அமைச்சர் : பிரதமரின் கட்டளை, அதிகபட்சம் 10 அதிகாரிகளை மட்டுமே…

ஒவ்வொரு அமைச்சிலும் 10 அதிகாரிகளுக்கு மேல் நியமிக்கக்கூடாது என்பது பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் கட்டளை என சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியது. தாங்கள் பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதோடு, தற்போது இருக்கும் அதிகாரிகளை விவேகமாக பயன்படுத்த முனைந்துள்ளோம் என்று சுகாதார அமைச்சர், டாக்டர் ஜுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார். “பிரதமரின் அறிவுறுத்தலை…

‘அம்னோவிற்கு அன்வார் இப்ராஹிம் தேவையில்லை’

அதிகாரத்தில் இல்லை எனும் ஒரே காரணத்திற்காக, அன்வார் இப்ராஹிம்மின் ஆதரவு கட்சிக்குத் தேவையில்லை என அனுவார் முசா கூறியுள்ளார். “அண்மையில் அன்வார் இப்ராஹிம் அம்னோவுடன் ஒத்துழைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். அன்வாருக்கு என் வாழ்த்துகள். “அம்னோவுக்கு அன்வார் தேவையில்லை,” என நேற்றிரவு, பேராக், பாசீர் சாலாக்கில் நடந்த மலாய்…

33 1மலேசியா கிளினிக்குகள் மூடப்படும்- அமைச்சர்

நாட்டில் உள்ள 1மலேசியா மருத்துவ நிலையங்களில் 33 படிப்படியாக மூடப்படும் என்றும் எஞ்சிய 313 நிலையங்களும் சீரமைக்கப்பட்டு சமூக கிளினிக்குகள் எனப் பெயர்மாற்றம் செய்யப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹமட் கூறினார். “33 கிளினிக்குகள் மூடப்படுவதால் அவற்றைச் சுற்றியுள்ள மக்களுக்குக் கிடைத்துவந்த மருத்துவச் சேவை பாதிக்கப்படாது.…

எஸ்எஸ்டி-ஆல்தான் ஹரப்பானுக்கு அழிவு -அன்னுவார்

நேற்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த பொருள், சேவை வரி(எஸ்எஸ்டி)தான் பக்கத்தான் ஹரப்பானை அழிவுக்கு இட்டுச் செல்லப் போகின்றது என்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா. எஸ்எஸ்டி-யால் பொருள் விலைகள் உயரும் பட்சத்தில் ஈராண்டுகளுக்குள்ளேயே அப்பேரிடர் நிகழ்ந்து விடலாம் என்றவர் கருதுகிறார். “எஸ்எஸ்டி அமலாக்கத்தைத் தொடர்ந்து பொருள் விலைகளும்…

பூமிகள் என்இஎம் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை- மகாதிர்

பூமிபுத்ராக்கள் அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் அவர்கள் மற்றவர்களைவிட பின்தங்கியவர்களாகத்தான் இருக்க நேரும் என்பதை பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நினைவுறுத்தினார். “நாங்கள் (அரசாங்கம்) முடிந்ததைச் செய்கிறோம் . ஆனால், விரைந்து ஆதாயம் காணும் கலாச்சாரம்தான் (மலாய்க்காரரிடையே) காணப்படுகிறது. இதுதான் அவர்களின் தோல்விக்குக் காரணமாகிறது. “இதனால்…

‘அவர் ஏற்கனவே பணக்காரர்தான்’- ஜேஜேயைத் தற்காக்கிறார் நஜிப்

நஜிப் அப்துல் ரசாக், தாம் பிரதமராவதற்கு முன்பே காலஞ்சென்ற டாக்டர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராகத் திகழ்ந்தவர் என்பதால் அவரின் பெரும் சொத்து குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்று ஜமாலுடினைத் தற்காத்துப் பேசியுள்ளார். நேற்றிரவு முகநூல் பதிவிட்டிருந்த நஜிப், தம்முடன் நெறுக்கமாக இருந்துதான்…

நாட்டின் ஆக்கபூர்வமான வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டுச் செயல் படுவோம், சேவியர்

  அனைத்து மலேசியர்களுக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள், நாடு சுதந்திரமடைந்து 61 ஆண்டுகாலம்  ஆகிவிட்டாலும், பல இளம் மலேசியர்கள் பாரிசான் ஆட்சியிலிருந்து விடுபட்ட இவ்வாண்டு மே 9 யையே  சுதந்திர நாளாகவும், இவ்வாண்டின் சுதந்திரத் தினத்தையே உண்மையான முதல் விடுதலை நாளாகக் கொண்டாடுவதாகக்  கூறுகின்றனர். இப்படிப்பட்ட கருத்துகளைச் செவிமடுப்பது ஒன்றும்…

