மலாய் முஸ்லீம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான Gerakan Pembela Ummah (Ummah) இந்தத் திங்கட்கிழமை கட்சியின் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குடன் ஒற்றுமையைக் காட்ட அம்னோ தனது ஆதரவிலிருந்து பின்வாங்கியதை விமர்சித்துள்ளது. உம்மாவின் துணைத் தலைவர் ஹிஷாமுடின் அபு பக்கர், உண்மையான அம்னோ உறுப்பினர்கள் மட்டுமே…
இந்தியர் நிலையைக் கண்டறிய பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் வருகை
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மறுபடியும் தொடுக்கப்படும் வழக்குக்காக இண்ட்ராப் ஏற்பாடு செய்துள்ள பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் இருவர், மலேசியர்களின் உண்மைநிலையைக் கண்டறிய இங்குள்ள இந்தியர்களைச் சந்திப்பர். வழக்குரைஞர்கள் இம்ரான் கான், சுரேஷ் குரோவர் ஆகியோரின் வருகை, மலாயாவுக்கு இந்தியர்களைத் தொழிலாளர்களாகக் கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னர் அவர்களை நிர்க்கதியாக விட்டுச்…
நுருல் இஸ்ஸா: டிஐஜிபி-யின் அறிக்கை அவரது “அறியாமையை” காட்டுகிறது
பெர்சே தேர்தல் சீர்திருத்தப் பேரணி தடுக்கப்படாமல் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் லண்டன் சாலைகளில் இப்போது நடக்கின்ற கலவரத்தைப் போன்று மாறியிருக்கும் என்று கூறியுள்ள துணை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் த்காலித் அபு பாக்காரை லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சாடியிருக்கிறார். "அந்த…
டியுஎம்சி-யை மூடப்போவதாக சொல்லப்படுவதற்கு எம்பிபிஜே மறுப்பு
டமன்சாரா உத்தாமா மெத்தடிஸ்ட் தேவாலயத்தை மூடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மறுக்கிறது. அதற்கான உத்தரவு எதனையும் தாம் பெறவில்லை என்று அதன் அமலாக்க மற்றும் பாதுகாப்புத் துறை துணை இயக்குனர் துன் முகமட் இஸ்லிசாம் பஹார்டின் தெரிவித்தார். “அதன் தொடர்பில் உத்தரவு எதுவும் இதுவரை…
அன்வார்: நிதி அமைச்சர் மட்டுமே GLCக்கு உத்தரவிட முடியும்
முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராக தாங்கள் சமர்பித்துள்ள எல்லா வழக்குகளையும் மீட்டுக் கொள்ளுமாறு அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் வெளியிட்டதாகக் கூறப்படுவது மீது அவரை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குறை கூறியிருக்கிறார். அது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்…
மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகள் இன்று பேட்டி காணப்பட்டனர்
குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கக் கூடிய சாத்தியமுள்ளவர்கள் எனக் கருதப்படும் மேலும் இருவரை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் இன்று பேட்டி கண்டனர். அன்வாருடைய மெய்க்காவலர் மொக்தார் முஸ்தாபா, அவருடைய காரோட்டி அப்துல்லா சானி சைட் ஆகியோரே அவர்கள். வழக்குரைஞர்களான கர்பால் சிங்கும் சங்கர நாயரும் அவர்களை ஒரு மணி…
அரசாங்கக் கட்டிடங்களில் குளிர் சாதனங்களின் அளவை 24 டிகிரி செல்ஸியஸுக்கு…
எல்லா அரசாங்கக் கட்டிடங்களும் தங்களது குளிர் சாதனங்களின் அளவை 24 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே போகாமல் வைத்திருக்க வேண்டும் என்பது விரைவில் கட்டாயமாக்கப்படும். எரிபொருள் செலவுகளைக் குறைப்பது அந்த நடவடிக்கையின் நோக்கம் என்று எரிசக்தி, பசுமை தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய்…
ரசாலியின் அமானாவுக்கு பினாங்கு அம்னோவில் வரவேற்பில்லை
பினாங்கு அம்னோ, அண்மையில் தெங்கு ரசாலி தலைமையில் அமைக்கப்பட்ட அரசுசாரா அமைப்பான (என்ஜிஓ) அங்காத்தான் அமானா மெர்டேகா(அமானா)-வை வரவேற்கவில்லை. அமானாவில் பெரும்பாலும் பாரிசான் நேசனல் உறுப்புக்கட்சிகளைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக இருப்பதால் அது பயனான அமைப்பாக செயல்பட இயலாது என்று நினைக்கிறார் புக்கிட் மெர்டாஜாம் அம்னோ தலைவர் செனட்டர் மூசா…
பக்காத்தான் கிராமப்புற மலாய்க்காரர்களைக் கவர வேண்டும்
பக்காத்தான் ரக்யாட் கிராமப்புற மலாய்க்காரர்களின் மனம் கவர வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அது, 13வது பொதுத்தேர்தலில் அதற்குப் பாதகமாக அமையும் என்கிறார் மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி.ஜெயக்குமார். கிராமப்புற மலாய்க்காரர்கள் அம்னோவின் ‘ஊழல்கள்’ பற்றி அறியாதவர்கள் அல்லர். ஆனால், பக்கத்தானுக்கு…
“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” 24 மணி நேரத்தில் காணாமல் போயினர்
"படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" - வாக்காளர் பட்டியலில் ஒரு முறைக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள்- பற்றிய தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அந்த "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை" பட்டியலிலிருந்து அகற்றியுள்ளது. என்றாலும் ஒரே ஒரு "படியாக்கம்" மட்டும் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. தேர்தல்…
புக்கிட் ஜாலில் குடியிருப்பாளர்கள் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் வெளியேற்ற நோட்டீஸ், அவர்களுடைய வீடுகளை உடைப்பது ஆகியவை மீது தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோலாலம்பூர் மேயர் செய்து கொண்ட விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த உத்தரவை தமது அறையில் பிறப்பித்த நீதிபதி டத்தின் ஸாபாரியா முகமட் யூசோப்,…
ஆவி வாக்காளர்கள், கிறிஸ்துவ பூச்சாண்டி, சபா “நினைவுக்கு” வருகிறதா?
சபா மாநில பிபிஎஸ் அரசாங்க அனுபவத்தைக் கருத்தில் கொண்டால் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் தேவலாயம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை முழுக்க முழுக்க தற்செயலாக நிகழ்ந்த சம்பவமாகக் கருத முடியாது. இவ்வாறு சபா அரசியல்வாதிகள் கூறுகின்றனர். "கிறிஸ்துவ மயப் பூச்சாண்டி" பழைய தந்திரம், அதற்கும் "இன்றைய சிலாங்கூருக்கும் பிபிஎஸ் கால…
“ஒரு முடிவு செய்யுங்கள்” என அஸ்ரி ஜயிஸிடம் சொல்கிறார்
வழிபாட்டு இடங்கள் மீது இஸ்லாமிய சமய அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முரண்பாடான நிலை குறித்து வெளிப்படையாகப் பேசும் சமய அறிஞர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களால் கவரப்பட்டு விடுவர் என்ற அச்சத்தினால் முஸ்லிம்கள் தேவாலயங்களுக்கு செல்வதை விரும்பவில்லை. அதே வேளையில்…
காலித், ஜயிஸ் பற்றிய கேள்விகளைத் தவிர்க்கிறார்
தேவாலயம் ஒன்றின் மீது ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனை மீது தெளிவான நிலையை எடுப்பதை மாநில அரசாங்கம் இன்னும் தவிர்த்து வருகிறது. அந்தச் சம்பவம் பற்றிய முழு அறிக்கைக்காகத் தான் காத்திருப்பதாக மட்டும் அது கூறுகிறது. கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட்…
அம்பிகா: தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் இசி மாறும்
தேர்தல் சீரமைப்புக்காக பெர்சே 2.0 தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்துள்ளது. ஜூலை 9-இல் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், போலீஸின் கண்ணீர்புகைக் குண்டுகளையும் இராசனம் கலகப்பட்ட நீர் பீரங்கி வண்டிகளிலிருந்து பீய்ச்சி அடிக்கப்பட்டதையும் துச்சமாக எண்ணி பலதுறைகளையும் சேர்ந்த மலேசியர்கள் சுமார் 15,000 பேர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்த…
ஹரப்பான் கம்யூனிட்டி ஜயிஸ் சோதனை மீதான தனது மௌனத்தைக் கலைத்துள்ளது
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பல இன விருந்து மீதான தனது மௌனத்தை ஹரப்பான் கம்யூனிட்டி என்ற சமூக சேவை அமைப்பு கலைத்துள்ளது. கடந்த வாரம் அந்த விருந்து நிகழ்வை ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை சோதனை செய்த பின்னர் அது குறித்த…
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு “ராயா காசாக” ரிம600
பினாங்கு மாநில அரசின் ஊழியர்களுக்கு "ராயா காசாக" குறைந்தபட்சம் ரிம600 வழங்கப்படும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். பினாங்கில் அரசுத்துறைகளிலும் ஊராட்சி மன்றங்களிலும் அரசுசார்ந்த நிறுவனங்களிலும் சுமார் 7,800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். திருக்குர் ஆன் போதகர்களுக்கும் குறைந்தபட்சம் ரிம 300 வழங்கப்படும் என்று லிம்…
மிஸ்மாவைக் கண்டுபிடுக்கும் நாளேட்டின் முயற்சி பலிக்கவில்லை
நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்றிருந்து பின்னர் குடியுரிமை வழங்கப்பட்ட ‘மிஸ்மா’வைத் தேடிக் கண்டுபிடிக்கும் உள்ளூர் நாளேடு ஒன்றின் முயற்சி பயன் அளிக்கவில்லை. மலேசியாகினி, நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்ற ஒருவர் வாக்காளர் ஆனதையும் பின்னர் நான்கு மணி நேரம் கழித்து மலேசிய குடியுரிமை பெற்றவராக மாறினதையும் செய்தியாக வெளியிட்டதை அடுத்து அந்த…
சாட்சிகள் சந்திக்கப்படும்போது அன்வார் உடன் இருக்கலாம், நீதிமன்றம் தீர்ப்பு
சாட்சிகளைச் சந்தித்துப் பேசும்போது அன்வார் இப்ராகிமும் உடன் இருக்கலாம் ஆனால் அவர் சாட்சிகளைக் கேள்வி கேட்கக்கூடாது. இன்று காலை அரசுத்தரப்பு, எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா இவ்வாறு தீர்ப்பளித்தார். நேற்று, முன்னாள் தேசிய போலிஸ்படைத் தலைவர் மூசா ஹசனுடனும் முன்னாள்…
வாக்காளர் பட்டியலில் மேலும் பல “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” கண்டு…
முதலில் "ஆவி வாக்காளர்கள்", அடுத்து "நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட வாக்காளர்கள்", இப்போதுபல "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்காளர் பட்டியலில் குறைந்தது ஏழு வாக்காளர்கள் படியாக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெயர், பழைய அடையாளக் கார்டு எண்கள் ஒன்றாகவும் ஆனால் மை கார்டு எண்கள்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…