அதிகப்படியான ஆசிரியர் பணிச்சுமையின் நீண்டகால பிரச்சினையை விரிவாகத் தீர்க்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (The National Union of the Teaching Profession) கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அமினுதீன் அவாங் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 418,000 ஆசிரியர்கள்…
ஜைட், கீத்தா சின்னத்தின் கீழ் கோத்தா பாருவில் போட்டியிடுவார்
கீத்தா கட்சி கலைக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று யாரும் எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கீத்தா சின்னத்தின் கீழ் தாம் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அவர் தகவல் வெளியிட்டார். "பக்காத்தான் பிஎன் வேட்பாளார்களுக்கு அதிக…
பிஆர்1எம் உதவி நிராகரிக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி குடும்பங்கள் தவிப்பு
பகாங்கில் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த பலர், அரசாங்கம் நிர்ணயித்த தகுதிகள் தங்களுக்கு இருந்தும் பிஆர்1எம் உதவி கிடைக்காததை எண்ணிக் குழப்பமடைந்துள்ளனர். சின்னி, கம்போங் பத்து கொங்கைச் சேர்ந்தவர் இஸ்மாயில் லே,43. அவரும் அவரின் மனைவி பத்திமா பாசெமும் ரிம500 உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.ஆனால்,அவர்கள் அவ்வுதவிக்குத் தகுதிபெறவில்லை என்று…
பொதுதேர்தலில் தமது நிலையை ஹிண்ட்ராப் இன்னும் தீர்மானிக்கவில்லை: வேதமூர்த்தி
கடந்த மார்ச் 5 ஆம் தேதி தினக்குரல் தமிழ் நாளேட்டில், எதிர்வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூரில் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 3 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என மனித உரிமை கட்சியின் பொதுச்செயலாளர் உதயகுமார் கூறியிருப்பதாக வெளிவந்த செய்தி, அவருடைய தனிப்பட்டே கருத்தே …
கம்போங் மேடான் இனக்கலவரம் மீதான நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது!
11 ஆண்டுகளுக்கு முன்னர், கம்போங் மேடான் இனக்கலவரத்தில் படுகாயமடைந்த எழுவர், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீது அலட்சியப் போக்கு மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை மீறியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கக் கோரி செய்திருந்த மேல்முறையீட்டை கூட்டரசுப் பிரதேச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நாட்டின் தலைமை நீதிபதி தான் ஸ்ரீ…
இருபது மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு பிஎன் மீது பழி போடப்பட்டது
2007ம் ஆண்டு சர்ச்சைக்குரிய விவசாய நிலம் ஒன்று விற்கப்பட்டதின் தொடர்பில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துக்கு (PKPS) ஏற்பட்ட 20 மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு முந்திய பிஎன் அரசாங்கமே காரணம் என நடப்பு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சரவாக் மிரியில் 12,000 ஏக்கர்…
பினாங்கு போலீசார் Himpunan Hijau பேரணி குழப்பம் மீதான விசாரணையை…
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஜார்ஜ் டவுன் பாடாங் கோத்தா லாமாவில் நடைபெற்ற Himpunan Hijau 2.0 பேரணியின் போது நிகழ்ந்த குழப்பம் மீதான புலனாய்வை பினாங்கு போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர். அந்த புலனாய்வு தொடர்பில் போலீசார் 48 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அந்தக் குழப்பத்தில்…
ரிம600மில்லியன்: கெடா பாஸ் நெருக்கடிக்குக் காரணம்
ரிம600மில்லியன் மெகா திட்டத்துக்கான குத்தகையை அம்னோ-தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்க மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செய்த முடிவுதான் கெடா பாஸ் கட்சியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிற்று. இதை, மாநில ஆட்சிக்குழுவில் மறுநியமனம் செய்யப்பட்டதை முதலில் ஏற்க மறுத்த இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பஹரோல்ரசி முகம்மட்…