உங்கள் கருத்து: ஜேஜே சொத்து விவரம் தெரிந்து விட்டது. மற்ற…

ஜமாலுடின் ஜர்ஜிஸின் ரிம2.1பில்லியன் சொத்தில் பங்கு கேட்கிறார் அவரின் தாயார் ஜஸ்மின்: ஜமாலுடின் ஜர்ஜிஸ் (ஜேஜே) டாக்டர் மகாதிர் முதல் முறை பிரதமராக இருந்த 22 ஆண்டுக்காலத்தில் படுவேகமாக உச்சிக்கு வந்த அரசியல்வாதிகளில் ஒருவர். தெனாகா நேசனல் பெர்ஹாட் தலைவராக அனி அரோப் என்ற ஒரு நேர்மையான மனிதர்…

அன்வாரின் பொறுமையும், மகாதீரின் வில்லங்கமும்!

மலேசிய அரசியலில் கடந்த கால் நூற்றாண்டாக மிகவும் பக்குவப்பட்ட தலைவர் ஒருவர் உண்டென்றால், அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்தான். அதற்குக் காரணம், அண்மைக் காலத்தில் அவர் பெற்ற பாடமும் படிப்பினையும் அப்படி!. ஐந்து மாமாங்க காலத்திற்கு அயராமல் ஆட்சிக் கட்டிலில் ஒட்டிக் கொண்டிருந்த தேசிய முன்னணி அரசு, இந்த…

அம்னோ : பெட்ரோன் பிரச்சினையில் அன்வார் ஏன் அமைதியாக இருக்கிறார்?

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எரிபொருள் வழங்கும் நிறுவனமாக பெட்ரோன் நியமிக்கப்பட்டது தொடர்பில், அன்வார் இதுவரை கருத்துரைக்காமல் இருப்பதை அம்னோ தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். பிரதமர் துன் டாக்டர் மகாதிரின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை, அன்வார் மூடி மறைப்பது போல் இருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் ஆடம் தெரிவித்தார்.…

நஜிப்: பெட்ரோன் அரசாங்கத்துக்கு எரிபொருள் வழங்கு நிறுவனமாக நியமிக்கப்பட்டது ஏன்?

புத்ரா ஜெயா அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக பெட்ரோனை நியமித்திருப்பதால் பல கேள்விகள் எழுகின்றன என முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். பெட்ரோன் உரிமையாளர் என்ற கேள்விக்கு விடை தெரிய வரும்போது அது வேறு பல கேள்விகளை எழுப்புகிறது என நஜிப்…

அனைவருக்கும் நீதி, ஹரப்பான் உத்தரவாதம் அளிக்கிறது, மகாதிர்

  இரக்கமற்ற ஆட்சிமுறையை நிராகரித்து "இரண்டாவது சுதந்திரம்" பெற்ற அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதற்கு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நேற்றிரவு உறுதியளித்தார். அரசாங்கத்துடன் இணைந்து உழைத்து முன்னாள் அரசாங்கத்தால் பாழடையச் செய்யப்பட்ட நாட்டை மீண்டும் புதுப்பிக்க வருமாறு அவர்…

ஜொகூர் பாருவில், ‘100 நாள் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் மாறியதும்…

எதிர்வரும் செப்டம்பர் 1, சனிக்கிழமை ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், ‘நம்பிக்கை கூட்டணியின் 100 நாள் ஆட்சியில், மாறியதும் மாறாததும்’ கருத்தரங்கம், ‘பிஸ்’ தங்கும்விடுதி (Hotel Bzz) ஜாலான் ஜோகேட் 8, தாமான் நேசா, ஸ்கூடாய், ஜொகூர் பாருவில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில், நம்பிக்கை கூட்டணியின் சார்பில் ஜொகூர் மாநில…

அகோங்கின் பிறந்த நாளை ஒட்டிய இரண்டு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் இரத்து…

எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி, யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V -இன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்ட ,  அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா மற்றும் அரச தேநீர் விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாக இஸ்தான் நெகாரா அறிவித்துள்ளது. அரண்மனை நிர்வாக இயக்குநர், வான்…

அரசாங்கத்திற்குப் பெட்ரோல் மற்றும் டீசலை, பெட்ரோன் மட்டும் வழங்கவில்லை

பெட்ரோன் நிறுவனத்தை, அரசாங்க வாகனங்களுக்கான எண்ணெய் வழங்குநர்களில் ஒருவராக நியமித்தது, ஓர் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதற்காக என நிதியமைச்சர் விளக்கினார். இன்று மாலை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, அரசாங்க வாகனங்களுக்கு எண்ணெய் வழங்கும் நிறுவனங்களில் பெட்ரோன் ஒரே நிறுவனம் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு…

முன்னாள் ஒற்றர்கள் யுஎஸ்12 மில்லியனை மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்றிருக்கலாம்

  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) விசாரிக்கப்பட்டு வரும் ஒற்றர் துறையின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகள் மொத்தம் யுஎஸ்$12 மில்லியனை மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும். இப்பணம் மலேசியாவுக்கு மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கொண்டு வரப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த…

பாஸ் – மஇகா உறவு: ஒரு தற்கொலை முயற்சியா அல்லது…

  ஸ்ரீ செத்தியா இந்திய வாக்காளர்கள் அரசியல் முதிர்ச்சியடைந்தவர்கள், உரிமைக்கும், உண்மைக்கும் குரல் கொடுப்பதில் வல்லவர்கள். களவாணிகளின் கூட்டு அங்குள்ள இந்திய வாக்காளர்களைக் கவராது என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.…

பதவி விலகப் போகிறேன் என்ற ஊகம் முட்டாள்தனமானது, குவான் எங்…

  அமைச்சரவையிலிருந்து விலகப் போகிறேன் என்ற ஊகம் முட்டாள்தனமானது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். ஊடகங்களுக்கு விற்பனைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கையில், தாபுங் ஹாப்பான் நடவடிக்கைகள் செப்டெம்பர் 30-இல் முடிவுக்கு வருமா என்று கேட்ட போது,…

எச்எஸ்ஆர் திட்டம்: சிங்கப்பூரும் மலேசியாவும் ஒப்பந்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன

  கோலாலம்பூர்-சிங்கப்பூர் வெகு-விரைவு இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தில் இரு தரப்பினருக்கும் பலன் அளிக்கக்கூடிய தீர்வுக்கு மலேசியாவும் சிங்கப்பூரும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று பொருளாதார விவாகார அமைச்சர் அஸ்மின் அலி கூறுகிறார். இந்த எச்எஸ்ஆர் திட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அறிவித்ததிலிருந்து இரு…

கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை எம்எசிசி வெளிப்படுத்தும் என்று…

  இரகசியத் துப்பறிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹஸ்னா அப்துல் ஹமிட் உட்பட, கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பகிரங்கமாகக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் நடத்தப்படும் செய்தியாளர் கூட்டத்தில் இது…

போலீஸ் நஜிப்பை மீண்டும் நாளை விசாரிக்கிறது

  போலீஸ் மீண்டும் நஜிப் ரசாக்கின் வாக்குமூலத்தை பதிவு செய்யவிருக்கிறது. அவர் நாளை மினாரா 238 ஜாலான் துன் ரசாக்கிற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் பணச் சலவை எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதித் தடுப்புச் சட்டத்தின் (அம்லா 2001) கீழ் விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. கடந்த…

அன்வாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்துசான் ஒப்புக்கொண்டுள்ளது, வழக்கு தீர்க்கப்பட்டது

  பிகேஆரின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் சட்டத்துறை தலைவர் அலுவலகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று மறைமுகமாகக் கூறும் கட்டுரைக்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா அன்வாரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர இன்று ஒப்புக்கொண்டது. உத்துசானுக்கான வழக்குரைஞர் அஸ்ஹார் அர்மான் அலி அந்த…

பலாக்கோங்கில் தோற்றால் மசீச பிஎன்னை விட்டு விலகி ஹரப்பானில் சேர…

  செப்டெம்பர் 8 இல் நடைபெறும் பலாக்கோங் இடைத் தேர்தலில் மசீச தோற்றால் அது பிஎன்னில்ருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று டிஎபி தலைவர் டான் கோக் வை இன்று மசீசவுக்கு சவால் விட்டார். அவர்கள் இடைத் தேர்தலில் தோற்றால் அவர்கள் எங்களுடன் ஹரப்பானில் சேர்ந்து கொள்ள வேண்டும்.…