சிலாங்கூர் 15 பில்லியன் ரிங்கிட் செலவில் அடிப்படை வசதி மேம்பாட்டுத்…

சிலாங்கூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 15 பில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலை மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இன்று வெளியிட்டார். அந்தத் தொகையில் 7.4 பில்லியன் ரிங்கிட் சிலாங்கூரில் மூன்று முதல் நான்கு…

அம்னோ தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறது

"நகரத்தில் வாழும் அகமட், ஆ சொங்குடனும் முத்துவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து வேலை செய்கிறார். இன வேறுபாடின்றி அவர்கள் தங்களது தலைக்கு உயரே ஒரு கூரையை நிர்மாணிக்க போராடுவதை அவர் அறிந்துள்ளார்." 'பெல்டா குடியேற்றக்காரர்கள் பக்காத்தானை ஆதரிக்க அச்சத்தைப் போக்க வேண்டியுள்ளது ஸ்விபெண்டர்: அம்னோ இப்போது பெல்டா குடியேற்றக்காரர்களிடம் திருடுவதற்கு…

இனிவரும் தேர்தல்களில் அழியா மை பயன்படுத்தப்படும்

பொதுத் தேர்தல்களில் அழியா மையைப் பயன்படுத்தப்படுவது பற்றிய அறிவிப்பு அரசு இதழில் பிப்ரவரி 13-இல் வெளியாகியிருப்பதாக தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் தெரிவித்தார். அதனை அடுத்து அழியா மையை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்த இசி திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அந்த மையை இன்னும் வாங்கவில்லை.ஏனென்றால் மையை…

“தாஜுடின் -ஜிஎல்சி தீர்வு ஊழலை மறைப்பதாகும்”

வர்த்தக செல்வந்தர் தாஜுடின் ராம்லி-க்கும் ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையில் அண்மையில் உடன்பாடு காணப்பட்டுள்ள தீர்வு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழலை "மறைக்கும்" நோக்கத்தை கொண்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அஞ்சுகிறார். "தாஜுடின் அந்த வழக்கைத் தொடர்ந்தால் அந்த நேரத்தில் இருந்த பிரதமர், நிதி அமைச்சர்…

உதவித் தொகைப் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னம் பற்றி…

உதவித் தொகை கொடுக்கப்படும் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னத்தை வைப்பதைக் கட்டாயமாக்கும் அரசாங்க நடவடிக்கை பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் நிலை இருந்தால் அதன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அவர்கள் அந்தச் சின்னத்தைப் போட்டால்…

ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல என்கிறார் பிரதமர்

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை தாயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைத் தங்களது பொட்டலங்களில் சேர்க்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது அரசியல் நடவடிக்கை அல்ல என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "ஒரே மலேசியா என்பது அரசியல் அல்ல, அது மலேசியாவைப் பற்றியது," என நஜிப் கூறினார். கோலாலம்பூரில் நேற்று…

பங்சாரில் மேபேங்க் ஊழியர்களின் 3 மணி நேர மறியல்

இன்று பின்னேரத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200 மேபேங்க் ஊழியர்களும் தொழிற்சங்கவாதிகளும் பங்சார் மேபேங்க்கின் முன் கூடி மேபேங்க் ஊழியர்களை மட்டும் அங்கத்தினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம் (in-house union. It is also called "coffin-union") ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். செந்நிற உடை…

901 விசாரணை: போலீஸ் அச்சுறுத்தல் என்கிறது பிகேஆர்

கோலாலம்பூரில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு ஜனவரி 9ம் தேதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருந்த போதிலும் அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பதிவு செய்யும் சாத்தியத்தை போலீஸ் ஆராய்ந்து வருகிறது. எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் போராளிகளும் அடங்கிய 17 தனிநபர்கள் மீது செந்தூல் மாவட்ட…

ஒரே மலேசியா சின்னம் இல்லை என்றால் அரசாங்க உதவித் தொகையும்…

சீனி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகிய மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்க உதவித் தொகைகளை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் இம்மாதத் தொடக்கத்திலிருந்து அந்த பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் போது அதன் பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். என்றாலும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த…

கானின் உண்ணாவிரதப் போராட்டம் இப்போதைக்குக் கைவிடப்பட்டது

தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தீக்குளிக்கப்போவதாகவும் மிரட்டியவர் அடுத்து பகாங் மந்திரி புசார் இல்லத்துக்குமுன் போராட்டத்தைத் தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறார். சிருவான் கெமிலாங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான கான் ஈ செங், திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவந்தார்.நேற்று அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். என்றாலும், போராட்டம் வெற்றிபெறவில்லை…

