இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் முதலமைச்சர் பதவிப் பிரமாண…
கொழும்பில் இராவணனுக்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கோத்தபாய
கொழும்பு பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தெவ்ரம் விகாரை நேற்று இலங்கை வேந்தன் இராவணனுக்கான பெரஹெர (திருவிழா) ஒன்றை நடத்தியது. இதில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டார். பண்டைய காலத்தில் இலங்கையை ஆட்சி செய்ததாக கூறப்படும் இராவணன் மன்னரை அடையாளப்படுத்தி நடத்தப்பட்ட இந்த பெரஹெர…
எங்கள் உரிமைப் போரின் வீச்சு என்றும் மங்கிவிடாது!
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம். இது அடிப்படையில் எமது உரிமைகளுக்கான அபிலாசைகளை இதயங்களில் சுமந்து கொண்டிருக்கும் எமது மக்களின் மகத்தான வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் எங்கள் உரிமைப் போரின் வீச்சு என்றும் மங்கிவிடாது என்பதை எமது மக்கள் முழு…
உதிரும் மாகாண சபை அதிகாரங்கள்!
அரசின் மீதான வெறுப்பினைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள் வடக்கு வாக்காளப் பெருமக்கள். ஏறத்தாழ 85 சதவீத வாக்குகள் என்பது பேரழிவின் பின்னான 4 வருடங்களில் தமிழ் மக்களின் மனங்களில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அரசு மேற்கொள்ளும் அபிவிருத்திகள் இழப்பினால் வந்த ரணங்களை ஆற்றாது கம்பள நெடுஞ்சாலைகளை்…
கூட்டமைப்பின் வெற்றியால் நெருக்கடிக்குள் சர்வதேசம்!
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள பேராதரவு, உலகத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலக ஊடகங்கள் அனைத்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை பிரமிப்போடு பார்க்கின்றன. ஜனநாயக ரீதியாக தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ள அரசியல் அபிலாசைகளை உலக நாடுகள் அதிர்ச்சியோடும்…
வடக்கிற்கு உரிய அதிகாரங்களை வழங்காவிடில் அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்படும்!
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வடக்கிற்கு உரிய ஆட்சி அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிடின், சர்வதே ரீதியாக இலங்கை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம். ரி. ஹஸன் அலி பா.உ. எச்சரித்துள்ளார். அது மட்டுமின்றி,…
வெருகல் முருகன் சிலையை மீளப்பெற புதிய முயற்சி
தமிழ்நாடு சிலைகள் காப்பகத்திலுள்ள தமது ஆலயத்திற்குரிய சிலை என நம்பப்படும் முருகன் சிலையை மீளப்பெற தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியை நாடுவதற்கு வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2005 - 2007 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ…
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம்: சம்பந்தர்
இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு வந்துள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவான கூட்டமைப்பை அழிக்க வேண்டும்: கர்ச்சிக்கும்…
விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல் அதன் அரசியல் பிரிவையும் அழிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அந்த அமைப்பின் அரசியல் பிரிவை அழிக்காததால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளை தற்பொழுது அனுபவிக்க நேர்ந்துள்ளது என்றும் அவர்…
பான் கீ மூனின் காலம் கடந்த கழிவிரக்கம் தமிழர் காவியத்திற்கு…
ஐ.நா.சபையின் 68 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஐ.நா.சபையின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனைத் தெரியப்படுத்தியுள்ளார். வன்னிப் போர் முடிவுற்ற கையோடு போர் தந்த இழப்புகளை அவதானிப்பதற்காக வருகை தந்த…
யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண ஆளுநரின் பதில் கிடைத்ததும், முதலமைச்சர் சத்தியப்பிரமாண விடயத்தையும் அமைச்சர் வாரிய நியமனங்களைப் பற்றியும் பரிசீலிப்போம். அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய 28 அங்கத்தவர்களும் ஏகமனதான தீர்மானத்துடன் என்னை…
குற்றச்செயல்களுக்கு தீர்வு காணாவிடில் சர்வதேச விசாரணை!- நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு அமெரிக்கா ஆதரவினை வெளியிட்டுள்ளது. குற்றச் செயல் விசாரணை, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு காத்திரமான வகையில் தீர்வு காணாவிட்டால், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார். நவநீதம்பிள்ளையின் மதிப்பீடுகள் கவனத்திற் செலுத்தப்பட வேண்டியது…
இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை: மனித உரிமை பேரவையில் பிளவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுபட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான்,…
மாகாணங்களுக்கு காணி அதிகாரம் இல்லை: இலங்கை உச்சநீதிமன்றம்
இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மோஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் வியாழனன்று பரபரப்பான இந்தத் தீர்ப்பை…
நாங்கள் வீழ்ந்து விடவில்லை! உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!
இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்க அடித்தளமாக, ஓர் ஆரம்பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள்…
சுதந்திர தாகம் தணியவில்லை என்பதன் வெளிப்பாடே தேர்தல் வெற்றி!- வி.…
இனப்படுகொலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்குள்ளும், தங்களுடைய சுதந்திர தாகம் தணியவில்லை என்பதனை தாயக மக்கள் உலகிற்கு தெட்டத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்ரகுமாரன் அவர்கள் பொங்குதமிழ் எழுச்சி முழக்கமிட்டுள்ளார். தொடங்கியுள்ள ஐ.நாவின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கெடுப்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள இலங்கை…
இலங்கைப் போர்க்குற்ற விசாரணை : நவி பிள்ளை எச்சரிக்கை
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம்…
நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம்…
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுத்…
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்!
வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் உணர்வுகள, அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன என்ற உண்மையை எவரும் மறுதலிக்க மாட்டார்கள். அதேநேரம் தமிழ் மக்கள் தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயகம் நிறைந்த கள நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்ற உண்மையும் இங்கு புலப்படுகிறது. அதாவது தமிழ்…
விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்?
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு அமைய மாகாண முதலமைச்சர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.…
வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!
இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை…
வடக்கிற்கு 13வது திருத்த அதிகாரங்கள் வழங்கினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்!–…
வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது. 13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை…
வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா…
கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும்…