இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கையில் தேர்தலை நடத்தப்போவதில்லை
இலங்கையில் தேர்தலை நடத்தப்போவதில்லை என அதிபர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் நோக்கில் நகர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த எரான் விக்ரமரத்ன, அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு…
புதிய சமூக அமைப்பிற்கு ஒழுக்கமான தலைமை தேவை – ஜனாதிபதி…
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் வகையில் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இன்று மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் இதனை குறுகிய…
பொருளாதார நெருக்கடியிலும் அதிகரித்த வாகன விற்பனை
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், சந்தையில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது ஸ்த்திர நிலையை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில்…
இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் அபாயம்
இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திறைசேரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை மத்திய வங்கி புதிய பணம் அச்சிடுவதை இடைநிறுத்தினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர். திறைசேரியின் நிதித் தேவைக்கு ஏற்ப தேவையான பணத்தை மத்திய வங்கி அச்சடித்து வழங்குவதே இதுவரை…
தேர்தலை புறக்கணிப்பது இலங்கை மக்களின் இறையாண்மையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும்
எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை இலங்கையின் ஜனநாயக செயன்முறையில் அனைத்துத் தேர்தல்களும் இன்றியமையாதவையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், அதில் எவ்வித இடையூறுகளும்…
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி உறுதி
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அத்துடன் அராஜகத்தை தடுக்கும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்படுவதை ஜனாதிபதி உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து செயற்படும் ஜனநாயக சமூகத்தை ஸ்தாபிக்கப்படும் என்று கொழும்பில் இடம்பெற்ற…
இலங்கையில் இருந்து 2000 பெண் பராமரிப்பாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புக்கொண்ட…
இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேலின் சிறப்பு தூதுக்குழுவொன்று, இந்த வருடம் இலங்கையில் இருந்து பெண் பராமரிப்பாளர்களுக்கு 2000 வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது. இஸ்ரேலின் மக்கள்தொகை மற்றும் இடம்பெயர்வு நிறுவனத்தின் பணிப்பாளர் ஷீலி ரெய்சின் சாசன் மற்றும் உறுப்பினர்களான ஜிந்தானி…
இலங்கையில் பயிர்களை சேதப்படுத்தும் ஆறு விலங்குகளை கொல்ல அனுமதி
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் பட்டியல் இதற்கு பதிலளித்த அமைச்சர், குரங்குகள் உட்பட பயிர்களை…
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைவிதிப்பீர்களா – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவை போன்று பின்லாந்து தடைகளை விதிக்குமா என அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இனப்படுகொலை குறித்த ஆவணத்தில் இலங்கை அரசாங்கத்தினால்…
தேர்தலை ஒத்திவைக்க ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கம் சூழ்ச்சி
வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என இலங்கை அச்சகம் அறிவித்துள்ள விடயமானது சூழ்ச்சியின் ஓர் அங்கம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச அச்சகத் தலைவரின் ஊடாக இந்த சூழ்ச்சி இடம்பெறுகின்றது. வரலாற்றில் ஒரு நாளும் பணம் இல்லை…
இலங்கையில் தமிழின அழிப்பில் பங்குகொண்டவர்களை உலகநீதிமன்றில் நிறுத்த வேண்டும்
இலங்கையில் தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றங்களான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு காத்திரமான முறையில் கொண்டு செல்லும் முயற்சிகளை கனடா ஆரம்பிக்க வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழ் மரபுத்திங்கள் விழாவின் இறுதி நாள்…
இலங்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள மின்சாரக் கட்டணம்
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு 75 விழுக்காடு கூடியிருந்த கட்டணம், இன்னும் 66 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொருளியலைக் கைதூக்கி விட அனைத்துலகப் பணநிதியத்திற்கு இது தூண்டுதல் அளிக்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. அரசாங்க மானியங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை அது…
விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை – யுத்தத்தின் இறுதி நாள்…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை இராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் சண்டையிட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க…
சரியான நேரத்தில் மீண்டும் வெளியே வருவேன் – மகிந்த ராஜபக்ச
சரியான நேரத்தில் வெளியே வருவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தரம் குறைந்த மருந்து இறக்குமதி – மருந்தாளர்…
இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தைச் சேர்ந்த அஜித் தென்னக்கோன் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். கறுப்புப்பட்டியலில் உள்ள இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது.இந்த தவறை சரி செய்யுமாறு அரசை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு…
இலங்கை மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நடவடிக்கை எடுத்துள்ளார். முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 20 இலட்சம் ஏழைக்குடும்பங்களுங்கு தலா 10 கிலோகிராம் அரிசியினை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே இவ்வாறு நிவாரணம்…
தேர்தலை நடத்தப் பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்குவோம்:…
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"எப்படியாவது இந்தத் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்பதில் இந்த அரசு குறியாகவே இருக்கின்றது. அதற்காக இதுவரை…
மகிந்தவின் மகனின் ராக்கெட்டை தேடும் சீனா! 332 மில்லியன் டாலர்கள்…
மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 குடும்பங்களின் தங்கச் சங்கிலி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு…
இலங்கையில் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த உலக உணவுத்திட்டம் உதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 244,000 பேருக்கு பெப்ரவரி - மேமாதம் வரையான காலப்பகுதியில் அவசியமான நிதியுதவிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும்…
தேர்தல் நடாத்தாவிட்டால் இது அசமந்த அரசாங்கமாகவே கருதப்படும் – பெப்ரல்…
தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு , அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தங்களது கண்காணிப்பு பணிகளை இன்றிலிருந்து ஆரம்பிக்க உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று(12) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து…
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற 206 நட்சத்திர ஆமைகள்
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயற்சித்த 206 நட்சத்திர ஆமைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர். விமான நிலையத்தின் விமான சரக்கு ஏற்றுமதி முனையத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத் டி சில்வா தெரிவித்தார்.குறித்த…
சிங்கப்பூர் பிரதமரை பின்பற்றுமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த ரஞ்சன்
சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையில் செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், லீ குவான் யூ தனக்கு ஆதரவான பாதாள உலகக் குழுக்களுக்குச் செய்ததைப் போன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை…
ராஜபக்சக்களைப் பாதுகாப்பதே தனது கடமை என செயற்படும் ரணில்: இம்ரான்…
ராஜபக்சக்கள் செய்த ஊழலினால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் தலையில் கட்டி இந்த அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருகின்றது என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் நேற்று(11.02.2023) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.…