இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
பிரபாகரன் தலைமையில் உருவான கிளர்ச்சிகள் தென்னிலங்கைக்கு எதிரானது இல்லை.. கூறுகிறார்…
பிரபாகரன் தலைமையில் பல கிளர்ச்சிகள் இடம்பெற்றன. அந்த கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாக நான் கூற விரும்பவில்லை. அது வடபுலத்திலே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும் அல்லது அரசியல் தலைமையினருக்கும் சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அல்லது…
ஸ்ரீலங்கா இராணுவத்தினர், தமிழினப் படுகொலை செய்தது உண்மையே, அம்பலப்படுத்திய சிங்கள…
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரச படையினரால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியைச் சேர்ந்த எம்பிலிப்பிட்டிய நகர சபையின் உறுப்பினர் லசந்தி லக்மினி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இறுதிப் போரில் அப்பாவி மக்களை படுகொலை செய்ததாக ஸ்ரீலங்கா அமைச்சரவைப்…
சோகமயமானது யாழ்: கறுப்புக் கொடிகளும் வீதிகளில்…
முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழ்ப்பாணம் முழுவது சோகமயமாக காட்சியளிக்கின்றது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அனுஷ்டிக்கின்றனர். வீதியில் சன நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்…
இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள்!
இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேசரீதியாக ஒரு இறைமையுள்ள நாடாக திகழ்ந்துவரும் இலங்கை அரசு தமது அரசியல் உரிமைகளை பெறும்பொருட்டு நீண்டநெடும்…
சிறிலங்காவுக்கு அனைத்துலகம் நெருக்குதல் கொடுக்க வேண்டும் – விக்னேஸ்வரன் அறைகூவல்
என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று முற்பகல் நடந்த முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல்…
முள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்! காரணம்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் மக்களுக்கு வழங்கிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது அங்கு மழை பொழிந்தவண்ணம் உள்ளது. நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு…
ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சற்று முன் (12.30 PM) நிறைவடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய வடமாகாணம் முழுவதும் ஊர்வலமாக சென்ற நிலையில் இன்று…
இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழப்பு!
போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த நிலை தொடர்ந்தால் நேரடி சாட்சிகள் முழுமையாக அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (15.05.2018) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்…
தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்
முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் நாளை, துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே,…
இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட மே-18 நாளை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்!
முள்ளிவாய்க்காலில் எம் உறவுகளை இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட அந்த நாளை தமிழ் உறவுகள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் எனவும், முள்ளிவாவாய்க்கால் படுகொலை தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஷ்டிப்போம் எனவும் பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார். அத்துடன் மே-18 அன்று காரைதீவில் பாலையடி பிள்ளையார் கோயில் வீதி…
தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் செய்ய வேண்டியது என்ன?
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு 14 அகதிகளை (கடந்த மே மாதம் 5ஆம் தேதி) ஏற்றிவந்த படகோட்டிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பணத்திற்காக இவர்கள் அகதிகளை அழைத்துவந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இரண்டு கைக்குழந்தைகள், இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உள்ளிட்ட…
இறுதி கட்ட யுத்தத்தின் போது நடந்தது என்ன? அதிர்ச்சியான பல…
இறுதி கட்ட யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் உயிரிழந்தவர்கள் யார். எமது தேசத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் அல்லவா. அவர்களை நினைவு கூருவதில் என்ன தவறு காணப்படுகிறது என சுகாதார அமைச்சரும் , அமைச்சரவை இணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த…
தமிழர்களே வாழக்கூடாது என நடாத்தப்பட்ட கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால்!
தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி குறிப்பில் மேலும்…
முள்ளிவாய்க்காலில் அழுவதற்குக் கூட அநாகரிக அரசியல் அடம்பிடிக்கிறது..
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய திட்டமிட்ட மனித இனப்படுகொலை ஆகும். உறவுகளை இழந்தவர்களை நெருக்கடியின்றி இயல்பாக அழுவதற்கு வழிவகுக்க வேண்டியதே எமது தார்மீக கடமை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளாா். இன்று செவ்வாய்க்கிழமை(15-05-2018)…
உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்
முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும். உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’. தமிழ் இனத்தினது விடுதலை…
அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை
உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல்…
காணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை வெளியிட்ட உறவினர்கள்
காணாமல் போனோருக்கான பணியகம், மன்னாரில் நேற்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது. இந்தக் கலந்துரையாடலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றதாகவும், இது வெற்றிகரமானதாக அமைந்தது என்றும், பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்…
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனாதிராஜா
“அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்தினால், அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்.” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவர்…
கிழக்கில் தமிழர்களுக்கு அநீதி!
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை இந்து சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த தெரிவுகளை இரத்துச்செய்து விட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என…
இலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’
இலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கையின் மூத்த செய்தியாளர்களும், ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையை பொறுத்தவரை, மே மாதம் இங்கு போர்…
தமிழ் பெண்களை வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துகின்றன புலனாய்வுத்துறையினர்..
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என பல்வேறு பெண்களை புலனாய்வுத்துறையினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவதாக, மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை இன்று சனிக்கிழமை(12.05.2018) முதல் கட்டமாக…
தமிழின படுகொலை வாரத்தின் முதலாவது நாள் செம்மணியில் ஆரம்பம்!
தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாள் அனுஷ்டிப்பு செம்மணியில் நேற்றுக் காலை நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது…
லண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை ஓடக் கூடாது என்று…
லண்டனில் வரும் ஞாயிறு(20ம் திகதி) "18.05.2009" என்னும் Kollywood திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் சனல்4ல் கூட காண்பிக்காத பல உள்ளக தகவல்களோடு பல கட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளை சித்தரிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால். மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேவேளை கருணா…
























