கூடுதல் இடங்கள் மலையக மக்களுக்கு நன்மை பயக்குமா?

இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில், கடந்த முறையைவிட இம்முறை தமிழ்க் கட்சிகள் கூடுதல் இடங்களை வென்றுள்ளன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையிலான கட்சிகள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்ட போதிலும், இம்முறை தமிழர்களுக்கு கூடுதல் இடங்கள்…

விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு

வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு விடயங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம்! நாளை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மக்கள் அச்சம்!

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள்  ஆயுதம் தரித்த குழுவொன்று புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரியவருகின்றது. வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டாசு வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக…

வட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது…

இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது. மன்னார் மாவட்டத்தில்…

தமிழர்கள் நீதிக்காக யாரிடம் செல்வது? – யாழ், மன்னார் மாவட்ட…

வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற மிக மோசமான தேர்தல் முறைகேட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அவற்றுக்கு ஊக்கமளித்துவரும் நிலையில் தமிழர்கள் நீதிக்காக இனிமேல் யாரிடம் செல்வது என யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.…

தமிழரான நவநீதம்பிள்ளை யுத்தம் குறித்து ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்!- ஜி.எல்.பீரிஸ்…

இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தது குறித்து தமிழினத்தைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்று தான் கருதுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். அவர் ஊடகவியலாளர் சச்சின் பராசாத்துக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறான கருத்தை தெரிவித்துள்ளார்.  அத்துடன் இன்றைய சூழ்நிலையில் இந்தியா எவ்விதம் செயற்பட…

இலங்கை பாதுகாப்பு செயலரின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை!- ஐநா மனித உரிமைகள்…

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திர சதுக்கத்தில் காணப்படும் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலையை அகற்றுமாறு தாம் கோரியதாக, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும்,…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடலலையெனத் திரண்ட…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சியில் மஞ்சள் சிவப்புக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட பொதுச் சந்தை வளாகத்தில் மிகவும் எழுச்சிகரமான முறையில் நடைபெற்றது. இப்பரப்புரைக் கூட்டம் மாற்றுவலுவுடையோர் சங்கத் தலைவர் தி.சிவமாறன் தலைமையில் மாலை 3 மணியளவில் மங்கள விளக்கேற்றல், உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு…

இலங்கையின் தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்!- பான் கீ மூன் நம்பிக்கை

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு எதிர்வரும் மாகாணசபை தேர்தல் நல்ல சந்தர்ப்பம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். எனவே இலங்கையின் கட்சிகள் சமாதானமான முறையில் தேர்தலில் ஈடுபடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்,  இந்த தேர்தல்,…

யாழ் பெண்களை மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு கடத்திய டக்ளஸ் தேவானந்தா:…

யாழ் பகுதியில் உள்ள பெண்களை வேலை வாங்கித் தருவதாக மலேசியாவுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளது விக்கிலீக்ஸ். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் அந்நாட்டு இரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு அனுப்பப்படும்…

யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிப்பு நிலையங்கள்: சர்வதேச கண்காணிப்புக் குழுவினர்…

யாழ்ப்பாணத்தில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதது குறித்து சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அவர்கள் வாக்களிப்பு நிலையங்களை…

கதிர்காமத்தில் கந்தன் தோன்றுவார்: ஜோதிடத்தை நம்பி ஏமாந்த மக்கள்

கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கதிர்காம ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற மக்கள் கிரிவெஹர மாவத்தை,…

மத்திய மாகாண தேர்தலும் மலையகத் தமிழர்களின் அரசியல் எதிர்காலமும்

மத்திய மாகாணசபையில் அரசாங்கக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மோதலும் ஏனைய எதிரணிக் கட்சிகளின் போட்டியும் மலையக தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையில் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக சுமார் ஒரு மில்லியன் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர்.…

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிப்பு! மக்கள் அச்சம்

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிபன்னங்கண்டி, முரசுமோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வழமைக்கு மாறாக அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவ் இராணுவத்தினர் வீதியால் செல்வோர்…

விக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம்! அவரது முடிவே இவருக்கும் கிட்டும்!-…

மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம். இவ்வாறு ஆளும்கட்சி அஸ்வர் எம்.பி. மிரட்டும் பாணியில் தெரிவித்துள்ளார். மன்னார், வவுனியா, கிளிநொச்சி மக்களின் ஒருங்கிணைந்த…

அபிவிருத்தியா, அரசியல் உரிமையா? கொள்கை மோதல்

இந்தத் தேர்தலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி களத்தில் இறங்கியிருக்கின்றது. அதேநேரம் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது. வடமாகாண சபை என்பது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். இதற்குப் போதிய…

வடக்கில் இனவாதத்தை தூண்ட கூட்டமைப்பிற்கு இடமில்லை!– பாதுகாப்பு அதிகாரி

வடக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடமளிக்கப் போவதில்லை என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு, ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டம் புலனாய்வுப் பிரிவினரால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

த.தே.கூட்டமைப்பு வன்முறையை ஒருபோதும் விரும்பவில்லை! சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழவே விரும்புகிறோம்:…

த.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான அரசியல், பொருளாதார, சமுக அபிலாஷைகளை நிறைவு செய்து கொண்டு வாழவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்த்…

நாட்டை பிளவுபடுத்துவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது!- மகிந்த ராஜபக்ச

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு ஏமாற்றமளிக்கிறது,…

வடக்கு மாகாண சபை தேர்தல்! தமிழர்களின் தீர்ப்பு என்ன?

இலங்கையிலும், இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. அந்தளவுக்கு தேர்தல் நெருங்கி வந்து விட்டது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் முறையும் அதன் முடிவுகளும் இலங்கையின் எந்தவொரு மாகாண சபைக்கும் இல்லாத எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது. மாகாண…

தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்வரன்…

தமிழரும் சிங்களவரும் கணவன்- மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில்…

தனிநாடு அல்ல சுயாட்சியையே கோருகிறோம்! இரா. சம்பந்தன்

தமது கட்சி கேட்பது தனிநாடு அல்ல, சுயாட்சி அதிகாரமே என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமது தேர்தல் கொள்கை அறிக்கை முழுமையாக படித்து அறியுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்வதாக கூறினார். கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் அரசு சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற…

வடக்கில் யார் வெல்வார்கள் என்பது எனக்கு தெரியும்: ஜனாதிபதி மகிந்த…

வடக்கில் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் ஊடகங்களில் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் தேர்தல் முடிவுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் வடக்கில்…