வடகிழக்கிற்கு அப்பால் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன

வடக்கு கிழக்குக்கு அப்பால் உள்ள தமிழர்களின் வரலாற்று அடையங்கள் அழிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் தமிழ்ப் புலவர் ஒளவையார் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வேல்முருகன் வர்த்தக நிறுவனத்தின் நாற்பது ஆண்டுகால…

புலம்பெயர் ஈழத்தமிழ் உறவுகளுக்கு களத்தில் இருந்து ஒரு கடிதம்…!

உலகெங்கும் பரவி வாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு வணக்கம். அன்னை பூமியை விடுத்து அயலக தேசங்களில் அகதியாகவும், குடியுரிமை பெற்று வாழ்ந்த போதும் தனித்தமிழ் ஈழம் என்ற ஏக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் உங்களின் உள்ளத்தோடு இந்தக் கடிதத்தின் மூலமாக இணைவதில் பெருமகிழ்வு அடைகிறேன். கால ஓட்டம் எல்லா உண்மைகளையும்…

ஈழத் தமிழர்களிடம் கருணாநிதி கொடுத்த வாக்குமூலம் என்ன? நீதி கேட்கிறார்…

இது ஒரு முக்கியமான கால கட்டம். கறையான் போல என் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கிற துன்பங்களையும் துயரங்களையும் உங்கள் கருணைமிக்க நெஞ்சங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இக் கால கட்டத்தில் நீங்கள்நல்ல தீர்ப்பு கூறுங்கள். நீதி வழங்குங்கள் என்று வேண்டிக்கொண்டு கவிஞ்சர் புலமைப் பித்தன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.…

வவுனியா இராணுவ முகாமிலுள்ள சித்திரவதை கூடங்களை கண்காணித்த ஐ.நா பிரதிநிதி!

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி வவுனியா இராணுவ முகாம் ஒன்றை கண்காணித்தார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ஜூவான் டெஸ்டஸ், இந்த முகாமை கண்காணித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள வன்னிப் பாதுகாப்பு தலைமையகம் எனப்படும் ஜோசப்…

ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு புதிய பதவி! புலம்பெயர்…

ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. நோர்வே ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹைம் , இலங்கையில் விசேட சமாதானத் தூதுவராகவும் கடமையாற்றியிருந்தார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் புலிகள்…

நாட்டை பிரிக்க முயலும் விக்னேஸ்வரன் ஒரு துரோகி! ஜாதிக ஹெல…

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஸ்டி தீர்வு தொடர்பான அரசியல் அமைப்புயோசனை தொடர்பில் நாட்டின் தலைவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்று ஜாதிக ஹெலஉறுமய குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்தக் குற்றச்சாட்டை இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது சுமத்தினார். இது வருந்ததக்க சூழ்நிலை என்றும் அவர்…

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் கைதுகளுக்கு காரணம் என்ன? த.தே.கூட்டமைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றமைதொடர்பில் காரணங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகோரியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை இன்றுநாடாளுமன்றத்தில் விடுத்தார். தொடரும் கைதுகள் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலத்தில் நான்கு முன்னாள் விடுதலைப் புலி…

விடுதலை புலிகளுடனான யுத்தத்தை முழுமையாக முடிக்காத மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கடந்த ஆண்டு ஜனவரி 8ம் மற்றும் ஆகஸ்ட் 17ம் திகதிகளுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவரை கொலை செய்வதற்கான தேவைகள் எதுவும் புலம்பெயர் அமைப்புகளுக்கு கிடையாது என சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய…

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவாலயம்: விஜயகலா

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவாலயம் வடமாகாண சபையின் பங்களிப்புடன் நிச்சயம் உருவாக்கப்படும். முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நல்லாட்சி அரசாங்கம் குழப்ப போவதில்லை. குழப்புவதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதும் இல்லை என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார். சமகால…

சமஷ்டி எண்ணக்கருவின் பின்புல யதார்த்தங்கள்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை வடக்கு மாகாண சபை கடந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து சமஷ்டி என்ற சொல் நாட்டின் பல்வேறு மட்டங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. வட மாகாண சபையின் இத்தீர்மானம் தொடர்பில் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தம் நிலைப்பாடுகளை…

புலிகள் தலைதூக்குவதாக கூறுவது முற்றிலும் பொய்! பிரதமர் ரணில்

சிங்கள ஊடகங்கள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தலைதூக்கியுள்ளதாக கூறி வருகின்றன. எனினும் எனக்கு தெரிந்த வரையில் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டனர். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்த போது புலிகள் இயக்கம் இனிமேல் தலைதூக்காதுஎன்றே கூறினர் என பிரதமர் ரணில்…

