‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டவர்கள் நாடு திரும்ப முடியாதாம்’

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். தேவையென்றால் இந்தியாவில் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை…

இலங்கைக்கு எதிராக பிரித்தானியா செயற்படவேண்டும் : டேவிட் மில்லிபேன்ட்

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய Read More

‘அனைத்துலக பொறிமுறையின் அவசியத்தை இணைத்திருக்கலாம்’

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது. இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்னையை…

இலங்கை மீது சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை வேண்டும் : அமெரிக்கா

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை சமர்பித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்பட்வில்லை. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் நேற்று (07) ஒரு அறிக்கை…

இசைப்பிரியாவை கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றம்: ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். போர்க் காலப் பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான…

பேரணிக்கு வந்தவர்கள் தடுக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி

காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கொழும்பிற்கு வராமல் வவுனியாவில் தடுக்கப்பட்டமை குறித்து Read More

‘காணாமல் போனோரின்’ உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும், தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த பலரை வவுனியாவில் போலிசார் தடுத்து நிறுத்திய நிலையில், கொழும்பில் நடந்த…

இலங்கையில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது : விக்கிரமபாகு

இலங்கையில் சுதந்திரம் என்பது கிடையாது, இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;…

ராஜபக்சேவை காப்பாற்ற அமெரிக்கா சென்ற சுப்பிரமணிய சாமி

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜெனிவாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வாஷிங்டனில் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். சுப்பிரமணியசாமியின் பூர்வீகம் மதுரைஅருகே உள்ள சோழவந்தான். …

காணமல் போனோரின் உறவினர்கள் தடுத்து வைப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பில்இன்று நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை போலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம்,…

இலங்கை மீதான தீர்மானம் திருப்தி அளிக்கவில்லை : சுரேஷ் பிரேமசந்திரன்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை…

படகுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தமிழர்களுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள்…

அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் வெளியீடு

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினைக் வலியுறுமாறு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற  நாடுகளது அரசுகளை கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இக்கோரிக்கையினை வலிறுத்தும் பொருட்டு அனைத்துலக விசாரணையினை கோரும் தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்துள்ளது.…

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒப்பநாயக்க பள்ளி வாசல் மீதும் அடையாளந் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல்களை…

‘இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் குற்றச்சாட்டுகள்’ : இராணுவத் தளபதி

இலங்கைக்கு அபகீர்த்தி எற்படுத்தவும், ஓர் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்காகவே ஜெனீவாவில் மனித உரிமைகளை நாங்கள் மீறியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள்; எமது இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்று இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார்.…

‘போர்க்குற்ற விசாரணை தேவை’ : உலகத் தமிழர் பேரவை மாநாடு

உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை…

‘தேவையற்ற தீர்மானம்’ – ஜெனிவாவில் இலங்கை அமைச்சர் பேச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை…

‘இலங்கை நடவடிக்கைகளால் ஏமாற்றம்’ – பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றாமை, வடமாகாண தேர்தலை தள்ளிப் போட்டு வருவதல் ஆகியவை போன்ற நடவடிக்கைகளின் மூலம் இலங்கை குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுத்துறையின் துணைச் செயலர் றொபர்ட் பிளேக் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவு குழுவின்,…

காமன்வெல்த் அகப்பக்கத்திலிருந்து இலங்கையின் இலச்சினை நீக்கப்பட்டுள்ளது

காமன்வெல்த் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இதுவரை காட்சிப்படுத்தியிருந்த 'CHOM 2013, SriLanka' இலங்கையின் அனுசரனை இலச்சினையை நீக்கிவிட்டு, 'CHOGM 2011 , AUSTRALIA" என்ற இலச்சினையை காட்சிப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கடந்த பெப்ரவரி 10-13 தேதிகளில் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, திட்டமிடப்பட்டுள்ள…

வேளாங்கன்னி நோக்கிச் சென்ற சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் வேளாங்கன்னி நோக்கிப் பயணித்த இலங்கையர்கள் சிலர் திருவாரூர் மாவட்டத்தில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் 75 பேர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக 'த ஹிந்து' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் வேளாங்கன்னி நோக்கிச் செல்வதால் ஏற்படக்கூடிய மோதல் நிலைமையை தவிர்க்கும் நோக்கிலேயே இந்திய போலிஸார் இந்த…

‘நோ பயர் ஸோன்’ படத்தை ஜெனிவாவில் திரையிட இலங்கை எதிர்ப்பு

கொழும்பு: சனல் 4 தயாரித்துள்ள 'நோ பயர் ஸோன்' ஆவணப்படத்தை ஐ.நா மனிதஉரிமை அவையில் திரையிட இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி உலகிற்கு தெரிவிக்கும் வகையில் நோ பயர் ஸோன் என்ற ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்துள்ளது. இந்த படம்…

இலங்கை இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் : TGTE

இலங்கைத் தீவினை மையப்படுத்திய அனைவரினது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு சவால் மிகுந்த இராஜதந்திரக் களமாக ஐ.நா மனித உரிமை பேரவை அமைந்துள்ள நிலையில்…