இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant) ஆகியோருக்கு எதிராகக் காசாவில் நடந்த போர்க் குற்றங்களுக்காகக் கைது வாரண்ட் பிறப்பிக்கச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (The International Criminal Court’s) முடிவு பொருத்தமானது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்…
லங்காவியை மேம்படுத்த ரிம1.3 பில்லியன் ஒதுக்கீடு, நஜிப் அறிவிப்பு
லங்காவியில் 11 ஆவது மலேசியத் திட்டத்தின் (11எம்பி) கீழ் ஐந்து புதிய திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் ரிம1.315 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார். லங்காவி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் (ரிம500 மில்லியன்), சுகாதார பணியாளர்களுக்கு வீடுகள் (ரிம135 மில்லியன்), பாடாங் மாட்சிராட்டில் புதிய தீயணைப்பு…
வாழ்க்கைச் செலவின உயர்வால் வாக்காளர்கள் ஹரப்பான் பக்கம் வருவர்: முகைதின்
வாழ்க்கைச் செலவின உயர்வு தேர்தலில் எதிரணிக்கு ஆதரவாக மாறப்போகிறது என்கிறார் பெர்சத்துத் தலைவர் முகைதின் யாசின். கடந்த ஈராண்டுகளாக பக்கத்தான் ஹரப்பான் மேற்கொண்ட ஆய்வுகள், மக்களைச் சந்திக்கையில் கிடைத்த பின்னூட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார். ”வாழ்க்கைச் செலவினம் உயர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல …
மலேசியாகினி ரிம350,000 நிதி திரட்டும் இலக்கை அடைந்தது
மலேசியாகினி அதன் சட்டப் பாதுகாப்பு நிதி திரட்டல் நோக்கத்தில் வெற்றி பெற்றது. 12 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த நிதி திரட்டல் நேற்று அதன் குறிக்கோளை அடைந்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கும் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்க நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் மலேசியாகினி அந்த தங்கச் சுரங்கத்திற்கு…
இனரீதியான பிளவைத் தடுக்கவே பிரதமர் வேட்பாளராக மகாதீர்
எதிர்வரும் பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே மிக முக்கியமானது. நாடு சுதந்திரத்திற்குப் பின், 60 ஆண்டுகளில் மிகச் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் பயணிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம், நாட்டு மக்கள் ஒன்றுபட்டு இந்நாடைக் காப்பாற்றாவிடில் இந்நாடே கடனில் மூழ்கும், நமது மக்கள் அவர்களின்…
ரவுப் தங்கச் சுரங்க வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கு எதிராகத்…
மலேசியாகினி செய்தித்தளம், ரவுப் ஆஸ்திரேலியன் கோல்டு மைன் (ஆர்எஜிஎம்) க்கு ரிம200,000 இழப்பீடு வழங்கும்படி புத்ரா ஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதிபதி அபாங் இஸ்கந்தர் அபாங் ஹசிம் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு அவதூறானது என்று கருதப்பட்ட மூன்று கட்டுரைகளையும் இரண்டு வீடியோக்களையும் வெளியிடுவதற்கான…
மன்னிப்பு கேட்பதால் மட்டும் கடந்தகாலக் குற்றங்களிலிருந்து விடுபட முடியாது
டாக்டர் மகாதிர் நேற்று மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும் மன்னிப்பு கேட்பதால் செய்த தவறுகள் இல்லை என்று ஆகிவிடாது என அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி கூறினார். “முன்னாள் பிரதமர் மகாதிர் தம் காலத்தில் நிகழ்ந்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரியதால் மட்டும் அவர் காலத்திய தவறுகளிலிருந்து விடுபட்டவர் ஆகிவிட …
கொடுக்கப்படாத இழப்பீட்டை பெற முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் பிரதமரின்…
கெடா, பாடாங் மெகாவிலிருந்து சுமார் 70 முன்னாள் பால்மர வெட்டுத் தொழிலாளர்கள் தங்களுக்கு இன்னும் கொடுக்கப்படாமல் இருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டை பெறுவதற்கு பிரதமரின் உதவியை நாடி அவரது அலுவகத்திற்கு வெளியில் இன்று கூடினர். அங்கு கூடியிருந்தவர்கள், பெரும்பாலும் மூத்தகுடிமக்களாகிய மலாய் மற்று இந்திய மாதர்கள், கிட்டத்தட்ட…
தமிழ் எங்கள் உயிர் என்பதால் இந்த 350 கிமீ நடைப்பயணம்…
இருமொழிதிட்டத்தை அகற்றக் கோரி நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்பிலும் பரப்புரையிலும் ஈடுபட்ட நால்வர் தங்களது 17 -நாள் நடைப்பயணத்தை இன்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஜோகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளியிலிருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி துவங்கப்பட்ட நடைப்பயணம் இன்று புத்ராஜெயாவில் பிரதமர்துறை அலுவலகத்தின் முன் முடிவடைந்தது.…
டிஎல்பி-க்கு எதிரான 350 கிமீ நீண்ட நடை பயண குழுவினருக்கு…
தமிழ்ப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரு மொழி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பொதுமக்களிடையே குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கு தம் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரிடையே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நான்கு இளைஞர்கள் மலேசியத் தமிழ் இயக்கங்களின் பேராதரவோடு நடைப்பயணத்தை கடந்த 25-11-2017இல் ஜொகூர், ஸ்கூடாய் துன் அமீனா தமிழ்ப்பள்ளி வளாகத்திலிருந்து …
பினாங்கு வெள்ளம் “கடவுளின் செயல்”, பிஎன் பிரதிநிதி கூறுகிறார்
பினாங்கில் கடந்த நவம்பர் 4 மற்றும் 5 இல் ஏற்பட்ட வெள்ளம் ஏழு உயிர்களைப் பலி கொண்டுள்ளது. அந்த வெள்ளம் "கடவுளின் செயல்" என்று ஒரு பாரிசான் நேசனல் பிரதிநிதி இன்று கூறினார். இந்த வெள்ளத்திற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தொடர்ந்து மற்றவர்களைக் குறைகூறுவதில்…
நஜிப்புக்கு ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 3’ சொற்போர் நடத்த மகாதிர் சவால்
பிரதமர் நஜிப்புக்கு தம்முடன் பொது விவாதம் நடத்த வருமாறு மகாதிர் முகமட் மீண்டும் சவால் விட்டுள்ளார். மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில் பிரதமர் நஜிப் முன்னாள் பிரதமர் மகாதிர் மீது நடத்திய மறைமுகத் தாக்குதல்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. அத்தாக்குதல்கள் ஒவ்வொன்றுக்கும் மகாதிர் அவரது வலைத்தளப் பதிவில் இன்று…
1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை அவைத் தலைவர் தடுக்கிறார்
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த குறைந்தபட்சம் 10 1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை நாடாளுமன்ற மக்களவைத் தலைவரின் அலுவலகம் நிராகரித்துள்ளது. நிராகரிக்கப்பட்டவைகளில், எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் பிரதமர் அல்லது நிதி அமைச்சரிடம் கேட்டிருந்த 1எம்டிபி சம்பந்தப்பட்ட நான்கு கேள்விகளும் அடங்கும். அந்நான்கு…
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
மலேசியாஇன்று -வின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நமது பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமற்ற சூழலில் வாழ்வதால், அனுசரித்துச் செல்வது என்ற வகையில் எதையும் தாங்கும் இதயமாக நாம் மாறிக்கொண்டுருப்பதால், இதயத்தின் துடிப்பும் அதிகமாகி வருகிறது! இந்த தீபாவளி…
தியன் சுவா சிறையிலிருந்து அக்டோபர் 27 இல் விடுவிக்கப்படுவார்
காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா அவரது ஒரு மாத கால சிறைத் தண்டணையின் முடிவில் அக்டோபர் 27இல் விடுதலை செய்யப்படுவார். விடுதலை செய்யப்படும் தியன் சுவா அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று அவரது வழக்குரைஞர் என். சுரேந்திரன்…
ஜொகூரில் பீர் விழா, நடத்தலாம் என்கிறார் மந்திரி புசார்
அக்டோபர் விழா (பீர் விழா) ஜோகூர் மாநிலத்தில் நடத்தப்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை மாநில மந்திரி புசார் தற்காத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்நிகழ்ச்சி பகிரங்கமாக ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு இது திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது என்றாரவர். இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இது விளம்பரப்படுத்தப்படவில்லை,…