மலையகத்திற்கு தனியான ஆட்சி முறை அவசியமில்லை!– திகாம்பரம்

மலையகத்திற்கு தனியான ஆட்சி முறை அவசியமில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மலையகத்திற்கு தனியான ஆட்சி முறைமை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மலையகப் பகுதிக்கு தனியான ஆட்சி…

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று காலை மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான கிருஸ்ணப்பிள்ளை கலைநேசன் என்பவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது…

கருணா பிளவை நீதன் கூறினாரா? பிரபாகரன் தாமதம் எதனால்? வெளிவரும்…

கருணா பிளவை நீதன் கூறினாரா..? பிரபாகரன் தாமதம் ஏதனால்!! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய வட்டமேசை அமைந்துள்ளது. இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியற் துறைப் பெறுப்பாளர் தயாமோகன் அவர்கள் விளக்குகிறார். -http://www.tamilwin.com https://youtu.be/wkeNrzZUBqc?list=UUExEH_AcfrEU4s5zobFZaSQ

வடகிழக்கு இணைப்பில் அம்பாறைத் தமிழர்களது இருப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும்: கவீந்திரன்

வடகிழக்கு இணைப்பில் அம்பாறை மாவட்ட தமிழர்களது இருப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஸ்ரீ முத்து மாரியம்மன் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழர்களது கலை, கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் இறுவெட்டு வெளியிடும் நிகழ்வும், விளையாட்டு நிகழ்வும் இந்து இளைஞர்…

நாட்டை பிரிக்க வேண்டுமென நாங்கள் கேட்கவில்லை! யாழ் மே தின…

இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியான முறையில் ஒற்றுமையாக நின்று பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மருதனார் மடம் இராமநாதன்…

சமஷ்டிக்கான குரல் ஏன் வந்தது? – சிந்தித்து தீர்வு வழங்க…

வடக்கிலிருந்து சமஷ்டி என்ற குரல் ஏன் வந்தது ? என்பது தொடர்பில் ஆராய்ந்துசிந்தித்து பார்க்க வேண்டும் அந்தவகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைப்பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை…

கடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் வடக்கு- கிழக்கில்…

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த ஒரு மாதத்துள் வடக்கு- கிழக்கில் முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கும், கொழும்பு நான்காம் மாடிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலர் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கடந்த…

புலிகளின் முன்னாள் தளபதிகள் கைது செய்யப்படதன் மர்மம்!

வடக்கிலும் கிழக்கிலும் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் இரகசியக் கைதுகள், கடத்தல்களின் பின்னணி குறித்த மர்மங்கள் இன்னமும் முழுமையாக வெளிவராதுள்ளன. புலிகளின் முன்னாள் தளபதிகள் போராளிகளைக் குறிவைத்தே இந்தக் கைதுகள் இடம்பெற்று வருகின்றன. அதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கேணல் ராம் கடத்தப்பட்டு…

காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தின் ஊடாக தீர்வு காணலாம்! கெஹெலிய

மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் மேல் சபையொன்றையும் இணைத்து 13வது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பொருத்தமானதாக அமையும்.இதுவே ஒற்றையாட்சியின் கீழ் சாத்தியமான தீர்வாக அமையும் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாதுகாப்பு பேச்சாளருமான கெஹெலிய…

பௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறுவர்கள்

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர். கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த…

கலிங்கத்தில் அசோகன்! முள்ளிவாய்க்காலில் ராஜபக்ச

1956 தொடங்கிய சிங்களத் தலைவர்கள் வரிசையில் பண்டாரநாயக்க முதல் 2016 மைத்திரியும் அனைவரும் தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தமிழருக்கு எதிரான சிங்கள இனவாதத்தை வளர்ப்பவர்கள் தான். பேரினவாதத்திற்கு அடங்கியவர்கள். இவர்களது அறிக்கைகள், செயலற்ற வாக்குறுதிகள், முன்னெடுப்பு நம்பிக்கையை உதறித்தள்ளி மாறாக இனவாதப் பேய்கள் குதறிய விளைவுகளைத்தான் இன்றுவரை கண்டோம்.…

சம்பள உயர்வு வழங்காது போனால் சட்டநடவடிக்கை!

2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையின்படி தனியார் துறையினருக்கான 2500 ரூபாசம்பள உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.இல்லையேல் பெருந்தோட்டத்துறை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்என்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பின் போது எச்சரித்துள்ளார். 1998ஆம் ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு…