கி.சீலதாஸ் - மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன்…
மலேசிய விமான நிறுவனம் என்ற பெயர் மறைந்து போகக் கூடாது-…
தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ்(எம்ஏஎஸ்) மறைந்து போவதைவிட அதை ஏர் ஏசியாவுக்கு “மணம் செய்து வைப்பது” நல்லது என்கிறார் மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின். ஏர் ஏசியாவும் எம்ஏஎஸ்- ஸும் ஏற்கனவே “மணம் செய்ததுண்டு” ஏன்று 2011-இல் இரண்டும் பங்கு பரிமாற்றம் செய்து கொண்டதை காடிர் நினைவுபடுத்தினார்.…
மூன்றாண்டுகளுக்குமேல் பிரதமராக இருக்கப் போவதில்லை: மகாதிர் திட்டவட்டம்
டாக்டர் மகாதிர் முகம்மட் எப்போது பிரதமர் பதவியிலிருந்து விலகுவார், அவருக்குப் பின் யார் போன்ற கேள்விகள் ஒவ்வொரு நாளும் எழுப்பப்பட்டு அது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில், அவர் மூன்றாண்டுகளுக்குள் பொறுப்பை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிடம் ஒப்படைத்து விலகிக் கொள்ளப்போவதாக கூறினார். “என்னைப் பொறுத்தவரை…
மகாதிருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் என்பது அண்டப் புளுகு, ஆகாசப்…
சதிகாரர்களும் மின்வெளி செயல்பாட்டாளர்களும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறார் லிம் கிட் சியாங். அவர்களின் பொய்களில் ஒன்றுதான் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்பது. “மகாதிருக்கு எதிரான நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் என்பது கெடுமதியாளர்களின்…
கோலா கோ ஓராங் அஸ்லிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்பதற்கு வேதமூர்த்தி…
பிரதமர்துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி, கோலா கோ- இல் உள்ள ஒராங் அஸ்லி மக்களை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் திட்டமிடுவதாக கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமார் நிக் அப்துல்லா கூறியிருப்பதை மறுத்தார். பதேக் இன மக்களை அவர்கள் இப்போது வசிக்கும் கோலா கோவை…
ஐஜிபி: ஜோ லோவைக் கொண்டுவர ‘ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன’
போலீஸ் பிடியில் சிக்காமல் ஆசிய நாடு ஒன்றில் மறைந்து வாழும் தொழிலதிபர் ஜோ லோவைக் கைது செய்யவும் நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவரவும் புக்கிட் அமான் முயற்சி மேற்கொண்டிருக்கிறதென இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார். அந் நாட்டு அரசாங்கத்துடன் சேர்ந்து “சில ஏற்பாடுகளைச் செய்து வருவதாக”,…
14 ஓராங் அஸ்லிகள் இறந்த கிராமம் தனித்து வைக்கப்பட்டது
குவா மூசாங், கோலா கோ-வில் 14 ஓராங் அஸ்லிகள் மரணமுற்ற ஒரு கிராமம் சுற்றி வளைக்கப்பட்டுத் தனித்து வைக்கப்படும் என கிளந்தான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்டுடன் சேர்ந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஸைனி உசேன்,…
சமயங்களிடையே நிலவும் ஒற்றுமை ஓங்க வேண்டும்! சேவியர் ஜெயக்குமாரின் நோன்பு…
நம் நாட்டில் நிலவும் தனித்தன்மைகொண்ட வேற்றுமையில் ஒற்றுமையுள்ள சூழலை மேலும் தொடர்ந்து போற்றி வளர்ப்பதுடன் நமது எதிர்காலச் சந்ததியினருக்கும் போதித்துச் சமயங்களிடையே நிலவும் ஒற்றுமை மேலும் ஓங்கி வளரப் பாடு படவேண்டும் என தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கேட்டுக்கொண்டார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர்…
அமைச்சரவையின் திறந்த இல்ல உபசரிப்பு, ராயா முதல் நாளில், ஸ்ரீ…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அமைச்சர்களும் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை, ராயாவின் முதல் நாளன்று புத்ரா ஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடத்துகிறார்கள். திறந்த இல்ல உபசரிப்பு காலை மணி 10 தொடங்கி மாலை 4.30வரை நடக்கும் எனப் பிரதமர்துறை அறிக்கை ஒன்று கூறியது.…
தேசிய கடனை குறைக்க மூன்று ஆண்டு கால அவகாசம் தேவைப்படுகிறது:…
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 விழுக்காடு உச்சவரம்பிற்கு தேசிய கடனை குறைக்க மூன்று ஆண்டு கால அவகாசம் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது எனவும் இது தற்போது 80 விழுக்காடாக உள்ளது என டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், அரசாங்கம் 1 டிரில்லியனுக்கும் மேலாக இருந்த…
வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும்: மகாதிர்
பிரதமர் மகாதிர் முகமத்; வணிக ரீதியில் பூமிபுத்ரா சலுகைகள் அளிக்கப்படும் என உறுதிப்படுத்தினார், டெண்டர் முறையிலும் இச்சலுகைகள் தொடர்ந்து 'புதிய மலேசியாவில்' நிலை நிறுத்தப்படும் என்று கூறினார் . பூமிபுத்ரா ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்க கேட்டதற்கு, கிழக்கு கடற்கரை தொடர்வண்டி (ECRL) திட்டத்தின் 20 விழுக்காடு…
1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதி…
1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதியத்தில் திரட்டப்பட்ட நிதியத்தை முழுமையாக அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரியப்படுத்தினார். மலேசிய நம்பிக்கை நிதிய (வுயடிரபெ ர்யசயியn ஆயடயலளயை) சேகரிப்பு மூடப்பட்ட போது அதன் மூலம் 203 மில்லியன் திறட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு…
அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெறுகிறது: அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுடன் அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும் அதிகார மாற்றத்தின் காலத்தையோ தேதியையோ அவர் குறிப்பிடவில்லை. பிரதமர் நியமனம் குறித்த தேதி மற்றும் அதிகாரத்தை மாற்றுவது பற்றிய கலந்துரையாடல் நல்முறையில் நடைபெறுகிறது என்றார்.…
வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைத் தாக்கும் திட்டத்துடன் ISIS…
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையங்களைத் தாக்கும் திட்டத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். போலிஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் பாடோர் தெரிவிக்கையில் நான்கு நபர்களும் இஸ்லாத்தை தற்காக்கத் தவறியதாக மற்றும் அவமதித்ததாகக் கருதப்பட்ட "உயர்மட்ட"…
பக்காத்தான் ஹராபான் தலைமை சண்டாகான் வெற்றியோடு நிறைவுகொண்டு விடக்கூடாது: அன்வார்…
பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் டிஏபி வேட்பாளர் விவியன் வோங்கிற்கு சண்டாகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றியடைந்ததை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இருப்பினும், சண்டாகான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் நிறைவு கொள்ள வேண்டாம் என பக்காதான் ஹராபான் கூட்டணிக்கு அன்வார் ஆலோசனை கூறினார். பக்காத்தான்…
கிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை சாடினார் ஜேவியர் ஜெயக்குமார்!
