எந்தத் தேர்தல் நடந்தாலும் வெல்லப்போவது நாமே – பஸில்

நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும்  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட முடியாது என்றும்…

தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்யாவிட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கூறிக் கொள்வது…

இராணுவத்தினர் கடமைக்கு இடையூறு : யாழில் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர வண்டியில் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த வேளை, மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி…

சீனாவை தொடர்ந்து இலங்கையில் கால் பதிக்கிறது ரஷ்யா

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான யோசனையுடன் ரஷ்யா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளது. இலங்கை அணுசக்தி நிலையத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா இரண்டு அரசுகளுக்கு இடையேயான வேலைத்திட்டமாகவே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வழிகாட்டல் குழு இந்நிலையில், ரஷ்யா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் இந்த விடயத்தை ஆய்வு செய்ய வழிகாட்டல்…

இலங்கைக்கு 1,500 பயிற்சி இடங்களை வழங்கும் இந்திய பாதுகாப்புப் படைகள்

இந்திய பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 பயிற்சி இடங்களை இலங்கைக்கு வழங்குகின்றன, அவற்றுக்கு ஆண்டுதோறும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சிறப்புத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படுவதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு வருகை தந்த இந்திய கடற்படை கப்பலான…

உள்ளூராட்சி தேர்தல் தாமதம் குறித்து விசாரணை நடத்தவுள்ள மனித உரிமை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமடைவது குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. தேர்தல் தாமதமாவது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதப்படுத்தப்படுவது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசாரணை இந்த…

வரி விதிப்பிற்கு எதிர்ப்பு- இலங்கையில் இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த…

இலங்கையில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வரி உயர்வை உடனே திரும்ப வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.…

கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி

தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு எம்மை இனவாதிகளாக சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு ஜூலை காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது என 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி…

இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை நிற்கும்! அமெரிக்க தூதர் ஜூலி

இலங்கையின் நெருக்கடியான நிலையிலிருந்து விடுபட்டு, மீண்டு வரும்வரை அமெரிக்கா துணைநிற்கும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல் வௌியீட்டு விழா கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற போது அதில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய…

2024 மகளிர் டி20 உலக கோப்பைக்கான நேரடி வாய்ப்பை தவறவிட்ட…

ICC மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான நேரடித் தகுதியைப் பெற இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கூற்றுப்படி, 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் இலங்கை இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும், அடுத்த ஆண்டு போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெறத்…

இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு அழைப்பு

13 ஆவது திருத்ததின் ஊடாக மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு அதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கின்றது. இது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துமாறே நாம் கேட்கின்றோம். எனவே இந்த விடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் என ரெலோவின்…

தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்ப்பு நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் டில்வின்…

சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயார் – நாமல்

தானும் தனது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க…

ரஸ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டுமெனவும், அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் ரஸ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் போது ரஸ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் கலந்து கொள்ளாத…

நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு விமானசேவைகள் ஒப்பந்தம்

இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தக்கூடியவகையில் நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு விமானசேவைகள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் நெதர்லாந்துக்கான இலங்கைத்தூதுவர் அருணி ரணராஜாவுக்கும் அந்நாட்டின் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழான சிவில் விமானப்போக்குவரத்துப்பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை…

எதிர்வரும் மனித உரிமைகள் குழு அமர்வில் மீளாய்வு செய்யப்படவுள்ள இலங்கை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் வரவிருக்கும் அமர்வில் மற்ற ஐந்து நாடுகளுக்கு மத்தியில் இலங்கையும் மீளாய்வு செய்யப்பட உள்ளது. 137வது அமர்வு 2023 பிப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை நடைபெறும், மேலும் இலங்கை,…

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ள மக்கள்…

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டும் திட்டத்தை பாதுக்காவில் உள்ள மக்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளது. அதன்படி, பாதுக்கை அஞ்சல் நிலையத்தில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 100 ரூபா தொடக்கம் 500 ரூபா வரையிலான காசுக்கட்டளைகளை குழுவினர் நேற்று அனுப்பி வைத்துள்ளனர். மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க, இந்திய மீனவருக்கு அனுமதி அளித்தால் போராட்டம்…

எங்களின் கடலில் இந்தியமீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள்…

இந்தியாவின் அதானி குழுமத்தின் 2காற்றாலை மின் நிலையங்களுக்கு ஒப்புதல் அளித்த…

மன்னார் மற்றும் பூனேரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் நிலையங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை (BOI) இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் 350 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்…

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சிங்கள மற்றும்…

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  வழங்கப்பட்டது. இதன்படி, அரச தலைவருக்கு முறையே ‘சிங்கள எழுத்துக்கள் மற்றும் ‘தமிழ் எழுத்துக்கள் என பெயரிடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் எழுத்து புத்தகங்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர்…

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து 1,137 பேர் அதிரடியாக இடைநிறுத்தம்

ஐக்கிய தேசியக்கட்சி 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்தியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான…

கோட்டாபயவை போன்று ரணில் இடமிருந்தும் ஆட்சி பறிக்கப்படும்

தேர்தலை நடத்துவதா இல்லையா? அதற்கு நிதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடையாது. தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக அவர் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் பொறுப்பு கூற வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். அதே போன்று…

இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா

கண்டி ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் (சர்வதேச) பறவைகள் பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  திறந்து வைத்துள்ளார். ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் 27 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த சர்வதேச பறவை பூங்கா மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா வலயம், 100க்கும்…