மாட் சாபு, கம்யூனிஸ்ட் தகவல்கள் தொடர்பில் உத்துசான் மீது வழக்குத்…

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, தாம் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை பாராட்டியதாக தகவல் வெளியிட்டதின் மூலம் தமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாக கூறி அம்னோவுக்கு சொந்தமான மலாய்  நாளேடான உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டது. அதில்…

தொகுதி ஒதுக்கீடு:சர்ச்சையை நிறுத்த டிஏபி அறைகூவல்

பிகேஆரைப் போலவே டிஏபியும், பக்காத்தான் ரக்யாட்டின் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பில் கருத்துவேறுபாடுகளைப் பொதுவில் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தன் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டிருகிறது. ஜூலை 19-இல், பக்காத்தான் தலைவர்கள் செய்த முடிவை கட்சியில் அனைவரும் மதிக்க வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் டான் கொக் வாய்…

வழக்கை தாம் ஜோடித்ததாகக் கூறப்படுவதை மூசா மறுக்கிறார்

1999ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் தண்டிக்கப்பட்ட அதிகார அத்துமீறல் வழக்கில் தாமும் சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லும் சாட்சியங்களை ஜோடித்ததாக முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் கூறியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் மறுத்துள்ளார். அந்தக்…

பாஸ்: 10,000 “போலி வாக்காளர்கள்” பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்

'போலி மை கார்டுகளை" வைத்திருந்த 10,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள், கடந்த இரண்டு மாதங்களில் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் இன்று வெளியிட்டார். அவர் அண்மைய காலமாக வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.…

ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் பாஸ் மீது அம்னோ வழக்கு

கடந்த மாதம் ஒரு தேவாலயத்தில் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனையில் அம்னோவுக்கு சம்பந்தமுண்டு என்று கூறியதற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி மீதும் மேலும் ஐவர்மீதும் சிலாங்கூர் அம்னோ சிவில் வழக்கு ஒன்றை இன்று பதிவு செய்தது. தங்களின் நற்பெயரைக் கெடுக்கும்…

“நஜிப் சரிப்பட்டு வரமாட்டார் என நினைக்கிறார் மகாதிர்”

டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா அஹமட் படாவிக்குச் செய்ததுபோலவே பதவியிலிருந்து இறங்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறுகிறார். பிஎன் வேட்பாளர்களை முறையாக ஆய்வு செய்ய அடுத்த பொதுத்தேர்தலைத் தாமதப்படுத்துமாறு மகாதிர் நஜிப்புக்கு ஆலோசனை கூறியிருப்பதாக…

“டெல்கோ, வரியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை அரசாங்கம் தடுக்க முடியாது”

முன் கட்டணம் செலுத்தப்பட்ட கைத் தொலைபேசி சேவைகளுக்கான ஆறு விழுக்காடு வரியை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வசூலிப்பதை நிறுத்துவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு மலேசிய வரி விதிப்பு ஆய்வுக் கழகத்தின் ( Chartered Taxation Institute Malaysia ) தலைவர் எஸ்எம் தண்ணீர்மலை கூறுகிறார். 1998ம் ஆண்டு…

பக்காத்தான் உட்பூசல் வாக்காளர்களை அதன் மீது வெறுப்படைச் செய்யும்

"நீங்கள் உங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டால் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் மீது வாக்காளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?"       பிகேஆர் டிஏபி-யிடம் சொல்கிறது: சண்டையில் வெற்றி பெறவில்லை. ஆனால் சண்டையில் தோற்கிறோம் இண்டோன் பிளாண்டர்: பிகேஆர் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் சான் மிங் காய்…

தேசியப் பதிவுத் துறை மீதும் கூட அரச விசாரணை ஆணையம்…

"குடியுரிமை போன்ற மிக முக்கியமான விஷயங்களில் கூட தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர், சர்ச்சைக்குரிய குடியுரிமை அங்கீகாரங்கள் குறித்து விளக்கமளிக்க அஞ்சுவது ஏன்?"       கணினி முறை மேம்படுத்தப்பட்ட போது பச்சை அடையாளக் கார்டுகளை வைத்திருந்தவர்கள் காணாமல் போய் விட்டனர் டிகேசி: கணினி முறையை…

