அமைச்சு ‘ஏற்பாடு’: மாஹ்புஸ் மீது வழக்குப் போடப் போவதாக ஹசான்…

முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, தமக்கு இளைஞர் விளையாட்டு அமைச்சு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ள பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் மீது வழக்குப் போடப் போவதாக இன்று மருட்டியுள்ளார். "பாஸ் புல்லுருவிகளின் கருவி" என மாஹ்புஸை வருணித்த அவர், பிஎன் பக்கம் இளைஞர்களைக்…

பாஹ்ரோல்ராஸி பேசுவதற்கு கெடா கூட்டத்துக்கு முன்னதாக தடை

கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்ற பின்னர் தாம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக கெடா மாநில பாஸ் துணை ஆணையாளர் பாஹ்ரோல்ராஸி  ஸாவாவி கூறுகிறார். பாஹ்ரோல்ராஸிக்கும் அவரது எஜமானரான கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்-கிற்கும் இடையிலான தகராறைத் தீர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்தக்…

“ஆக, பினாங்கு முதலமைச்சரையும் குறை சொல்ல வேண்டுமா?”

"கை தட்டுவதற்கு இரண்டு கரங்கள் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு கை மடங்கியுள்ள வேளையில் அது எப்படி தட்ட  முடியும்?" பினாங்கு வன்முறையில் சம்பந்தப்பட்ட பிஎன் இளைஞர்கள் நீக்கப்படுவர் கொதிக்கும் மண்: பினாங்கில் லினாஸ் எதிர்ப்பு பேரணி நிகழ்ந்தது முதல் முதலைமைச்சர் மீது பழி…

நஜிப்: லினாஸ் கழிவுப் பொருட்கள் கெபெங்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும்

குவாந்தான் கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் எந்த ஒரு குடியேற்றப் பகுதியிலிருந்தும் வெகு தொலைவில் உள்ள இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். உள்ளூர் சமூகத்தின் கவலையை பரிசீலித்த பின்னர் அந்த முடிவு செய்யப்பட்டதாக…

எம்ஆர்டி, இடிப்பதில்லை என்னும் உடன்பட்டை ஆறு நில உரிமையாளர்களுடன் செய்து…

எம்ஆர்டி கார்ப்பரேஷன், கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒப்பந்த அம்சங்களில் (POA) கையெழுத்திட்டுள்ளது. பின்னர் கையெழுத்தாகும் இரு தரப்பு உடன்பாட்டில் இணைக்கப்படும் அம்சங்களை அந்த எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹார் அப்துல் ஹமிட் நேற்று…

என்எப்சி இயக்குனர்கள் ரிம81.4 மில்லியனை எடுத்துள்ளனர்

என்எப்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் 2009 ஆண்டு வரையில் கிட்டத்தட்ட ரிம81.4 மில்லியனை அந்நிறுவனத்தின் கணக்கிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளனர் என்று டிஎபி தேசிய விளம்பர தலைவர் டோனி புவா இன்று கூறினார். அத்தொகையை தனியார் நிறுவனங்களின் இயக்குனர்கள் வைத்துள்ளனர். அத்தொகை என்எப்சியிடம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும்…

பரவலாகும் அம்னோவின் “அத்துமீறல்களும் குண்டர்தனமும்”, பிகேஆர்

பிகேஆர், “வாயால் வசைபாடுதலையும் குண்டர்தனத்தையும் வன்முறைகளையும்”பரவலாக்கும் போக்கு அம்னோவில் காணப்படுகிறது என்று சாடியுள்ளது. இவ்வளவும் அரசாங்கமும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்கிறது. பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசிஸ், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை ‘இப்லிஸ்’ என்று…

புதிய எம்ஏசிசி கட்டிடத்தில் கட்டுமானக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன

மலாக்கா அலாயில் ஒராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையக் கட்டிடத்தில் கசிவுகள் ஏற்பட்டுள்ளன. கட்டுமானக் கோளாறுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   பல இடங்களில் பூசணம் ( fungus ) பிடித்துள்ளது. 23.4 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தக் கட்டிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

புதிய ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் மனைவி பேராக்கை சேர்ந்தவர்

ஆஸ்திரேலியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாப் கார்-ரின் துணைவியார் ஹெலெனா மலேசியாவில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் தைப்பிங் ஆகும். 64 வயதான அந்தத் தம்பதியினர் 1972ம் ஆண்டு பிரஞ்சு பொலினிசியாவில் உள்ள தாஹித்தி என்னும் தீவில் விடுமுறைக்காக சென்றிருந்த போது சத்தித்துக் கொண்டனர். அதற்கு அடுத்த…

நகராட்சி மன்ற உறுப்பினர்: நாங்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஆனால் தாக்கப்பட்டோம்

பச்சை நிற சட்டையை அணிந்திருந்த தாமும் 20 முன்னாள் இன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் அடங்கிய தமது குழுவினரும் பண்டார் சுங்கை லோங்-கில் புதிய பள்ளிக்கூட கட்டுமானத்துக்கான தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களாக சென்றதாக காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறுகிறார். அம்னோ…

மாஹ்புஸ்: ஹசான் அலி-க்கான அமைச்சு “ஏற்பாடு” குறித்து விசாரிக்க வேண்டும்

இளைஞர், விளையாட்டு அமைச்சு அமைத்துள்ள 30 மில்லியன் ரிங்கிட் வியூகப் பிரிவு மீது முழு கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பாஸ் இன்று கோரியுள்ளது அந்தப் பிரிவு பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி-க்காக 2,000 நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு கேட்டுக் கொண்ட பாஸ்…