பதவிமோகம் வேண்டாம்: ஷாரிசாட்டுக்கு மகாதிர் அறிவுரை

அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவியை நேசிப்பதைவிட கட்சியை அதிகம் நேசிக்க வேண்டும்  என்கிறார் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். இன்று செர்டாங்கில், பெர்டானா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர்,“அவர் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். பதவிமீது…

பிகேஆர்: மலேசியா பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் கொடுத்ததா? இல்லையே

பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சாடுவோருக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியில் குதித்துள்ளார். குறிப்பாக, அன்வார் “இரட்டை முகம்” கொண்டவர் என்றும் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளார் என்றும் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறிவைத்து அவர்…

இஸ்ரேலிய விவகாரம் மீது பகிரங்கமாகப் பேசுங்கள் என அன்வாருக்கு அறிவுரை

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் மீது விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை பகிரங்கமாகி விட்டதால் அந்த விவகாரத்தை அவர் "வெளிப்படையாக" விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் விரும்புகிறார். இவ்வாறு அவரை மேற்கோள் காட்டி மலாய் மொழி நாளேடான உத்துசான்…

மகாதீர்: வர்த்தக விவரங்களுக்காக இஸ்ரேல் தனது ‘சிறந்த நண்பருக்கு’ உதவுகிறது

மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் எனக் கூறப்படும் விவரங்களை அம்பலப்படுத்துவதின் மூலம் இஸ்ரேல் தனது 'நண்பரான' எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை மழுங்கடிக்க முயலுகிறது. இவ்வாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் செர்டாங்கில் கூறியிருக்கிறார். "மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தகம் சம்பந்தப்பட்ட…

தைப்பூசக் கொண்டாட்டங்களில் நஜிப் கலந்து கொள்வது சரி தான் ஆனால்…

முஸ்லிம் தலைவர் என்ற முறையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தைப்பூசம் போன்ற முஸ்லிம் அல்லாதவர் சமயக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சரியானதுதான். ஆனால் சில வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என முன்னாள் பெர்லிஸ் முப்தி கூறுகிறார். "இன்னொரு சமயத்தின் ஒழுங்கு முறைகளிலும் சடங்குகளிலும் நஜிப் பங்கு…

தேர்தல் முன்கூட்டியே நடக்கும்: அன்வார் ஆருடம்

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,13வது பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதைவிட விரைவாக நடத்தப்படலாம் என்று ஆருடம் கூறியுள்ளார். அண்மைய கூட்டமொன்றில் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பலரும் மே அல்லது ஜூன் மாதம் தேர்தல் நடக்கலாம் என்று ஊகம் தெரிவித்ததாக அவர் கூறினார். அரசாங்கம் மக்களுக்கு அளித்துவரும் உதவிகள் மார்ச்…

இந்தியர்களின் பிரச்னைகளை பேரரசரிடம் நேரில் தெரிவிக்க இண்ட்ராப் விருப்பம்

"மலேசியாவின் வளப்பத்திற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கையும், அவர்கள் இன்று அனுபவிக்கும் சமூக, பொருளாதார அவலங்களையும், கேட்பாரற்று இருக்கும் நிலைமைகளையும் தெளிவாக" விவரித்து ஐந்து பக்க மகஜர் ஒன்றை இண்ட்ராப் நேற்று பேரரசரிடம் தாக்கல் செய்தது. பேரரசரின் அந்தரங்கச் செயலாளரின் தனிச்செயலாளர் புவான் ஜைனாப்பிடம் அந்த மகஜரை நேற்று காலை…

“ஆமாம் ரோஸ்மா அவர்களே, நாங்கள் உண்மையில் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோம்”

"அழகான ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் வாங்குவதிலும் அமெரிக்காவில் வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரத்தை பெறுவதிலும் நீங்கள் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்." ரோஸ்மா: என்னைக் குறை கூறுகின்றவர்கள் விரக்தி அடைந்துள்ளனர், பொறாமைப்படுகின்றனர். பெண்டர்: ரோஸ்மா மான்சோர் அவர்களே, உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறோமா? நிச்சயம் நான் பொறாமைப்படுகிறேன். யாருக்குத்தான் பொறாமை…

வாக்காளர் தணிக்கை ஆயிரக்கணக்கான போலிப் பதிவுகளை அம்பலப்படுத்தியது

வாக்காளர் பட்டியல் தணிக்கை செய்யப்பட்ட போது பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும். அந்த போலி வாக்காளர் பதிவுகள் கிட்டத்தட்ட 200,000-ஆக இருக்கும் என தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் (பிஎஸ்சி) நேற்று கூறப்பட்டது. அரசாங்கத்துக்குச்…