மனித உரிமை பற்றி இலங்கை அரசு கவலையே படுவதில்லை :…

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 18-வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே மனித உரிமைகள்…

படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக்…

“நான் இறந்து விட்டால் என் உடல் மீது புலிக்கொடியைப் போர்த்துங்கள்”

இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடிப் போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனரும் மூத்த நடிகருமான மணிவண்ணன் கோரியுள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த…

இந்தியாவின் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்லவுள்ளது

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளது. இத்தகவலை சுஷ்மா சுவராஜ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என நிருபர்களிடம் பேசிய சுஷ்மா,…

சாவால்களை எதிர்கொள்ளும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை என போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும கண்காட்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு சென்றிருந்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பு…

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குற்றமல்ல அது தண்டனை!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றமல்ல என ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நினைத்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ரகோத்தமன் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த…

தமிழர்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : ராஜபக்சே

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே இலங்கையின் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என ராஜபக்சே…

ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் தூக்கிலிட 8 வாரம் தடை!

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இம்மூவரின் தூக்குத்தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன்…

சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீருடன் தவிப்பு

இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி போரின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐநாவின் சிறார்கள் நல அமைப்பாகிய 'யுனிசஃப்'…

மரண தண்டனையை ரத்துச் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து பாரத தேசத்தின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துமாறு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் தமிழக முதல்வர் ஊடாக…

வன்னி மருத்துவர்கள் தவறான அறிக்கை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை Read More

நெடுந்தீவில் மனிதப் புதைகுழி; 8 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நெடுந்தீவில் மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உதவி மாவட்ட ஆணையர் பணிமனைக்கு அருகில் புதிய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கட்டுமான வேலைக்கென நிலத்தை தோண்டியபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து இந்த மனித புதைகுழி பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ…

போர்குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும்: இந்திய மத்திய அரசு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நேற்றும் நாடாளுமன்றத்திலிருந்து…

இலங்கையில் அவசரக்காலச் சட்டம் நீக்கப்பட்டது!

கடந்த 3 தசாப்த காலங்களாக இலங்கையில் அமலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது இலங்கை குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். எனவே, அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் வழக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் இன்று விசேட…

இலங்கை போர்க்குற்றம்: இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் திட்டம்

இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கராணமான அனைவர் மீதும் அனைத்துலக நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை நடத்தக்கோரி வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி புதுடெல்லியில் இந்திய நாடாளுமன்றம் நோக்கி இந்த ஆர்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜெர்மனி காற்பந்தாட்ட அணிவகுப்பில் தமிழீழத் தேசியக் கொடி

ஜெர்மனியின் மிகப் பிரபல்யம் வாய்ந்த 'வெஸ்ட்பேலன்' திடலில் இலங்கை, பிரேசில், ஜப்பான் மற்றும் 40 உலக நாடுகளின் கொடிகளின் மத்தியில் தமிழீழத் தேசிய கொடியும் அணிவகுப்பிற்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சுமார் 80,000 மக்கள் அமர்ந்திருந்த ஜெர்மனியின் 'வெஸ்ட்பேலன் ஸ்டேடியன்' திடலில் நடைபெற்ற காற்பந்தாட்ட போட்டி ஆரம்ப அணிவகுப்பில் தமிழீழ…