பெர்சே 2.0 பேரணியில் போலீஸ் அடக்குமுறை மீதான புலனாய்வு முடிக்கப்பட்டுள்ளது

பெர்சே 2.0 பேரணியின் போது போலீசார் அடக்குமுறையை கையாண்டதாக கூறப்படுவது மீது புலனாய்வு முற்றுப் பெற்றுள்ளது. அது தொடர்பான அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார். அந்தப் புலனாய்வு மீது தேசியப் போலீஸ் படைத் தலைவர் இரண்டு முறை தமக்கு…

நஜிப்: ஜிஎஸ்டி வரி தேர்தலுக்குப் பின்னர் அமலாக்கப்படலாம்

அரசாங்கம் ஜிஎஸ்டி என்ற பொருள், சேவை வரியை "பெரும்பாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர்" அமலாக்குவது பற்றி பரிசீலித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். அவர் நேற்றிரவு கோலாலம்பூரில் போர்பஸ் குளோபல் நடத்திய தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டின் விருந்து நிகழ்வில் உரையாற்றினார். அந்த…

எம்ஐஇடி சித்திரக்கலா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்

மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரியான பி. சித்திரக்கலாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ரிம4 மில்லியன் சம்பந்தப்பட்ட  மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது. சித்திரக்கலா, 40, மீதான வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக துணை அரசாங்க வழக்குரைஞர் கெவின் மொரெஸ்…

உள்துறை அமைச்சர்: இசா குறித்து எவ்வித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை

இசா சட்டம் மற்றும் இதர தடுப்புக்காவல் சட்டங்களுக்கான திருத்தங்கள் குறித்து அரசாங்கம் இன்னும் ஆய்வு செய்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுஸ்சேன் இன்று கூறினார். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அச்சட்டத்தை அகற்றுவது பற்றி அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படும் சமீபகாலச் செய்திகளை அவர் மறுத்தார். அதே வேளை, அப்பிரச்னை…

இசா சட்டத்தில் சீர்திருத்தம், பிரதமர் சிந்திப்பதாகத் தகவல்

2012 ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சர்சைக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றங்கள் கொண்டு வந்து கூடுதல் பேச்சு சுதந்திரம் அளிப்பது பற்றியும், சீர்திருத்தங்கள் பற்றி கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்காளர்களுடான தொடர்பை அதிகரிப்பது பற்றியும் பிரதமர் நஜிப் சிந்தித்து வருகிறார். உள்துறை அமைச்சரின்…

உத்துசான் “கம்யூனிஸ்ட் கொடூரங்களை” சித்திரங்களாக வெளியிட்டுள்ளது

"முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பன்றி இறைச்சியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்... குழைந்தைகளும் முதியவர்களும் நெருப்புக்குள் எறியப்படுகின்றனர்"  மலாயா கம்யூனிஸ்ட்கள் சாதாரண மக்களுக்கு இழைத்த 'கொடுமைகள்' என அம்பலப்படுத்துவதற்கு ஒவியர் ஹம்சா முகமட் அமின் வரைந்துள்ள சர்ச்சைக்குரிய கேலிச் சித்தரங்களில் அவை அடங்கும். அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் அச்சுப் பதிப்பிலும்…

“அடுத்த பொதுத் தேர்தலை சேர்ந்தே முடிவு செய்ய வேண்டும்”

அரசாங்கம், மாற்றரசுக் கட்சியுடன் ஆலோசனை கலந்த பின்னரே பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. உத்தேச நாடாளுமன்றக்குழு (பிஎஸ்சி) அதன் பணியைச் செய்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கும் பொருட்டு அவ்வாறு செய்யப்படுவது அவசியம் என்றது நினைக்கிறது. பிஎஸ்சி-இல் சேர்வதற்கு…

