இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கையின் மனித உரிமைகளை கட்டுப்படுத்த பொதுநலவாயம் புதிய ஏற்பாடு ஒன்றுக்கு…
பொதுநலவாய நாடுகளின் இராஜதந்திரிகள், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் முகமாக குழுக்கூட்டம் நேற்றும் இன்றும் லண்டனில் நடைபெறுகிறது. இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள், இலங்கையில் மற்றும் பொதுநலவாய நாடுகளில்…
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை புதுடில்லி வருமாறு இந்தியா அழைப்பு!
அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறினார். வடக்குக்கு…
நாவற்குழியில் சிங்கள மக்கள் சிறிதரன் எம்.பியுடன் கடும் வாக்குவாதம்
நாவற்குழியில் அமைந்துள்ள அரச காணியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் முயற்சி நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று அதை தடுத்து நிறுத்த முயன்ற சிறீதரன் எம்.பிக்கும் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இது தங்களுக்கு சொந்தமான இடம் எனவும் அந்த இடத்தில்…
வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி!- பொதுபலசேனா எச்சரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியானது வரவேற்கத்தக்கது. ஆனால் இவ் வெற்றியை வைத்து பிரிவினைவாதம் பேசுவது தவறு. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க முயன்றால் அதற்கான பதிலடியை நாம் கொடுப்போம் என பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை சீரழிக்கும் விடயத்தை யார் செய்தாலும் அதற்கு நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். கசினோ…
தமிழ் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த நடவடிக்கை!- தேசிய சுதந்திர முன்னணி
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பிரிவினைவாத அரசியல் நோக்கத்தை வலுப்படுத்தும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், இந்த கருத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரச்சினை உள்ளதாக…
கொமன்வெல்த் மாநாட்டை நடத்த இலங்கைக்கு தகுதி இல்லை!- ரணில் விக்ரமசிங்க!
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கொமன்வெல்த் விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் கொமன்வெல்த் மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார் அதனால், கொமன்வெல்த் மாநாடு தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத்…
யுத்தத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை கணக்கெடுக்க அரசாங்கம் முடிவு
யுத்தகாலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ஆட்களுக்கும், சொத்துகளுக்கும் உண்டான சேதங்கள் தொடர்பாக ஒரு விசேட கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது. இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் 30 ம் திகதி தொடக்கம் டிசெம்பர் 10 ம் திகதி வரை நடைபெறும் என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின்…
பாலச்சந்திரன் படுகொலை! இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங்களே!- பாதுகாப்பு அமைச்சு
இலங்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை உள்ளிட்ட பல்வேறு போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சர்வதேச ஊடகங்கள் முயற்சி பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை…
13ம் திருத்தத்திற்கு அப்பால் வடகிழக்கு இணைந்த தீர்வினை நாடுமா வடமாகாணசபை?
புத்திசாலித் தனமான வகையிலே 13வது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று வட கிழக்கு இணைந்த சமஷ்டி மூலமான ஓர் தீர்வை முன்வைப்பது இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த நாட்டினுடைய எதிர்காலத்திற்கும் சிறந்தது என யாழ்.பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புக்கள் பீடாதிபதி எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பட்ட துன்பங்களின் எதிர்விளைவாக…
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை…
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.…
என்ன செய்யப் போகிறது இந்தியா?
13வது திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்துவது குறித்தோ, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்தோ, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்று, ஒரே போடு போட்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை திருப்பி அனுப்பி வைத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. காலத்துக்குக் காலம் தெரிவுக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் என்று…
உரிமைகளை வென்றெடுக்க தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம்: இரா.சம்பந்தன்
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாக உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாடுகளின் அழுத்தத்தினாலேயே அரசாங்கம் வடமாகாண சபைத் தேர்தலை…
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடையலாமா?
தமிழ் சமுதாயம் பாரிய பின்னடைவு காண்பதற்கும், சொல்லொண்ணா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதற்கும் பிரதான காரணம் தமிழ் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் விட்டுக் கொடுக்காத தன்மையும் காட்டிக் கொடுப்புக்களுமேயாகும். இதன் காரணமாகவே எந்தவொரு இலக்கையோ, நோக்கத்தையோ அடைய முடியாதுள்ளது. இது இன்று நேற்றன்று, தொன்று தொட்டு தொடர்ந்து வருவதும் தெரிந்த…
துயிலுமில்லங்களில் விரைவில் பூப்போடுவோம்: சிறீதரன் எம்பி- பதவியேற்பு விழாவில் முழக்கம்
அரசியலில் நுழைவது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்றிருந்த காலம் இனி மாற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபையின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ் கூட்டமைப்பு எத்தனிப்பது…
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல்கனவாகத்தான் இருக்கு முடியும். என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான…
இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை அதிரடியாக…
இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஜோன் பெற்றியின் தலைமையில் தனி ஆள் விசாரணைக் குழுவை அமைத்தார்.…
தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: தமிழக தலைவர்களிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள்
இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறுவதை தடுக்குமாறு மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயத்தில் அரசியல் எதுவும் இல்லை. இலங்கையின் கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையில் வரும் தமிழக மீனவர்கள்…
சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக்கூடாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தா காட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக்கூடாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை…
முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்களைக் கண்டு நடுநடுங்கிப் போன ஆளுநர் சந்திரசிறி!…
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களைக் கண்டு ஆளுநர் சந்திரசிறியும் அவரது அடிவருடிகளும் நடுங்கிப் போன சம்பவம் இன்று யாழில் பதவியேற்பு தினத்தில் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப்பிரமாணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து…
தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்கு தீர்வு! அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அண்மையில் ஜனாதிபதி அவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பின் போதும் இதனை வலியுறுத்தியிருந்தார். எனினும் இந்திய அமைச்சர் இது தொடர்பில் அவர்…
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தோல்வி அறிக்கை விரைவில் வெளியாகும்!
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஜோன் ஹிட்டிங் தெரிவித்துள்ளார். இறுதிப்போர் காலத்தில் வன்னி மக்களை பாதுகாப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது என்று குற்றம்…
வடமாகாண அமைச்சர்கள் அறிவிப்பு; ஈபிஆர்எல்எப், பிளாட் எதிர்ப்பு
இழுபறியில் இருந்து வந்த இலங்கை வடமாகாண அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி, வடமாகாண சபையின் தவிசாளாராக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சி.வீ.கே.சிவஞானம், சபையின் பிரதித் தலைவராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆன்டன் ஜெயநாதன், முதலமைச்சராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த…
த.தே.கூட்டமைப்பின் பூநகரி அமைப்பாளரை தேடித் திரிந்த இராணுவம்: பீதியில் அவரது…
கிளிநொச்சி பூநகரிப் பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் இராஜரட்ணம் கோணேஸ்வரன் என்பவர் அப்பகுதி இராணுவத்தினரால் தேடப்பட்டுள்ளார். கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கிராஞ்சி சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர், “உமது மகன் எங்கே? எங்கே வேலை செய்கிறார்?,…