வெளிவிவகார உளவுத்துறை உளவுத்துறைத் தலைவருக்கு ஐந்துநாள் தடுப்புக் காவல்

புத்ராஜெயா மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், மலேசிய வெளிவிவகார உளவுத்துறை (எம்இஐஓ) முன்னாள் தலைவரான ஹசானா அப்துல் ஹமிட்டை ஐந்து நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவிட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வழக்குரைஞர் அஹமட் அக்ரில் காரிப், ஒரு வாரத் தடுப்புக் காவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், மெஜிஸ்ட்ரேட் ஷா…

நோயால் பாதிக்கப்பட்ட செய்தியாளருக்குப் பண உதவி தேவை

தமிழ் நேசன் முன்னாள் செய்தியாளர் வி.பி. தவசேகரன்,66, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதை அவரால் சமாளிக்க முடியாததால் நல்லுள்ளங்களின் ஆதரவைத் நாடுகிறார். 2009-இலிருந்து இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தவசேகரனுக்கு வாய்வழியாக உணவு உண்ண முடிவதில்லை. எல்லாம் பாலுணவுதான். அதுவும் சிறப்புக்…

வாக்குறுதி அளித்தபடி டாக்டர் எம் அதிகாரத்தை வழங்குவார், அன்வார் நம்புகிறார்

முன்னர் வாக்குறுதி அளித்தபடி, பிரதமர் பதவியைத் துன் டாக்டர் மகாதிர் முகமட் தன்னிடம் வழங்குவார் என அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்ததாக ‘நிக்கேய் ஆசியான் ரிவியூ’ செய்தி வெளியிட்டுள்ளது. "நான் அவரை நம்புகிறேன், அவரிடம் கேள்வி கேட்க எனக்கு எந்தக் காரணமும் கிடையாது," என அவர் குறிப்பிட்டுள்ளார். “எனக்கும்…

பிரதமர் அலுவலகம்: அந்நியர்கள் சொத்துக்கள் வாங்கலாம், ஆனால் நிபந்தனைகள் உண்டு

  மலேசியா எனது இரண்டாவது இல்லம் என்ற திட்டத்தின் அந்நியர்கள் மலேசியாவை தங்களுடைய நிரந்தர குடியிருப்பிடமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ஆர்வமுள்ளவர்களுக்கு அதற்கான நிபந்தனைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன மற்றும் இந்தத் திட்டத்திற்கான தகவல் பகிரங்கமாகக் கிடைக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில்…

அலி ஹம்சா விலகிக் கொண்டார், இஸ்மாயில் பாகார் புதிய தலைமைச்…

  அலி ஹம்சாவிற்கு பதிலாக கருவூலத்தின் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பாகார் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கிறார். 2012 ஆன்டிலிருந்து அரசாங்கத் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த அலி தமது பதவியை இஸ்மாயிலிடம் ஒப்படைப்பதாக இன்று மதியம் டிவிட்டரில் பதவு செய்துள்ளார். இஸ்மாயில் 14 ஆவது அரசாங்கத்…

கேமரன் மலை தேர்தல் வழக்கில் 52 சாட்சிகள் சாட்சியம் அளிப்பார்கள்

கேமரன் மலை தேர்தல் வழக்கில் எம்.மனோகரனுக்காக 36 பேரும், சி.சிவராஜாவுக்காக 16 பேரும் சாட்சியம் அளிப்பார்கள். வழக்கு செப்டம்பர் 3 தொடங்கி 14 நாள்களுக்கு நடக்கும். அதே வேளை மனோகரனின் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சிவராஜா தாக்கல் செய்துள்ள எதிர்மனுவை நீதிபதி அசிசா நவாவி ஏற்றுக்கொண்டால் வழக்கே…

குலா: குறைந்தபட்ச சம்பளம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம்…

அமைச்சரவை இவ்வாரம் அல்லது அடுத்த வாரம் அதன் வாராந்திரக் கூட்டத்தில் , தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சச் சம்பளத்தை முடிவு செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று கூறினார். தீவகற்ப மலேசியாவிலும் சாபா, சரவாக்கிலும் தனியார் துறையின் தொடக்கநிலைச் சம்பளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.…

