இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள் : மக்கள் பீதி

இலங்கையின் பல பகுதிகளில் இரவு வேளைகளில் பறக்கும் ஒளிப்பிழம்புகளை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தென்பட்ட இந்த ஒளிப்பிழம்புகள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என இலங்கை…

இலங்கை முழுவதும் சட்டவல்லுநர்கள் போராட்டம்

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டவல்லுநர்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி புறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டவல்லுநர்களை சட்டவல்லுநர்கள் சங்கம் கேட்டிருந்தது. இப்படியான ஒரு…

‘இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் ஐ.நா படையை நிறுத்த வேண்டும்’

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் அந்நாட்டு சிங்கள இராணுவத்தை வெளியேற்றிவிட்டு தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக…

நீதிபதி ஷிராணிக்கு ஆதரவாக கொழும்பில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டம்

இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவி நீக்க கண்டன நடைமுறை மீட்டுக்கொள்ளபடவேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ள்ளனர். அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசாங்கம் தலைமை நீதிபதியை பதவிறக்க முயல்கிறது என…

அனைத்துலக மனித உரிமைகள் தினம்: இலங்கையில் அமைதி ஆர்ப்பாட்டங்கள்

அனைத்துலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்த்தில், கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளமையை எதிர்த்தும், அவர்கள் அங்கிருந்து வெளியேற…

போர்க்குற்றிவாளி சவேந்திர சில்வாவை தென்னாப்பிரிக்கா நிராகரித்தது!

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக்…

தியாகி திலீபனின் நினைவுச் சின்னம் சிங்கள இனவாதிகளால் அழிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவுச் சின்னம் அடையாளம் தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது சிங்கள இனவாதிகளின் அட்டூழிச் செயலாக இருக்ககூடும் என கருத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராகிய திலீபன் இந்திய அமைதிப்படை இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருந்த போது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து…

‘பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை’யாக யாழில் பல தமிழர்கள் கைது

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனக் கூறி இலங்கையின் வடக்கே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு போலிசாரால் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து 'பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக' குற்றம்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் 10 பேர்…

‘தமிழ் மாணவர்களுக்கெதிரான அடக்குமுறை முட்டாள்தனமானது’

இலங்கையின் வடக்கே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும் Read More

தமிழ் மாணவர்களின் கைதைக் கண்டித்து உலகமெங்கிருந்தும் எதிர்ப்பலைகள்!

சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில், பிரித்தானியா, பிரான்ஸ் என பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அந்நாட்டில் வாழும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்…

மீண்டும் குழு அமைக்கிறார் ஐநா செயலாளர் பான் கீ மூன்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சாள்ஸ் பெட்றி குழுவின் அறிக்கையை, மதிப்பீடு செய்து அதன் பரிந்துரைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழுவொன்றை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ளார். ஐ.நாவின் பிரதிச் செயலர் ஜோன் எலியாசன்…

ஆயுதத்தை தூக்குமாறு சிங்கள அரசாங்கமே கோருகின்றது : மனோ எம்பி…

ஆயுதங்களை தூக்குவதற்கு நாம் விரும்பவில்லை எனினும் சிங்கள அரசாங்கமே மீண்டும் ஆயுதத்தை தூக்குமாறு தமிழ் இளைஞர்களிடம் கோருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்பதுடன் தமிழர்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்குவதற்கான  சூழ்நிலையை…

இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை அவசியம்; ஐநாவிடம் TNA…

சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரி யங்வான் பொபிலீ உள்ளிட்ட ஐ.நா பிரதிநிதிகள் குழுவினரை…

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் : சிங்கள மாணவி

மாவீரர் நாளன்று மாலை 6.05-க்கு படையினர் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து தமிழ் மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, தமிழ் மாணவிகளோ படையினரின் தாக்குதலுக்கு அஞ்சாமல் மாவீரர்களுக்கான விளக்கைகளை தொடர்ந்து ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது  'தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்' என்ற ஒரு உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.…

கைதுசெய்யப்பட்ட தமிழ் மாணவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நினைவு நாளை அனுஷ்டித்த மாணவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியதோடு அச்சம்பத்தில் தொடர்புடைய நான்கு பல்கலைக் கழக மாணவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி வடகிழக்கில்…

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;…

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது நிச்சயம் – இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது போனால், அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பங்கேற்கமாட்டார் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…

விரைவில் விடுதலைப் பிரகடனம்: நாடு கடந்த தமிழீழ அரசு அறிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விரைவில் 'விடுதலை' பிரகடனம் வெளியிடப்படும் என்று அதன் தலைமையமைச்சர் வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இலண்டனில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டில் உருத்திரகுமாரன் ஆற்றிய உரை: 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாம் விவாதித்து ஏற்றுக்கொண்ட நாடு கடந்த…

மாணவர்கள்மீதான தாக்குதல்: தமிழீழத்தில் ஆரம்பமாகிறது புதிய போர்க் களம்!

இலங்கைத் தீவின் இனப் பிரச்னைக்கு இரண்டே வழிகளில்தான் தீர்வைக் காண முடியும். ஒன்று பிரிக்கப்படாத இலங்கைத் தீவில் இணைந்து வாழுதல். இரண்டாவது, தமிழ் மக்களது விருப்பமான தமிழீழம் என்ற தனி நாட்டை உருவாக்குதல். பிரிக்கப்படாத இலங்கைக்குள் என்ற அனைத்துலக விருப்பமும், இந்தியாவின் இலக்கும் சாத்தியமாகவேண்டுமானால், சிங்கள இனம் சமகால…

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த…

நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வு பிரிவினரால் கைது

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின் (ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள்…

மாவீரரே பிறந்து வாரும் தாய் மண்ணிலே…

வாழ்வே அர்த்தமற்றுப் போய் தனிமை விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கையில், "நாம் தனியன்கள் இல்லை - ஒரு தேசிய இனமாகக் கூடி நிற்கிறோம். எனவே எமது மரணங்களை விலையாய் கொடுத்து; எத்தனை பேர் செத்தேனும் விடுதலையை அடைந்தே தீருவோம்" என்ற பேருறுதியுடன் வாழ்வுக்கும் மரணத்துக்கும்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் தாங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசெய்யப்பட வேண்டும் எனக்கோரி நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்திருக்கின்றார்கள். இது இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் இரண்டு நாட்களாக மாணவர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலின்…