மெக்சிமஸ்: அழியா மை பயன்படுத்தத் தடை இல்லை

அழியா மையை பயன்படுத்த தடங்கல் எதுவும் இல்லை, தேர்தல் விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தால் போதுமானது என்று தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. அதற்கு அரசமைப்புத் திருத்தம் தேவை என்று முன்னர் கூறியிருந்த சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அது பற்றி விளக்கம் தந்திருப்பதாக…

மலாய் என்ஜிஓ: பினாங்கை அம்னோதான் வழிநடத்த வேண்டும்

பினாங்கு பிஎன் கூட்டணித் தலைவர் கோ சூ கூன், தம்மை அடுத்து அம்மாநிலக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஒருவரைத் தம் கட்சியிலிருந்து நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 13வது பொதுத் தேர்தலிலும் பினாங்கில் பிஎன் கூட்டணிக்கு கெராக்கான் தலைமை ஏற்பதை எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.…

ஒரே மலேசியா மிளகாய் சாற்றில் “அளவுக்கு அதிகமாக கனரக உலோகங்கள்”

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா மிளகாய்ச் சாறு மீது நடத்தப்பட்ட ஆய்வுக் கூடப் பரிசோதனைகள் அதில் உள்ள பாதரச, காரீய அளவுகள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் அனுமதித்துள்ள வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலேசிய தரங்களைப் பயன்படுத்துவோர் சங்கம் மேற்கொண்ட பொருள் ஒப்பீட்டு…

பிஆர்எம்-முக்குப் பரந்த நோக்கம் வேண்டும்

“பிஆர்எம் உறுப்பினர்களுக்கு பேரம்பேசுதல் என்பதற்குப் பொருள் தெரியவில்லை. ஒன்றைப் பெறப் பேரம் பேச  விரும்பினால் அவர்கள் ஒன்றைக் கொடுப்பதற்கும் சித்தமாக இருக்க வேண்டும்.” பக்காத்தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிஆர்எம் போட்டியிடுவது உறுதி ஒங்: 2008 பொதுத் தேர்தலில் செலாயாங்கில் பிஎன், பிகேஆர், பிஆர்எம் ஆகிய மூன்று கட்சிகளுமே போட்டியில்…

ஹார்வஸ்ட் கோர்ட் பங்கு விலை 30% வீழ்ச்சி

ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பெர்ஹாட் பங்குகள் 'குறிக்கப்பட்ட பங்குகள்' என புர்சா மலேசியா பங்குச் சந்தை நேற்று பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து அதன் விலை இன்று காலை 30 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. அந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுகிறது என்பதை அதன் முக்கியப் பங்குதாரரும் பிரதமருடைய…

பள்ளிக்கூடங்களிலிருந்து சமயத்தை அகற்றி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

"முதல் நாள் தொடக்கம் நமது பிள்ளைகள் சமயம் (அகாமா), தார்மீகம் எனப் பிரிக்கப்படுகின்றனர். அதனால் உண்மையான ஒருங்கிணைப்பு ஏதும் இல்லாமல் போய் விடுகிறது." கிறிஸ்துவ ஆசிரியர்களை தடை செய்ய வேண்டுமென தான் கோரியதாகக் கூறப்படுவதை பெர்க்காசா மறுக்கிறது சீனா புக்கிட்: அந்த சுவரொட்டிகள் பெர்க்காசா ஏற்பாடு செய்த நிகழ்வு…

தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!

