ஒற்றுமை ஓங்கியதால் ‘ஒப்பாரி ஓலம்’

உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், பல நாடுகள் தங்களது சுதந்திரத்தைப் பல தியாகங்கள், இழப்புகளுக்கு மத்தியிலேயே பெற்றுள்ன. அதிர்ஷ்டவசமாக இலங்கை அஹிம்ஷை வழியில் தனது சுதந்திரத்தைப் பெற்றது. ஆனாலும், துரதிர்ஷ்டமாக பல்லின மக்கள் வாழும் நாட்டில், பன்முகக் கலாசாரத் தன்மை பறிபோய்விட்டது. நாட்டின் ஓரினம், பிறிதோர் இனத்தைப் பல வழிகளிலும்…

பிரதமரிடம் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைகள்! இதெல்லாம் நடக்குமா?

காணி விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவைகள் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆவணம் ஒன்றைக் கையளித்துள்ளார். இந் நிலையில் தனது கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது செயலாளர் ஊடாக பிரதமரிடம் நேற்றுக்…

பொதுமக்கள்காணியை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடன்நிறுத்தவும் வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவசரக்கடிதம்

வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதைஉடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்றஅமைச்சர்டி.எம்.சுவாமிநாதனுக்குவடமாகாணசபைஉறுப்பினர்ப.சத்தியலிங்கம் அவசரக்கடிததெமான்றினைஇன்று (28.05) அனுப்பிவைத்தள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வவுனியா நகரத்திலிருந்து04 கி.மீ தொலைவில்ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய கிராமம்பேயாடிகூழாங்குளம் ஆகும். இங்கு பாடசாலை, பிரதேச்சபையின்உபஅலுவலகம், பொதுநோக்குமண்டபம், கடைத்தொகுதி,மத்தலங்கள்மற்றும் மக்கள் குடியிருப்புகள்…

எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை, எமக்கே உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்

“எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு. அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று, வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமை தொடர்பாக, தென்னிலங்கை அரசியல்வாதிகள் முதலமைச்சர் மற்றும் வடக்கு…

தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள் வட்டமிடுகின்றன:…

‘தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும், வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,…

நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. கே. ஜெயக்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் போராளியையே, கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு…

கோட்டாபயவின் கொடூரங்களை வெளியிட்ட பொன்சேகா..

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரானகோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரானால்நிச்சயம் தோல்வியைத் தழுவுவார் என்றுஅவரது பரம எதிரியான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தப் போவதாக அவரது விசுவாசிகள் அறிவித்துவரும்நிலையில், இது குறித்து ஸ்ரீலங்காவின்…

கண்டனம்…

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களைக் கண்டித்தும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன, அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பல்வேறு…

மீண்டும் தொடங்கிய ஸ்ரீலங்கா அரச படையின் அராஜகம்!

முறிகண்டியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதி 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், படையினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று…

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் ஸ்ரீலங்கா இராணுவம்; மீண்டும் அடக்குமுறை..

நல்லாட்சியிலும் ஊடகவியலாளர்கள் மீதான இராணுவ அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கான சம்பவம் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகளியலாளர்களை…

தடுப்பு மையங்கள் குறித்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் உடன்பாடு செய்கிறது…

தடுப்புக்காவல் மையங்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும், சிறிலங்கா அரசாங்கமும், உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது. இந்த உடன்பாட்டின் மூலம், அனைத்துலக தர நியமங்களுக்கு அமைய, அபிவிருத்தி செய்யும் ஒழுங்கு தொடர்பான அனைத்துலக செஞ்சிலுவைக்…

ஸ்டெர்லைட்: தமிழக மக்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சயில் உள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற இறுதி…

தமிழ் சமூகம் இருந்தமைக்கான அடையாளம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது!

கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான சிந்தனை இல்லாமையினால் தமிழ் சமூகம் இருந்தமைக்கான அடையாளம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.…

நாட்டுக்காகப் போராடிய தியாகிகளை யாரும் கண்டுகொள்வதில்லை!

தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திய போராட்ட வீரர்களை இன்று எவரும் கவனிக்காத நிலைமை காணப்படுவதாக ஜன நாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறன்று அழுத்தப் புண் (படுக்கைப் புண்) காரணமாக மரணமடைந்த முன்னாள் போராளி தேவாவின் குடும்பத்தினரைச் சந்தித்தபின் ஊடகங்களிடம்…

லண்டன் தமிழர்களால் அச்சமடைந்த இலங்கை அதிபர் சிறிசேனா ..

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை.…

பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த…

நினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்

நினைவேந்தல் நிகழ்வொன்றுக்கும், எழுச்சி நிகழ்வொன்றுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசம் உணரப்படாமல், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்’ பிரதான நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்டவற்றை முன்வைத்து புலம்பெயர் தேசங்களில்தான் இதுவரை காலமும் ‘நான் நீ’ என்கிற அடிதடி மோதல்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. கடந்த ஆண்டு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மீள திரும்பியவர்களுக்கு சகல…

“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச்…

சிங்கள தேசம் யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை!

சிங்கள தேசம் தன் இறுமாப்பு மிக்க யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்ததுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் பேயாட்டம் ஆடிய சிங்களபேரினவாதம் இன்னமும் அது தொடர்பில் நியாயப்பாடுகளை ஏற்படுத்தாது பிராயசித்தங்களை தேடிக்கொள்ளாது காலம் கடத்திவரும்…

வெள்ளைக் கொடி விவகாரம் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள், வெள்ளை கொடியோடு சென்று சரணடைந்த விடையமும். பின்னர் அவர் கொல்லப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்களோடு சென்ற சுமார் 25 பேரில் ஒருவரும் உயிருடன் இல்லை. ஆனால் இதனை மோபைல் போனில் வீடியோவாக எடுத்த ராணுவ சிப்பாய் ஒருவருக்கு, 2009ம்…

போர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக்கூற மைத்திரிக்கு வெட்கம் இல்லையா?

"வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழ் மக்களைக் கதறக் கதற திட்டமிட்டுக் கொன்றழித்தது அரச படை. இந்நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லை எனக் கூறுவதில் ஜனாதிபதி மைத்திரிக்கு வெட்கம் இல்லையா?'' என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், ஐ.நா. தீர்மான விவகாரங்களுடன் அதிக ஈடுபாடுடைய ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர். "ஐ.நா. தீர்மானத்தில் போர்க்குற்றம்…

இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த

வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக…

நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப்…

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடே. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சிறிலங்காவில்…