பேச்சைக் குறைக்குமாறு இலங்கைக்கு ஐ.நா வலியுறுத்து!

இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம்ஆம் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சுமார் 480000 பேர் இடம்பெயர்ந்தனர். அவர்களை மீள…

சர்வதேச சமூகத்திற்கு நல்ல முகத்தை காட்ட அரசாங்கம் முயற்சி

இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளின் நிமித்தம் அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தமது நல்ல முகத்தை காட்ட முயற்சிப்பதாக சிலோன் டுடே ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் மனிதஉரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகின்றமை மற்றும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு போன்றவற்றிற்காக…

மோட்டார் சைக்கிளில் பெண்கள் கால்களை எவ்வாறு வைத்துச் செல்வது? –…

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பெண்கள் அமர்ந்து பயணம் செய்யும் முறை தொடர்பாக பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் தற்போது சர்ச்சை தோன்றியுள்ளது. மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள ஏற்கனவே பல வருடங்களாக தங்கள் இரு கால்களையும் இடது பக்கமாக வைத்து…

போர்க்குற்றங்கள் தொடர்பாக பீரிஸிடம் இந்திய அரசு கேள்வியெழுப்ப வேண்டும்!- மன்னிப்புச்…

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியா இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்ப வேண்டும் என்றும்,  மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் கட்டாயமாக தலையீடு செய்ய வேண்டும் என்றும்  சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்…

காமன்வெல்த் மாநாடு: மன்மோகன் வருவார் என்று இலங்கை நம்பிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாக அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை அழைப்பதற்காக புதுடில்லி சென்றுள்ள பேராசிரியர் ஜீஎல் பீரீஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தபோதே இதைத் தெரிவித்தார். ஆசியாவில் 24 ஆண்டுகளுக்கு…

‘நவி பிள்ளை அம்மையாரை சந்திக்க தீவிரமாக உள்ளேன்’: எழிலன் மனைவி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை, தமது விஜயத்தின்போது பலதரப்படட்டவர்களையும் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரைச் சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பெறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிகரன் ஈடுபட்டுள்ளார். நவி பிள்ளை அம்மையாரைச் சந்திப்பதற்கு…

சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை!

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென கோரினாலும் அதற்கு இடமளிக்கப்…

கோத்தபாய ஐ.நாவுக்கு சவால்: அடங்கிப் போகுமா ஐ.நா?

இலங்கைக்கு எதிராக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியுமா என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஐ.நா சபைக்கு சவால் விடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு சவால் விடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, 40ஆயிரம் பொதுமக்கள்…

இந்தியாவுடனான பிரச்சினைகளின் போது இலங்கை பக்கம் சார முடியாது: சீனா-…

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முரண்பாடுகளின் போது தாம் இலங்கையின் பக்கம் சார்ந்திருக்க போவதில்லை என சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. கச்சதீவு மற்றும் 13வது அரசியல் திருத்தச் சட்டம் சம்பந்தமாக இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பில் நூறு சத வீதம் இணங்க முடியாது என்றும் அந்த நாடுகள்…

நவனீதம்பிள்ளைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர மகஜர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். 47 அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு அவசர மகஜரை அனுப்பி வைத்துள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிடுமாறு நவனீதம்பிள்ளையிடம் கோரிக்கை…

நெடுந்தீவு எங்கள் கோட்டை. “இதற்குள் எவனடா வந்தவன்” ஈபிடீபி கொலை…

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தீவகத்திற்கான ஒரேயொரு வேட்பாளராக 12ம் இலக்கத்தில் போட்டியிடும் யாழ் மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அவர்களை ஆதரித்து நெடுந்தீவில் அவரது ஆதரவாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது.. ... நெடுந்தீவு மேற்கு ஒற்றைப் பனையடி என்றவிடத்தில் நேற்று மதியம் EPDP ஐச் சேர்ந்த சுதன் மோகனதாஸ் என்பவர்கள்…

மக்களை விசாரிக்க இராணுவத்துக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை

இலங்கையில் வெலிவேரிய பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ம் திகதி பொதுமக்கள் மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள இராணுவத்தினர், பிரதேச மக்களை முகாம்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளது. சட்டப்படி பொதுமக்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரம்…

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இலக்கம் 1 இல் போட்டியிடும் திரு ப.அரியரத்தினம், இலக்கம் 5 இல் போட்டியிடும் திரு த. குருகுலராசா, இலக்கம்…

இலங்கையில் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து பாப்பரசரின் பிரதிநிதி கரிசனை

இலங்கையிலும் மதசகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி அதி வண. ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து கரிசனை வெளியிட்டிருக்கின்றார். வரலாற்று சிறப்பு மிக்க மடுமாதாவின் ஆடி மாதத் திருவிழா இன்று காலை திருப்பலிப் பூஜையுடன் நிறைவுபெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு…

வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள்…

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை இந்த உத்தரவு…

நாமல் ராஜபக்ச, கருணா கூட்டுச் சதி: 6000 சிங்களவர்களை குடியேற்றுவேன்…

ஸ்ரீலங்கா அதிபரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் கருணாவுடன் இணைந்து 6,000 சிங்களவர்களை குடியேற்றும் புது நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளார் . வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, பிரதி பிரதம சங்கநாயக்கர்…

கொழும்பில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

இலங்கையில் வெலிவெரியவில் சிங்கள மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகளினால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தலைநகர் கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில், பொது எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்துக்கான சக்தி என்ற…

விக்னேஸ்வரன் மற்றும் ஒரு செல்வநாயகம்!- எஸ் எல் குணசேகர

வடமாகாண சபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றுமொரு செல்வநாயகம் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எல். குணசேகர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் நேர்மையான நீதிபதி,  ஆனால் மறுப்பக்கத்தில் அவர் மற்றுமொரு…

விக்னேஸ்வரன், பிரபாகரனின் மறு அவதாரமாம்!- சிங்கள எழுத்தாளர் சமில லியனகே

பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லியனகே தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விக்கினேஸ்வரனின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லியனகே இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை…

இலங்கை அரசு பிழையான பாதையில் பயணிப்பதை சொல்ஹெய்ம், லீகுவான்யூ கருத்துக்கள்…

இலங்கை அரசாங்கம் மிக பிழையான பாதையில் பயணித்துக் கொண்டு, தமிழர்களுக்கு அநீதிகளை தொடர்ந்தும் இழைத்துக் கொண்டிருப்பதை சர்வதேசம் சமகாலத்தில் உணரத் தொடங்கியிருப்பதன் வெளிப்பாடே எரிக் சொல்ஹெய்ம் மற்றும் லீகுவான்யூ போன்வர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தீர்வு…

அகிம்சை ரீதியான உலகம் விரும்புகின்ற போராட்ட வடிவம் தான் வட…

நாளை இந்த பிள்ளைகள் இந்த மண்ணிலேயே வளந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த மண்ணிலுள்ளவர்களிடம் தேசிய உணர்வு நிறுத்தி வைத்திருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ். ஆனைக்கோட்டை சனசமூக நிலையத்தின் சிறுவர் விளையாட்டு போட்டியில்…

கிளிநொச்சியில் கூட்டமைப்பினரின் தேர்தல் பிரசார நடவடிக்கையினை படம் பிடித்த புலனாய்வாளர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடை பவனியுடன் கூடிய தேர்தல் பிரசார நடவடிக்கையினை காலை 9 மணியளவில் இரணைமடுச் சந்தியில் ஆரம்பித்து யு9 வீதியூடாக கிளிநொச்சி சந்தை வரையும் மேற்கொண்டு நிறைவு செய்தனர். இப்பிரசார நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த்…

பள்ளிவாசல் தாக்குதல் விவகாரம்!- அரசாங்கமும், முஸ்லிம் அமைச்சர்களின் நிலையும்!

இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையால் இரண்டு இரவுகளாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டது. ஆனால் நேற்றும் அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும் கலகத்தடுப்பு பொலிசாரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பள்ளிவாசலை புனரமைக்கும்…