யாழ். குடாநாட்டில் கடும் வரட்சி

யாழ். குடாநாட்டில் கடும் வரட்சியினாலும் மழை இன்மையினாலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக  விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் இன்னமும் பருவமழை ஆரம்பிக்கவில்லை. கடும் வரட்சியும் வெப்ப நிலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் விதைத்த வயல்களில் முளைத்துவரும் நெற்பயிரை பாதுகாக்க முடியாமையால் பயிர்கள் கருகி அழிவடைந்து வருவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.…

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை: கனடா அறிவித்துள்ளது

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அந்த நாட்டின் தீர்மானத்தை மதிப்பதாக கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீபன்…

முல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: மக்கள் கோரிக்கை

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால்…

கே.பியை வைத்து புதிய தலைமுறை போடும் நாடகம் என்ன ?

சமீபத்தில் நடைபெற்ற வடமாகானசபைத் தேர்தல் குறித்து, செய்திகளை சேகரிக்கச் சென்ற , முரளீதரன் என்னும் புதிய தலைமுறையின் தொலைக்காட்சி நிருபர் சில வேண்டத்தகாத வேலைகளில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர்களை பேட்டி கண்டார் பரவாயில்லை ! ஆனால் ஈழத் தமிழர்களின் மற்றும் உலகத் தமிழர்களின் துரோகியான கே.பியையும் இவர் பேட்டிகண்டு, அதனை…

சீ.வி விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை…

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர்…

மாகாண சபை தற்போதுதான் பிறந்த குழந்தை

போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில், அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு அரசியல் தீர்வு அவசியம், இதை அடைய இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு நல்லுறவும் அவசியம், எனவே தான் ஒரு சுமுகமான சமிக்ஞையைத் தரும் வண்ணம், இலங்கையின்…

இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண

இலங்கையில் தேசியப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.…

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை வடமாகாண சபை உருவாக்க வேண்டும்!…

வடமாகாண சபை நிர்வாகம் இந்த நாட்டில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க உழைக்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை  தெரிவித்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார். செவ்வியின் முழுவிபரம் வருமாறு; கேள்வி:…

வட மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் இன்று பதவியேற்பு

வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வி. விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப்…

மாகாண சபை அதிகாரம் தொடர்பில் இந்தியாவின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்த…

வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் அப்படியே வழங்க வேண்டும் என இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாகாண சபைக்கான இந்த அதிகாரங்களை பெறுவதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசின் உதவியுடன்…

இந்திய மீனவர் அத்துமீறல் பிரச்சினை! ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொண்டு செல்லப்…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்தாது போனால், இந்தியா இந்த விடயத்தில் உரிய தீர்வை வழங்காது போனால், தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிடப் போவதாக இலங்கை எச்சரித்துள்ளது. இலங்கையின் மீன்பிடித்துறை உதவி அமைச்சர் சரத்குமார குணரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால்…

விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது சிலரின்…

இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்…

வாசுதேவ தனது சம்மந்தி விக்னேஸ்வரனுக்கு அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க முயற்சி: இராவணா…

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது சம்மந்தியான விக்னேஸ்வரனுக்கு அதிகளவான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் இடமில்லாது போனால் வடக்கில் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதை அறிந்திருப்பதால் வாசுதேவ இவ்வாறு தனது…

புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை! அதனால் பிரபாகரன் வீடு தகர்க்கப்பட்டது:…

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியுடனான வீடு தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின், பாரிய பதுங்கு குழியுடன் அமைந்திருந்த…

கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படும்! கிழக்கு தீர்மானம் குறித்து அஞ்சத்…

அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் செயற்பட தயாராக உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு யதார்த்தமாக சிந்தித்து வடக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். வட மாகாண சபைக்கு ஐ. ம. சு.…

முல்லைத்தீவில் உச்ச வேகத்தில் நில ஆக்கிரமிப்பு! நெருக்கடியில் தமிழர்கள்

வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நில ஆக்கிரமிப்பு உச்ச வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், கொக்குத்தொடுவாய் கிராமத்தில் புதிதாக 2 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலம் அபகரிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளனர். 2009ம் ஆண்டின் பின்னர் மாவட்டத்தின் எல்லைக்…

தமிழ் மற்றும் முஸ்லிம் நிர்வாகம் இணைந்து ஈழத்தை அமைக்கத் திட்டம்:…

வடக்கின் தமிழ் நிர்வாகமும் கிழக்கின் முஸ்லிம் நிர்வாகமும் இணைந்து ஈழத்தை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்கு முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையில் அண்மையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டமை மிகவும் பாரதூரமான…

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை வெடி வைத்து…

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலத்தடி வீடு இராணுவத்தினரால் இன்று மாலை தகர்க்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி வீடு, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழிகள் மற்றும் வீடுகள் யுத்தத்தின் பின்னர் போர் நினைவுச் சின்னங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.…

நியூயோர்க்கில் மகிந்தவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை! – மன்மோகன் சிங்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தன்னை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்த போதும் அதனை தன்னால் வழங்க முடியாது போனதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து வந்த அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே இந்த விடயத்தை கூறினார். இலங்கை குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட…

பதவிப்பிரமாணம், அமைச்சரவை தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் முடிவின்றி…

வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் மற்றும் வடமாகாண அமைச்சரவையின் நியமனம் குறித்த தீர்மானத்துக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று கொழும்பில் கூடிய போதும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது. இந்தநிலையில் நாளை 4ம் திகதி காலை மீண்டும் கூடி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எங்கே…

அதிவேக படகில் சென்று தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த ஈழத்தமிழர்

கடற்பரப்பில் கடும் பாதுகாப்பை மீறி தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகில் அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல்வழியே ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அண்மையில் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அதிவேகப்…

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்த நீர்கொழும்பைச் சேர்ந்த பத்மபிரிய சிறிவர்தன என்பவரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உரிய காலத்திற்கு பின்னர் சட்ட நியதிகளை கருத்திற் கொள்ளாது…

வெளிநாட்டு இராஜதந்திரிகள், மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் பதவிப்…

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வடக்கு மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுனப் பிரதானிகள் மற்றும் வடக்கு மக்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.…