அது வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ: தீயணைப்பு, மீட்புத் துறை உறுதிப்படுத்தியது
கடந்த வாரம் 23பேரின் உயிரைக் குடித்த தீச்சம்பவம் நிகழ்ந்த தாபிஸ் சமயப் பள்ளியின் மூன்றாவது மாடியில் காலணி அடுக்கு, சுவர்கள் முதலியவற்றில் பெட்ரோல் விசிறியடிக்கப்பட்டிருந்தது . “தீ கூரைக்குப் பரவி மூன்றாவது மாடிக் கதவும் பற்றி எரிந்திருக்கிறது. “தீ விரைவாக பரவியதற்கு இரண்டு எல்பிஜி கலன்களிலிருந்து வெளியான எரிவாயு …
பீர் கொண்டாட்டம் கூடாது; ஆனால், இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள்…
சிறந்த பீர் விழா 2017 நடத்தப்படுவதற்கு டிபிகேஎல் தடை விதித்துள்ளது. இவ்விழா (Better Beer Festival 2017) எதிர்வரும் அக்டோபர் 6-7லில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ் கட்சியின் உலாமா தகவல் பிரிவு தலைவர் முகமட் கைருடின் அமன் ரஸாலி இத்தடை விதிப்பை வரவேற்றுள்ளார். கடந்த காலத்தில் இந்த…
முன்னாள் சிலாங்கூர் எம்பி அம்னோவுக்குத் திரும்பி வந்துள்ளதை நஜிப் அறிவித்தார்
முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தாயிப் மீண்டும் அம்னோவுக்கு திரும்பி வந்துள்ளதை பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார். அம்னோ தலைவர்கள் புடைசூழ்ந்திருக்க இந்த அறிவிப்பை கோலாலம்பூரில் அம்னோ தலைமையகத்தில் நஜிப் செய்தார். மாட் தாயிப் என்று அழைக்கப்படும் முகம்மட் 2013 ஆண்டில் பாஸ்…
ஓன்லைன் செய்தித் தளங்கள் பதிவு, ஜெராம் சாடுகிறது
மலேசியாவிலுள்ள அனைத்து ஓன்லைன் செய்தித் தளங்களும் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடங்கள் ஆணையத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையை கெராக்கான் மீடியா மெர்டேக்கா (ஜெராம்) சாடியுள்ளது. ஓன்லைன் செய்தித் தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலை மலேசிய ஊடகங்களின் குரலை பலவீனப்படுத்தும் இன்னொரு முயற்சி…
சுரேந்திரன்: விசாரணைக் கைதிகளை லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதம்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவோரைக் கட்டாயப்படுத்தி ஆரஞ்ச் நிற லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதமாகும் என்கிறார் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன். சுரேந்திரன் முக்கிய பிரமுகர்களான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவும் பெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டும் …
குவான் எங்: டிஏபி-யைச் சந்திக்க ஆர்ஓஎஸ் பயப்படுவது ஏன்?
கட்சித் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றிப் பேசலாம் என்றால் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைவர்களைச் சந்திக்க பயப்படுகிறதே என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அங்கலாய்த்துக் கொண்டார். ஆர்ஓஎஸ்ஸைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஏபி எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதிலில்லை …
மகனுக்கு கன்னத்தில் சூடு வைத்த ஆசிரியரை வேலையிலிருந்து நீக்குங்கள், தந்தையின்…
ஓர் எட்டு வயது மாணவன் வகுப்பில் விளையாடியதற்காக அவனது ஆசிரியர் ஓர் இரும்பு தகட்டை சூடாக்கி அவனது கன்னத்தில் சூடு வைத்துள்ளார். சூடு வைத்த இடத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இச்செயலைப் புரிந்த ஆசிரியர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும் என்று அம்மாணவனின் தந்தை சைட் சுடு, 32, கோரிக்கை…
‘நஜிப் 41 சிறப்பு அறைகளை வாடகைக்கு எடுத்தார் என்று கூறப்படுவதை…
இந்தோனேசியாவின் பாலியில் விடுமுறை கழிக்கச் சென்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “41 சிறப்பு அறைகளை (presidential suites) வாடகைக்கு எடுத்திருப்பதாக பொய்யான செய்தி பரப்புவோரை அம்னோ -ஆதரவு இணையத்தளம் ஒன்று சாடியுள்ளது. பக்கத்தான் ஹராபான் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஆதரவாளர்கள் இப்படி அவதூறு …