சென்றார் நவி பிள்ளை, மீண்டும் வந்தது இலங்கை இராணுவம்

ஐநா மனித உரிமைகளுக்கான ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் வடபகுதிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தையடுத்து, முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட இலங்கை இராணுவத்தினர் புதனன்று மீண்டும் வீதிகளில் தமது கடமைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவிப்பிள்ளை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் ஆகிய…

கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை ஓடஓட விரட்டி பஸ்களில்…

கிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்நிக்கவிடாது காணாமல்போனவர்களது உறவுகளை பொலிஸாரும், புலனாய்வாளர்களும் இணைந்து  விரட்டியடித்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்தியில் வன்னிக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து, தமது உள்ளக்கிடக்கைகளை அவரிடம் நேரடியாகக் கூறி, காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன…

நவனீதம்பிள்ளை கிளிநொச்சி, முல்லைத்தீவு விஜயம். இன்று இராணுவம் அற்ற பிரதேசமாக…

ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் மேற்படி இரு மாவட்டங்களிலும் படையினரை எங்கும் காணமுடியாத நிலை இன்று காணப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏ-35வீதியூடாக அம்மையார் பயணித்திருந்த நிலையில் மேற்படி வீதியில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அனைத்தும் இன்று வெறுமையாக காணப்பட்டதுடன் சுதந்திரபுரம் பகுதியில்…

பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நவநீதம்பிள்ளை விஜயம்!…

எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் முன்னால் கண்ணீர் மல்க கதறியழுதனர் இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் கேப்பாபிலவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 1.30மணி முதல்…

நவிபிள்ளை இன்று முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முன்னதாக, அங்கு திடீர் பயணம்…

இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க நேற்று அங்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க முதல் முறையாக நேற்று முல்லைத்தீவுக்குச் சென்றார். அவர்…

நவி பிள்ளையின் பயணம் நம்பிக்கையை கொடுக்கிறது: நாம் தமிழர் கட்சி

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன…

இறுதிப் போரில் இந்தியக் கொடிதாங்கிய கப்பலில் இருந்து மக்கள் மீது…

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் வவுனியா மேல்…

இலங்கையை விமர்சிக்க வரவில்லை! மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம்…

இலங்கையை விமர்சிப்பதற்காக தாம் இலங்கைக்கு வருகை தரவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நாட்டில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவே வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் அவரது பணிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி சர்வதேச ஊடகம்…

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்று!

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அரசாட்சி செய்தவன் தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னியின் இறுதி மன்னன்.  மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்றாகும். இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்ட பின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான…

நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையால் நாம் எதனை எதிர்பார்க்க முடியும்?

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தென்பகுதி கருதிக் கொள்கிறது. அதன் காரணமாக நவநீதம்பிள்ளையின் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைப்பதில் தென்பகுதி அரசியல்வாதிகள் முண்டியடித்த வண்ணம் இருந்தனர். எதிர்ப்புக்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகின்ற ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் குறித்து…

ஆயுதப் போராட்டத்தின் விளைவே தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியிருக்கின்றது

உலகத்தில் விடுதலை பெற்ற நாடுகளின் வரலாற்றில், ஆயுதம் தாங்கிப் போராடிய நாடுகளின் வரலாறுகளையும் அதற்குள் நாம் பார்க்க முடியும். அந்த அடிப்படையில் ஆயுதப் போராட்டப் பாதையில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் சில இராஜதந்திர தவறுகளால் அந்தப் பாதை பிழைத்துவிட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளே தமிழர்களை, தமிழர்களுடைய…

இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவோரை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை

இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவோரை அம்பலப்படுத்துமாறு அரசாங்கம், நவனீம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது. இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 6300 பேர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. மறைந்திருந்து இவ்வாறு குற்றம் சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என…

நவநீதம்பிள்ளை பக்கச்சார்பற்ற அறிக்கையை சமர்ப்பிப்பார்!- அரசாங்கம் எதிர்பார்ப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இலங்கை விஜயத்தின் போது, பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நவநீதம்பிள்ளையிடம் மறைப்பதற்கு…

வடக்கில் இராணுவ பிரசன்னம்! தமிழ் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்!

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னமானது கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு பெரும் தடையாக உள்ளது. நாம் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எம்முடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். இவ்வாறான ஒரு கடும்போக்கான நிலையே அங்கு காணப்படுகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து அவர்…

நவநீதம்பிள்ளை ஈழத் தமிழர்களின் துயரம் குறித்து ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க…

இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம்பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கை…

மிகவும் திறந்த மனதுடன் முதல் முறையாக இலங்கை செல்கிறேன்!- நவநீதம்பிள்ளை!

எந்த விடயத்தையும் முனகூட்டியே கணிக்கவில்லை, விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. சாதகமான அபிவிருத்தி குறித்து பேசப்பட வேண்டியுள்ளது. அதனால் நான் மிகவும் நிறந்த மனதுடனேயே செல்கிறேன்.  என  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்  நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை மீது சர்வதேச ரீதியில் போர்ககுற்ற விசாரணைக்கு…

இலங்கை அகதிகளை ஆஸி. தடுத்துவைத்தது கொடூரச் செயல்: ஐநா

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சாடியுள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐநா குழுவொன்று கண்டறிந்துள்ளது.…

இராணுவம் கொலைகார இயந்திரம் அல்ல! வடக்கில் இராணுவ பிரசன்னம் படிப்படியாக…

இராணுவம் ஒரு கொலைகார இயந்திரம் அல்ல. அவ்வாறு நினைப்பது ஒரு பிழையான நோக்காகும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வொய்ஸ் ஒப் ரஸ்யாவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட பல அமைப்புக்கள், இராணுவத்தை பயன்தரு வழிகளில் பயன்படுத்தும் வழிகளை…

நவநீதம்பிள்ளைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அத்துரலியே ரத்ன தேரர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிடுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை அல்ல பயங்கரவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் காலம் ஐக்கிய நாடுனள் அமைப்புக்கு வந்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற…

அதிகாரமில்லாத மாகாண சபையும் ஆர்வமாக உள்ள மக்களும்

இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் சரியாக ஒரு மாதத்தில், வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், வடமாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் வேகம் பெறாத நிலைமையே பொதுவாகக் காணப்படுகின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கிய கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட…

அமெரிக்க நிலைப்பாட்டினால் இலங்கை இராணுவ தளபதிகளுக்கு சிக்கல்

இறுதிப் போரின்போது படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவப் படையணிகள் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள கடுமையான நிலைப்பாட்டினாலேயே, தமது இராணுவ அதிகாரிகள் அமெரிக்க இராணுவ நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டினால் தமது மூத்த படையதிகாரிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும்…

மட்டக்களப்பு கிராமங்களில் வெளியாரின் சட்டவிரோத குடியேற்றங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கு எல்லை கிராமங்களிலுள்ள அரச காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ள வெளி மாவட்டத்தவர்களை வெளியேற்றக் கோரி இன்று புதன்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. அம்பாறை-மஹாஒயா நெடுஞ்சாலையிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவை அலுவலர் பிரிவிலுள்ள…

நவனீதம்பிள்ளையை சந்திப்பேன்: எழிலன் மனைவிக்குப் போட்டியாக சரளா ஜெயரட்னம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளதாக சரளா ஜெயரட்னம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஜெயரட்னத்தின் மனைவியே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து சரளா ஜெயரட்னம், நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார். கொழும்பில்…