தூக்கமென்றால் தூக்கம் இது 54 ஆண்டு கால தூக்கம்... வாக்களிக்கும் போது நாம் விழிப்பாக இருந்து வாக்களிக்காததால் இன்று இந்த தூங்கு மூஞ்சி மன்னர்களின் ஆட்சியில் நம்ம நாடே தூங்கிட்டு இருக்கு... இவர்கள் விழிக்கும் முன் நாம் விழித்துக்கொண்டால் இவர்களின் தூக்கம் இனிமேல் வீட்டில்தான் ஆட்சியில் அல்ல. இல்லையென்றால் நம் உரிமைகளை இவர்களிடம் அடமானம் வைத்துவிட்டு இவர்களோடு…

பக்காத்தான் விரும்புகிறதோ இல்லையோ பிஆர்எம் போட்டியிடுவது உறுதி

பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்) அடுத்த தேர்தலில் பிகேஆர் வசமுள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது. அதன் நோக்கத்தைக் குறைகூறியுள்ள விமர்சகர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அதன் தலைவர் ரொஹானா அரிப்பின், “போட்டியிடுவது எங்களின் ஜனநாயக உரிமை.....அந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்”, என்கிறார். “இதன் தொடர்பில் மாற்றரசுக் கட்சி…

போலீஸ் வாகனம் தம்மை மோதியது என மாட் சாபு வலியுறுத்துகிறார்

பெர்சே 2.0 பேரணி மீது நடத்தப்படும் பொது விசாரணையில் பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு இன்று சாட்சியமளித்தார். போலீஸ் வாகனம் ஒன்றுடன் நிகழ்ந்த விபத்து காரணமாக காலில் ஏற்பட்ட காயத்துக்குத் தாம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருந்தாக அவர் சொன்னார். அவர் இன்று சுஹாக்காம் என்னும்…

புவா இப்போது “ஒரே மலேசியா குழந்தைகளுக்கான பால்” மீது குறி…

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பால் மாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் சட்டம் வரையறுத்துள்ள வரம்பை மீறுவதாக டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி கூறுகிறார். கெடாய் ராக்யாட் கடைகளை நடத்தி வரும் மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு…

விமான நிலைய வரி மீதான நிருபர்கள் சந்திப்பை ஏர் ஏசியா…

ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டெஸ், விமான நிலைய வரி தொடர்பில் இன்று பின்னேரத்தில் தாம் நடத்தவிருந்த நிருபர்கள் சந்திப்பை ரத்துச் செய்துள்ளார். என்றாலும் பேஸ் புக் என்ற சமூக இணையத்தளத்தின் மூலம் அவர் அந்த விவகாரம் மீதான தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். சாதாரண மக்களும் தாங்கிக் கொள்ளக்கூடிய…

பிஎன் எம்பி-க்கள் ஏர் ஏசியாவை சாடினர்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவை பிஎன் உறுப்பினர்கள் அடுத்தடுத்து சாடினர். அது மக்களை 'ஏமாற்றுவதாக' கூட அவர்கள் குற்றம் சாட்டினர். 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தின் போது பேசிய அந்த பிஎன் உறுப்பினர்கள் கடுமையான…

தடுத்து வைக்கப்பட்டோம்;எல்லாம் தமிழ்ப்படங்களில் நடப்பதுபோல இருந்தது

ஒரு நேர்காணல்   கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம். இடம்: ஹுலு சிலாங்கூர். வழக்கமாக தூங்கி வழிந்துகொண்டிருக்கும் அந்நகர் திடீரென்று சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. இடைத் தேர்தல்தான் அதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் இடைத் தேர்தலுக்கான பரபரப்பு.சுற்றிலும் தேர்தல் பரபரப்பு சூழ்ந்திருந்தாலும் ஒரு காப்பிக்கடையில் அமர்ந்திருந்த இருவர் மட்டும் அதைக்…

புர்சா மலேசியா பங்குச் சந்தை, ஹார்வஸ்ட் கோர்ட் பங்குகள் மீது…

புர்சா மலேசியா பங்குச் சந்தை ஹார்வஸ்ட் கோர்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 'குறிக்கப்பட்ட பங்குகள்' என பிரகடனம் செய்துள்ளது. அதன் பரிவர்த்தனையையும் ஒரு நாளைக்கு நிறுத்தி வைத்தது. புர்சா மலேசியா பங்குச் சந்தையில் அதன் பங்குகள் பரிவர்த்தனை மிக அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு…

‘நாங்கள் கிறிஸ்துவ ஆசிரியர்களை தடை செய்ய வேண்டும் எனக் கேட்கவில்லை’

அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் கிறிஸ்துவ ஆசிரியர்கள் கற்பிப்பதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என தான் கேட்டுக் கொண்டதாக கூறப்படுவதை மலாய் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்க்காசா மறுத்துள்ளது. பெயர் தெரியாத தரப்புக்கள் கதைகளை உருவாக்கி அவற்றை பெர்க்காசா சார்பில் எந்த அதிகாரமும் இல்லாமல் பரப்பி வருவதாக இன்று அதன் தலைவர்…

அரசாங்கக் கடன்கள், பணம் கறக்கும் பசுக்களாக மாறும் போது….

"அது சிக்கனமாக நடந்து கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. மக்கள் கொடுக்கும் வரிப் பணம் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதே கேள்வியாகும். இந்த விவகாரத்தில் அது நடக்கவில்லை என்பது நிச்சயம்."         பிகேஆர்: என் எப் சி ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஆதாயத்தைத்…

“அன்வார் செக்ஸ் வீடியோ பிரதிகள்” பினாங்கு பள்ளிவாசல்களில் விநியோகம்

பினாங்கு செபெராங் பிராயில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு செல்லும் முக்கியமான இடங்களில் கடந்த வாரம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் செக்ஸ் வீடியோவின் பிரதிகள் வைக்கப்பட்டிருந்ததைத் கண்டு வெள்ளிக்கிழமைத் தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலைநிலத்தில் எட்டுப் பள்ளிவாசல்களில் அந்த செக்ஸ் வீடியோவின்…

ஷாரிஸாட் பதவி விலக வேண்டும் என பாங் மொக்தார் விருப்பம்

என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதவி துறக்க வேண்டும் என பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றத் துணைத் தலைவர் பாங் மொக்தார் இன்று மக்களவையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து அமைச்சர் கொங் சோர் ஹா 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் தமது…

மைடின், கெடாய் ராக்யாட் பற்றிய கருத்துக்களை நிராகரிக்கிறது

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரே மலேசியாப் பொருட்கள் விலை அதிகமானவை தரம் குறைந்தவை என டிஏபி-யின் டோனி புவா கூறியுள்ளதை அந்தக் கடைகளை நடத்தும் மைடின் நிறுவனம் மறுத்துள்ளது. கிளானா ஜெயா கடையில் இன்று பிற்பகல் நடத்திய 90 நிமிட நிருபர்கள் சந்திப்பில் மைடின்…

வாதமிடத் தயரா?: இஸ்மாயில் சப்ரிக்கு டோனி புவா சவால்

டிஏபி தேசிய விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா, கெடாய் ரக்யாட் 1மலேசியா (கேஆர்1எம்)மீது தம்முடன் வாதமிடத் தயரா என்று உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சபரிக்குச் சவால் விடுத்துள்ளார். இஸ்மாயில் சப்ரி தம்முடன் வாதமிட முன்வந்தால் ஒரு தொலைக்காட்சி நிலையம் ஏற்பாடு செய்யும்…

போலீசின் அநியாயத்துக்கு ஒரு முடிவில்லை

“இதில் முரண்நகை என்னவென்றால், இந்தியர்கள் விடாமல் பிஎன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பதுதான். பிஎன்னின் வலுவான ஆதரவாளர்கள் அல்லவா அதனால், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.” வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் போலீசுக்கு எதிராக புகார் சத்து மலேசியா: அம்னோ-பிஎன் நிர்வாகத்தில் போலீசில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதுதான் நடக்கிறது. இந்தியர்கள் ஒரே…

பாலிக் பூலா, பிஜேஎஸ்,செலாயாங்கில் மும்முனைப் போட்டியா?

பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்), எதிர்வரும் பொதுத் தேர்தலில் இப்போது பிகேஆர் வசமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. பிஆர்எம், இன்று வெளியிட்ட அறிக்கையொன்று  பினாங்கில் பூலாவ் பினாங்கிலும் சிலாங்கூரில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான், செலாயாங் ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதன்…