கிள்ளான் அமலாக்க அதிகாரிகள் மீது மாட்டுச் சாணம் வீசப்பட்டது, ஐவர்…

  ஒரு மாட்டுப் பண்ணை மற்றும் இரு இந்து கோயில்களை தகர்ப்பதில் ஈடுபட்டிருந்த கிள்ளான் நகராண்மைக் கழகப் (எம்பிகே) பணியாளர்களுடன் நடந்த நேரடி மோதல் சம்பந்தமாக கிள்ளான், பண்டார் பொட்டானிக்கில் போலீசார் ஐவரை கைது செய்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. கைது செய்யப்பட்ட ஐவரில் பண்ணையின் சொந்தக்காரர்,…

நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து ஹரப்பான் தலைவர்கள் மன்னிப்பு கோருவார்களா?,…

  நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து தாம் பொய் உரைப்பதாக முன்பு கூறி வந்த ஹரப்பான் தலைவர்கள் இப்போது உள்துறை அமைச்சு உண்மையான எண்ணிகையை வெளியிட்டிருப்பததைத் தொடர்ந்து அவர்கள் தம்மிடம் மன்னிப்பு கேட்பாளர்களா என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார். நஜிப் அவரது முகநூல் பக்கத்தில்,…

கட்சித் தேர்தலில் ரபிசி போட்டியிட முடியுமா? குழுதான் தீர்மானிக்க வேண்டும்

இரண்டு நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாண்டான் எம்பி ரபிசி ரம்லி, கட்சித் தேர்தலில் கலந்துகொள்ள முடியுமா, முடியாதா என்பதை பிகேஆர் தேர்தல் குழுதான் முடிவு செய்ய வேண்டும். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது வான் அசிசா இவ்வாறு கூறினார்.…

சிஇபி அறிக்கை இரகசியமாக வைக்கப்படலாம்- பிரதமர்

பெருமக்கள் மன்ற (சிஇபி)த்தின் அறிக்கை பொதுவில் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப்படலாம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அவர்களின் வேலை புலனாய்வு செய்து எனக்கு அறிக்கை தாக்கல் செய்வதுதான். அறிக்கையை ஏற்கிறேனா இல்லையா என்பது என்னைப் பொறுத்தது. முக்கியமாக நான் முடிவுகள் எடுப்பதற்குத் தேவையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.…

முன்னாள் ஐஜிபி அமைதிப்பேச்சு வழிநடத்துபவரா? ஆட்சேபிக்கிறார் நூருல்

பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ரகிம் நூரை தென் தாய்லாந்து அமைதிப் பேச்சு வழிநடத்துபவராக நியமிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். டிவிட்டரில் கருத்தைப் பதிவிட்ட நூருல், “அப்பாவி மனிதர் ஒருவரை மிருகத்தனமாகத் தாக்கியவர்” என்று ரகிமை…

பிகேஆர் தேர்தல்: தலைமைச் செயலாளர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்…

பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு பாயான் பாருவில், ரிபோர்மாசி இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் பேசிய சைபுடின், ரபிசியின் திறமைகளைப் புகழ்ந்துரைத்தார். அவரது செயல்பாட்டைக் கண்டு அன்வார் இப்ராகிமே வியந்து போனதாக…

மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக வீ அறிவிப்பு

மசீச-வின் ஒரே பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருக்கும் வீ கா சியோங், கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மசீச-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தற்போது மோசமான நிலையில் இருக்கும் தனது கட்சியின் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, தான் பொறுப்பேற்க உள்ளதாக வீ கூறியதாக, ‘சைனா…

இக்குவானிமிட்டி அனுபவத்தை மாட் சாபு பகிர்ந்துகொண்டார் : ‘அலாமாக், அதை…

கிள்ளான் துறைமுகத்தில் இருக்கும், இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலுக்கு மேற்கொண்ட பயண அனுபவத்தை, பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு, இன்று பகிர்ந்து கொண்டார். “அக்கப்பலை நான் வெளியில் இருந்து பார்த்தேன், அப்படியொன்றும் பெரியதாகத் தெரியவில்லை, ஆனால் உள்ளே சென்று பார்த்தபோது, ஐயோ, அதை நாம் நினைத்து பார்க்கவே முடியாது. “அதனுள்…

118 சோஸ்மா தடுப்புக்காவல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்

  சுங்கை பூலோ சிறைச்சாலையில் சோஸ்மா சட்டம் 2012-டின் கீழ் தடுத்து வைக்கப்படிடிருந்த மொத்தம் 118 கைதிகள் அவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். தடுப்புக்காவல் கைதிகளின் பிரதிநிதிகளை தாம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து ஓர் இணக்கம் காணப்பட்டது என்றும் பிரதமர்…

ஹாடி: நஜிப்பை பாஸ் ஏற்றுக்கொள்கிறதா? மகாதிரையே ஏற்றுக்கொண்டுள்ளமே!

  முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிராக பாஸின் கதவுகள் மூடப்படாது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று மீண்டும் கூறினார். அந்த இஸ்லாமியக் கட்சி டாக்டர் மகாதிர் முகமட் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட போது அவரை ஏற்றுக்கொண்டது என்றாரவர். எங்களை ஏற்றுக்கொள்பவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அம்னோவால் 1969…

இராணுவம்: ஜிஇ 14க்குப் பின்னர் ஹிஷாமுடினுக்கு பாதுகாப்புச் சேவை நிறுத்தப்பட்டிருக்க…

முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஆயுதப் படை வீரர்களின் பாதுகாப்புச் சேவை 14அவது பொதுத் தேர்தலுக்குப் பின் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மே 9 தேர்தலுடன் அச்சேவையை நிறுத்தியாயிற்றே என்று ஆயுதப்படை அறிக்கை ஒன்று கூறுகிறது. நேற்று மலேசியாகினி, ஆயுதப் படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த…

ஒற்றுமைக்கு வேதமூர்த்தியின் புதிய திட்டம்

பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவரிடையே ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த எண்ணுகிறார். அது விரிவான, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு திட்டம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால ஒற்றுமைத் திட்டங்களின் தோல்விக்கான காரணங்களையும் அது கவனத்தில் கொள்ளும் என்றார். “கடந்த காலத்தில்…

‘எதிரணியின் பலவீனம்; அரசாங்கம் வாக்குறுதிகளைத் தட்டிக்கழிக்க முடிகிறது’

எதிரணி வலுவற்று இருப்பதால்தான் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால் தட்டிக்கழிக்கிறது, “வெறுக்கத்தக்க” மூன்றாவது தேசிய கார் திட்டமொன்றைத் தொடங்க நினைக்கிறது என்கிறார் மசீச மகளிர் உதவித் தலைவர் ஒங் சொங் ஸ்வென். செண்ட்டரான ஒங், மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஹரப்பான், ஐக்கிய தேர்வுச்…

இராஜகுமாரன் காலமானார் – பத்திரிக்கைத் துறை இன்னொரு மகனை இழந்தது!

மலேசிய பத்திரிகைத் துறையைச் சேர்ந்த இன்னொரு தூண் இன்று சரிந்தது. நயனம் பருவ இதழை நீண்ட காலம் நடத்தி வந்தவரும் ‘இளைய தமிழவேள்’ ஆதி.குமணனின் அண்ணனுமான ஆதி.இராஜகுமாரன் உடல் நலக் குறைவினால் இன்று ஆகஸ்ட் 25-ஆம் நாள் சனிக்கிழமை காலையில் தலைநகரில் காலமானார். நயனம் மாத இதழை எதிர்பார்த்து…

கிழக்குக்கரையில்  பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை- மகாதிர்

மெர்டேகிழக்குக்கரையில் கா ஆய்வு மையம் அண்மையில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அவரது நிர்வாகத்துக்கும் முறையே 62 விழுக்காடும் 58 விழுக்காடும் ஆதரவு இருப்பதைக் காட்டியது. இதை வைத்துப் பார்க்கும்போது மே9 பொதுத் தேர்தலில் மகாதிர் தலைமையில் போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பானுக்கு மலாய்க்காரர் வாக்க்குகளில் 30…

எச்எஸ்ஆரை ஒத்திவைப்பது மீதான பேச்சு தொடர்கிறது

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையில் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தை ஒத்திவைப்பது மீதான பேச்சுகள் தொடர்ந்து நடைபெற்றுவதாக ஒரு செய்தி கூறுகிறது. சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு அதை உறுதிப்படுத்தியதாக சேனல் நியுஸ் ஆசியா நேற்று அறிவித்தது. “எச்எஸ்ஆர் திட்டத்தை ஒத்திவைக்க மலேசியா கேட்டுக்கொண்டிருப்பது குறித்து உள்கட்டுமான ஒருங்கிணைப்பு அமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான…