தமிழர்ப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவு; நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

போர் முடிவடைந்துவிட்டது என அரசால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகள் தலைதூக்கியுள்ளன. தமிழ் மக்களின் கல்வியை அழிப்பதற்காகவே இவ்வாறு தமிழர்ப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகளை திட்டமிட்டு சில தீய சக்திகள் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு…

யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி

யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக Read More

சிறீலங்கா நோக்கிப் படையெடுக்கும் அமெரிக்க உயர் அதிகாரிகள்!

அமெரிக்காவின் நான்கு உயர்நிலை அதிகாரிகள் அடுத்த இரண்டு வாரங்களில் சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கூறுகிறது. சிறீலங்காவின் அரசதரப்பையும் குடியியல் சமூகப் பிரதிநிதிகளையும் அரசியல் தலைவர்களையும் வர்த்தகத் துறையினரையும் சந்தித்துப் பேசவே அமெரிக்க அதிகாரிகள் நால்வரும் கொழும்பு வரவுள்ளனர். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தேசிய பாதுகாப்பு…

ஸ்ரீ லங்காவில் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பு!

இலங்கையின் கிழக்கே  மட்டக்களப்பில் உள்ள ஆரையம்பதிக் கிராமத்திற்கும் முஸ்லீம் நகரமான காத்தான்குடி-க்கும் எல்லையில் அமைந்துள்ள சுவாமி விவேகாந்தரின் உருவச்சிலை நேற்று (செவ்வாய்கிழமை) காலை சரியாக 10 மணியளவில் மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி…

ராஜபக்சேவின் மைத்துனர் மீது செருப்பு வீச்சு!

இராமேஸ்வரம் வந்திருந்த இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் தங்கை கணவர் மீது செருப்பு வீசப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ராஜபக்சேயின் தங்கையின் கணவர்  தனது குடும்பத்தினருடன் வந்திருந்‌தார். இவரின் வருகையை அறிந்த அங்குள்ள ம.தி.மு.க. மற்றும் தமிழர் அமைப்பு கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு ‌தெரிவித்தனர். கோயிலில் சடங்குகள் முடிவடைந்த…

எதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டதால் தமிழ் இளைஞன் தற்கொலை!

தம்மைப் பாதுகாத்துக்கொள்ள புலம்பெயர்ந்து சென்றாலும் தஞ்சமடைந்த நாட்டினால் எதிலி அந்தஸ்து நிராகரிக் Read More

இலங்கை செல்கிறார் அணு விஞ்ஞானி அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் பிரபல அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம், இலங்கை செல்லவுள்ளதாக இந்திய தூதரக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் 20-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இவர் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் டாக்டர்…

அறிக்கையை விமர்சித்தால் கடும் நடவடிக்கை! எச்சரிக்கிறது சிறீலங்கா அரசு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சிக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போ Read More

“போலீஸ் அதிகாரம் கொடுத்தால் என்னைக் கைதுசெய்வார்கள்”: மகிந்த ராஜபக்சே

"மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை" என்று இலங்கை குடியரசு தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் 'டக்கன் குரோனிக்கல்' நாளேட்டிற்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை…

புலிகளின் தலைவர் பிரகாரனின் படத்துடனான தபால் முத்திரை வெளியீடு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் நிழல்படம் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டின் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. தலைவரின் படத்துடன் வெளிவந்துள்ள முத்திரைகளுடன் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட…

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் கொழும்பில் கைது

ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை முக்கிய உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கிய சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அப்போது சயனைட் உட்கொண்ட…

இலங்கை அறிக்கைகைய நிராகரித்தது அனைத்துலகக் குழு!

மகிந்த ராஜபக்சேவின் நல்லிணக்க ஆணைக்குழு தயாரித்துள்ள அறிக்கையை ICG எனப்படும் அனைத்துலக நெருக்கடிக் குழு (International Crisis Group -ICG)  நிராகரித்துள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த மகிந்த ராஜபக்சேவினால் பணிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை ICG நிராகரித்துள்ளதுடன்.…

கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டு; சிங்கள இராணுவ அதிகாரி சாட்சியம்!

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொன்று விடுமாறு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டார் என இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி தொடர்பில் விசாரணைகள்…

‘மிகவும் மோசமான நிலையில் வடக்கு கிழக்கு பெண்கள்’

உள்நாட்டுப் போருக்குப் பின்னான காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்னைகளை எதிர்கொள்வதாக அனைத்துலக நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் 'இண்டர்நேஷனல் கிரைசஸ் குரூப்' ( ஐசிஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது. இன்றும் பல விதமான…

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் ரணில்

இலங்கையின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் நீண்டகாலமாக கட்சிக்குள் வலுத்து வந்த நிலையிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நேற்று திங்கட்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. ரணிலை எதிர்த்துப்…

மனித உரிமைகள் ஆணையரை இலங்கைக்கு அனுப்புகிறது ஐ.நா!

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் வருடாந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக…

ஆட்களில்லா இடங்களில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்

இலங்கையில் 2009-ல் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்ட பல பொதுமக்களது சடலங்கள் வன்னியில் இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதிகளுக்கு முழுமையாகச் சென்றுவர வசதி செய்யப்பட்டாக வேண்டும் என்றும் ஐரோப்பிய…

ஐ.நா உரையை எழுத்திக் கொடுத்து மகிந்த படித்ததாக தகவல்

இலங்கை  குடியரசுத் தலைவர் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையை பிரிட்டனில் இருக்கும் ஒரு தொழில் ரீதியான பிரச்சார ( லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது என்று பிரபல பிரிட்டிஷ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை இலங்கை அரசு கடுமையாக மறுத்துள்ளது. ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது தனி…