அம்னோவின் கூட்டாளிகளுக்குத் தொகுதித் தேர்வில் சிக்கல்

பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையில், அம்னோவுடன் கூட்டுவைத்திருக்கும் கட்சிகள், எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை முடிவுசெய்ய இயலாமல் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. விரும்பும் இடங்களைப் பேரம் பேசிப் பெறும்  நிலையில் அவை இல்லை என்றுதான் தோன்றுகிறது. அம்னோ தலைவரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல்…

உங்கள் கருத்து: இதற்குப் பெயர் பிரச்சாரம்; வரலாறு அல்ல

"வரலாற்று விவரங்களை எல்லோரும் எப்போதும் பார்க்கலாம். ஆனால் அந்த விவரங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அதனை விளக்குகின்றவரைப் பொறுத்தது."       மகாதீர்: பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று நடந்து கொண்டார்கள் புரோஅர்ட்: சுல்தான்கள் தங்கள் மாநிலங்களை நிர்வாகம் செய்ய பிரிட்டிஷாரை அழைத்தனர் என்பதே டாக்டர் மகாதீர் முகமட்…

அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அமலாக்கப்படவேண்டும், அம்பிகா

எல்லாத் தரப்புக்களும் ஒப்புக்கொண்ட அனைத்து தேர்தல் சீர்திருத்தங்களும் உடனடியாக அதுவும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்பட வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். விரைவில் அமைக்கப்படவிருக்கும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு விவாதித்து முடிவு செய்த பின்னரே பரிந்துரைக்கப்படும் அனைத்து சீர்திருத்தங்களும் அமலாக்கப்படும்…

நஜிப், 15வது மலேசியா புருணை ஆண்டு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புருணை சுல்தான் சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் 15வது ஆண்டு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார். புருணையில் அந்தக் கூட்டம் நிகழ்கிறது. பிரதமருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் செல்கிறார். வெளியுறவு அமைச்சர் அனீபா அமான், பல அமைச்சர்கள், சபா முதலமைச்சர் மூசா அமான்,…

நஜிப்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஃபோர்பஸ் பாராட்டு

உலகின் முன்னணி வணிக இதழான ஃபோர்பஸின் தலைவர், புதிய பொருளாதார வடிவத்தின்(என்இஎம்)கீழ் நாட்டைச் சீரமைக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின்  முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். “ஈராண்டுகளுக்குமுன் பிரதமர் பதவியேற்ற புதிதில் நல்ல விசயங்களைச் சொன்னார்.இன்று அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறார்”, என்று அமெரிக்கக் கோடீஸ்வரரும், பதிப்பாளருமான ஸ்டீவ் ஃபோர்பஸ் கூறினார்.  “பொருளாதாரத்தைச்…

டெல்கோ சேவை வரிவிதிப்பைத் தள்ளி வைத்தது (விரிவாக)

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்(டெல்கோ) 6 விழுக்காடு சேவை வரியை அமல்படுத்தும் திட்டத்தைத் தள்ளிவைத்தன. சேவை வரி தொடர்பில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் கலந்துரையாடப் போவதாகவும் அதுவரை சேவை வரி நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அவை அறிவித்தன. கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனங்கள், கைபேசிகளுக்கான முன்கூட்டிக் கட்டணம் செலுத்திப் பெறப்படும் அட்டைகளுக்கும் சேவைகளுக்கும்…

மலேசியாவுடனான அகதிகள் ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்ட கில்லர்ட் முயற்சி

ஆஸ்திரேலியாவில் புகலிடம் நாடியுள்ளவர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு வகை செய்த மலேசியா ஆஸ்திரேலியா ஒப்பந்தத்திற்கு எதிராக அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்டும் முயற்சியில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலை கில்லார்ட் இறங்கியுள்ளார். அந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவருடைய சிறுபான்மை அரசாங்கத்துக்கான…