலையில் இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிஞ்சித்தும் எமக்கு கிடையாது.…

இலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவதிப்படும் தமிழ் மக்கள்!

வட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கும், மனித உடற்சௌகரியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக செயற்படுமாறு காலநிலை அவதான மையம் கேட்டுக் கொண்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் வடக்கின் பெரும்பாலான பகுதிகளில்…

விடுதலைப் புலிகளை இனிமேல் நினைவுகூர கூடாது ! பயங்கரவாத தடுப்பு…

விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை இனிமேல் நடத்தக் கூடாது என்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அச்சுறுத்தியுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான அனுமதியை உங்களுக்கு யார் கொடுத்தது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இனிமேல் விடுதலைப் புலிகளின்…

கூட்டமைப்பால் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே…

வடக்கில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் மக்களின் காணிகள்; இராணுவம் அறிவிப்பு!

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில்…