நியூசிலாந்து கிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் விரைவில் சட்டத்திற்கு முன் கொண்டு வரப் பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர்…
தமிழ் நேசன் – சமூகத்தின் ஓர் ஒளிவிளக்காகவும் திகழ்ந்தது!
தமிழ் நேசனின் திடீர் நிறுத்தம், ஒரு தாங்க இயலாத வேதனையை அளித்துள்ளது. அதற்கு காரணம் அது ஆரம்ப காலம் முதல் வகுத்த வரலாராகும். 1924ஆம் ஆண்டு செம்டம்பர் 24ஆம் தேதி கால் பதித்த தமிழ்நேசன் கடந்த சனவரி 31 ஆம் தேதியோடு அது தனது பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது. தனது…
மனோகரன் மீது பழி போட வேண்டாம், அம்பிகா கூறுகிறார்
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம். மனோகரனின் தோல்விக்கு அவர் மீது பழி போட வேண்டாம் என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன் கூறுகிறார். தேர்தல் முடிவிற்கு அந்த டிஎபிக்காரரை குறைகூறக்கூடாது. அவர் அந்தத் தொகுதியில் பல…
தமிழ்ப்பள்ளிக்கான பணத்தையும் நிலத்தையும் மீட்க விவேகானந்த ஆசிரமத்தின் மீது சட்ட…
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்த தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாக கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்க கோரி அந்தப் பள்ளியின் வாரியத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர். இது சார்பாக நேற்று (25.1.2019) பெட்டாலிங்…
பகாங் சுல்தான் புதிய பேரரசர்
பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா அஹமட் ஷா நாட்டின் 16வது பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்தானா நெகாராவுக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. “ஆட்சியாளர் மன்றம் முடிவு செய்து விட்டது. பகாங் ஆட்சியாளர்தான் அடுத்த பேரரசர்”, என்று உயர் இடத்தில் உள்ள ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. சுல்தான் அப்துல்லா,59, ஜனவரி…
பிஎன்கூட பெட்ரோல் விற்பனையாளர் இலாப வரம்பை உயர்த்த முனைந்ததில்லை- நஜிப்
பெட்ரோல் விற்பனையாளர்கள் ஆதாயம் பெறுவதற்காக வாராவாரம் பெட்ரோல் விலையை மிதக்கவிடும் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதில் டிஏபி டோனி புவாவுக்கும் பங்கிருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “அரசாங்கம் நேற்று, பெட்ரோல் விற்பனையாளர்களின் இலாப வரம்பு உயர்வுக்கு வழி செய்ததை புவா நிச்சயம் அறிந்திருப்பார்- பிஎன்கூட…
அன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்து…
நாட்டைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று புத்ரா ஜெயாவை அன்வார் இப்ராகிம் அவரது புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். கடந்த மே-யில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்தவர்கள் இப்போது அதன் சாதனைகள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். அறுபது ஆண்டுகால பாரிசான் ஆட்சியை…
அஸ்மின் விரைவில் அன்வாரை ஒழித்துக் கட்டுவார்: சமய போதகர் ஆருடம்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் காலப்போக்கில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியால் ஒழித்துக் கட்டப்படுவாராம். அப்படி ஆருடம் கூறியுள்ளார் செல்வாக்குமிக்க சமயப் போதகர் வான் ஜி வான் உசேன். சீன இராணுவ தத்துவஞானி சன் ட்ஸு கூறுவதுபோல் அஸ்மின் தன் எதிரியின் ஆயுதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்…
அடிப் மரண விசாரணை ஷா ஆலமில் நடைபெறும்
தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்புமீதான விசாரணை ஷா ஆலமில் நடைபெறும். அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதற்காகத்தான் இந்த விசாரணை. வழக்கமாக கொரோனர் நீதிமன்றத்தில் நடைபெறும் மரண விசாரணை ஒரு மெஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் நடக்கும். ஆனால், இந்த விசாரணைக்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி…