வேட்டையாடப்படும் முன்னாள் புலிகளின் தளபதிகள்! அதன் பின்னணி என்ன?

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவரது வீட்டிலிருந்த போது இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின்…

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக இதே நோக்கத்தில் விடுதலைப் புலிகளிள் முன்னாள் கிழக்கு மாகாண…

எங்களுக்கு நிம்மதியே இல்லையா? கண்ணீர் சிந்திய நகுலனின் தாயார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படையணியின் சிறப்பு தளபதியான (முன்னாள்) நகுலன் நேற்றைய தினம் இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவருடைய மனைவி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்ற இயற்பெயரை கொண்ட…

புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்!

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன் வல்லமை…

சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்றைய தினம் காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர்…

242 தடவைகள் நடந்த இனப்படுகொலை! ஆதாரம் உள்ளது என்கிறார் சிவமோகன்…

தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் இன்று (26) இடம்பெற்ற தந்தை செல்வா நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

வடமாகாண சபையால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு…

வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராக உச்சிநீதி மன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்காக தனியான பிராந்தியம் அமைக்கப்பட வேண்டும் என வட மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் சிங்கள நகல் ஒன்றை பெற்றுத் தரக் கோரியே குறித்த மனு தாக்கல் இன்றைய தினம்…

பிரபாகரனின் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இரா.சம்பந்தன்!

பிரபாகரனால் துப்பாக்கியை கொண்டு செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலினால் செய்ய முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கையும்…

நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை; தனித்துவத்துடன் வாழ விரும்புகின்றோம்: விக்னேஸ்வரன்

நாட்டை பிரிந்துக் கொண்டு செல்வதற்கு நாம் விரும்பவில்லை. மாறாக, எமது தனித்துவத்தை பேணிக்கொண்டு வாழவே விரும்புகின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால், சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும் இசைவையும் நல்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவாம் என ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா…

போர்க்குற்ற விசாரணைக்கு 44.2 வீதமானோர் எதிர்ப்பு! ஆய்வில் தகவல்

இறுதிப் போர் தொடர்பில் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தேவையில்லை என்று 44.2 சதவீதமானவர்களும், விசாரணைப் பொறிமுறை தேவை என்று 42.2 சதவீதமானவர்களும் தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. போருக்குப் பின்னரான காலப் பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்…

யார் யார் சரணடைந்தார்கள் ? வெளியிடாமல் சமாளிக்கும் மைத்திரி அரசு-…

  இறுதிக்கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில்…

நல்லாட்சி அரசிலும் மலையக தொழிலாளர்களின் நிலை..! இன்றும் கேள்வி குறி.?

மலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்தவகையில் காலத்துக்கு காலம் மாறுப்பட்ட பயிர்செய்கையில் இறப்பர் தேயிலை மாத்திரமே இப்பொழுது காணப்படுகின்றன. இந்தவகையில் தேயிலை பயிர்செய்கை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. இவ்வாறான பங்களிப்பை சுமார் 200 வருடங்களாக…

சம்பந்தனின் முடிவு கேள்விக்குரியது..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் எடுத்த சில முடிவுகள் கேள்விக்குரியது என தமிழ்த் தேசியகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை (19) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சமஷ்டி அரசியலமைப்பு…

தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!

இலங்கை தொடர்பாக தற்சமயம் ஒரு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ நடவடிக்கையை சர்வதேச சமூகம் கையாள்வதால் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் தேக்க நிலையின் விளைவு பற்றி யோசித்ததன் விளைவாகவே இப்பத்தி. இலங்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடனும் இலங்கை அரசாங்கத்தின்…

தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு…

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி !…

விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்: சிங்களவர்கள்

ஆயுதத்தின் மூலம் வென்றெடுக்க முடியாத தமிழீழத்தை அரசியலின் மூலமாக வெற்றிகொள்ளவே வடமாகாண முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் முயற்சிக்கின்றனர். நாட்டிற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிராக செயற்படும் விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை உடனடியாக நீக்கிவிட்டு சிங்கள தலைவர் ஒருவரை நியமிக்க…

பிரபாகரன் ஈழத்தை தவிர எதனையும் ஏற்க்க மாட்டார் என்று எனக்கு…

  வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. இருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது என்கிறார்கள் சிலர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்…

யாழில் நடந்த மற்றுமொரு அசிங்க சம்பவம்! இது யாழ்ப்பாணம் தானா…

  வட மாகாணத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருப்பது சூரியனின் வெப்பம் மட்டுமல்ல, இளைஞர் யுவதிகளின் தென்னிலங்கை கலாச்சார மோகமும் தான். ஆம் சொல்வதற்கே கொஞ்சம் கசப்பான விடையமாக இருந்தாலும், நடப்பவை அப்படியான நிகழ்வுகளாக தான் இருக்கின்றன. எப்படி இருந்த நாம் இப்படியாகிட்டோம் என்பது போல கடந்த 2009ம் ஆண்டுக்கு…

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் சக்திகளே சம்பந்தனும் விக்னேஸ்வரனும்: சுதந்த…

மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் சக்திகளாக சம்பந்தனும் விக்னேஸ்வரனும் செயற்படுவதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பின் கிருலப்பனை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை கூறினார்.…

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை இப்போதுதான் நிலவுகிறது! வானிலை அவதான…

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக…

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் காண மைத்திரி விரும்புகின்றார்: சம்பந்தன்

நாட்டில் நீடித்து வரும் இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் கொண்டுள்ளார். எனவே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பொட்டு அம்மான் தொப்பி: லண்டனுக்கு வந்திறங்கிய சிங்கள புலனாய்வுக் குழு-…

லண்டனுக்கு சிங்கள புலனாய்வுக் குழு ஒன்று அன் - ஆபிஷலாக(உத்தியோக பற்றற்ற முறையில்) வந்திறங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து, கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னாரில் இருந்து ஒரு பார்சல் ஒன்று கிருளப்பனையில் உள்ள கூரியர் நிலையம் ஒன்றுக்கு வந்துள்ளது. லண்டனில் உள்ள விலாசம் ஒன்றுக்கு இந்த பார்சல் செல்ல இருந்த…