அன்வார் பிகேஆரின் பெயரை ஓர் இந்தியக் கட்சிப் பெயராக மாற்ற…

  பிகேஆரின் உறுப்பினர் நிலையைப் பிரதிநிதிக்கும் வகையில் அக்கட்சி அதன் பெயரை ஓர் இந்தியக் கட்சி என்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தலைவர் எஸ்.எ விக்னேஸ்வரன் கூறுகிறார். மஇகாவைவிட பிகேஆரில் அதிகமான இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய…

உல்லாசக் கப்பல் இகுவானிமிட்டியை உடனடியாக விற்க நீதிமன்றம் அனுமதி அளித்தது

  உல்லாசக் கப்பல் இகுவானிமிட்டியை உடனடியாக விற்க 1எம்டிபிக்கும் அரசாங்கத்திற்கும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை யார் வைத்துக்கொள்வது என்பது பற்றி நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விபரத்தை வாதிகளின் வழக்குரைஞர் ஓங் சீ கெவான் நீதிபரிபாலன ஆணையர் கதிஜா இட்ரீஸை அவரது…

மூத்த இதழாளர் உதயம் துரைராஜ் அமரரானார்

உலகில் முதன் முறையாக தொலைக்காட்சியில்  தமிழ்ச் செய்தி அறிக்கையை  வாசித்த ‘உதயம்’ துரைராஜ் அமரர் ஆகிவிட்டார். 1963-ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி ஒலிபரப்பைத் தொடங்கியபோது, அதைத் தொகுத்து வழங்கிய பெருமைக்குரிய எம்.துரைராஜ், மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் மிக மூத்தவராகவும் அனுபவம் மிக்கவராகவும் வலம் வந்தவர்.…

மகாதிர்: குவாந்தான் ‘சீனப் பெருஞ்சுவர்” அகற்றப்பட வேண்டும்

  மலேசியா-சீனா குவாந்தான் இண்டஸ்ரியல் பார்க்-கை சுற்றியுள்ள சுவர்கள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மகாதிர் கூறுகிறார். அந்த இடத்தை உள்ளூர்வாசிகள் "சீனப் பெருஞ்சுவர்" என்று கூறுவதாக மலேசியாகினி கடந்த ஆண்டு ஓர் அறிக்கையில் கூறியிருந்தது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு திரும்பி வந்ததும் அவர் அளித்த முதல் நேர்காணலில், தாம்…

கர்பாலின் தேசநிந்தனை மேல்முறையீட்டில் மூத்த நீதிபதி தலையிட்டார், கர்பாலின் மகள்…

  தமது தகப்பனார் கர்பால் சிங்-கின் தேசநிந்தனை மேல்முறையீட்டின் தீர்ப்பில் ஒரு மூத்த நீதிபதி தலையிட்டார் என்று கூறப்படுவது மீது கர்பாலின் மகள் சங்கீத் கவுர் டியோ ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார். கர்பாலின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க மேல்முறையீட்டை செவிமடுத்த நீதிபதிகளின் பெரும்பான்மை முடிவில்…

சாபா போலீஸ்: மூசா அமானுக்குச் சலுகை காட்டவில்லை

சாபாவின் முன்னாள் முதலமைச்சர் உடல் நலம் தேறியதும் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வார்கள். மலாய் மெயிலிடம் பேசிய சாபா போலீஸ் ஆணையர் ரம்லி டின், மூசா அமானுக்குச் “சிறப்புச் சலுகை” கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்தார். “அவர் இப்போதிருக்கும் நிலையில் அவருக்குத் தொல்லை கொடுக்க விரும்பவில்லை- இது சிறப்புச்…

யயாசான் விலாயா பெர்சக்குத்துவான் நிலங்கள் முடக்கி வைக்கப்பட வேண்டும்

கெப்போங் எம்பி லிம் லிப் எங், யயாசான் விலாயா பேர்சக்குத்துவானின் நிலப் பரிவர்த்தனைகளை முடக்கி வைக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுநலம் பேணும் அறக்கட்டளை என்று நிறுவனப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அது, நில உரிமையாளர் ஆனது எப்படி என்றவர் வினவினார். அதன் வசமுள்ள நிலங்களில்…

சிஎம்: சாபா எண்ணெய் வரியில் 40 விழுக்காடும் 20விழுக்காடு உரிமத்…

சாபா அம்மாநில எண்ணெய் உற்பத்தி வரிப்பணத்தில் 40 விழுக்காட்டையும் 20விழுக்காடு உரிமத் தொகையையும் பெறுவதற்கு உரிமை பெற்றிருக்கிறது என முதலமைச்சர் ஷாபி அப்டால் கூறினார். அது குறித்து அவர், விரைவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலியையும் சந்தித்துப் பேசுவார் என த மலேசியன்…

இசிஆர்எல் இரத்து: ஹரப்பான் -அல்லாத மாநிலங்களைத் தண்டிப்பதுதான் நோக்கமா? வீ…

மசீச துணைத் தலைவர் வீ கா சியோங், 14வது பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத கிழக்குக் கரை மாநிலங்களைத் “தண்டிக்கும்” நோக்கத்தில்தான் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிழக்குக் கரை இரயில் தொடர்பு (இசிஆர்எல்)த் திட்டத்தை இரத்துச் செய்ததா என்று வினவினார். இரகசியமாக வைக்கப்பட்டுள்ள அப்பெருத் திட்டத்துக்கான குத்தகை…

உங்கள் கருத்து: மகாதிர் சிஇபி வேண்டும் என்கிறாரா அல்லது டயிம்…

டயிம் தொடர்ந்து இருப்பது அவசியம்: மகாதிர் திட்டவட்டம் ஜஸ்மின்: பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பெருமக்கள் மன்ற(சிஇபி) தலைவர் டயிம் சைனுடின் ஓர் ஆலோசகராக தொடர வேண்டும் என்று நினைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். அதற்காக சிஇபி உறுப்பினர்கள் அனைவருமே தொடர்ந்து இருப்பதை மகாதிர் விரும்புகிறார் என்று…

நம்பத்தகுந்த எதிரணியாகுவதற்கு முன்னர் மசீச நஜிப்பை கண்டிக்க வேண்டும், கிட்…

  1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது கண்டனம் தெரிவிக்காவிட்டால் மசீச நம்பத்தகுந்த எதிரணியாகுவதில் தோல்வியுறும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார். பலாகோங் இடைத் தேர்தலில் டிஎபிக்கு எதிராகப் போட்டியிடும் மசீச சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையக் கொண்டிருக்கும்…

மூசா அமான் நாடு திரும்பினார் : போலீஸ், எம்ஏசிசி அறிவித்தது

சபா மாநில முன்னாள் முதலமைச்சர், மூசா அமான் மலேசியா திரும்பினார். இன்று மாலை, சுமார் 6.45 மணியளவில், லண்டனில் இருந்த அவர் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் வந்தடைந்தார். குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், முஸ்தாஃபார் அலி, இதனை இன்று ஓர் அறிக்கையின் வழி உறுதிபடுத்தினார். செலேதார்,…

மக்கள் புதிய அரசாங்கத்தைச் சந்தேகிக்கவில்லை, பிரதமர் நன்றி தெரிவித்தார்

புதிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ், இந்நாட்டு முஸ்லிம்கள் சமாதானமாகவும், அமைதியாகவும் ஹஜ் திருநாளைக் கொண்டாடுவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நன்றி தெரிவித்தார். நாளை மலேசியாவில் கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளையொட்டி உரையாற்றிய டாக்டர் மகாதிர், நாட்டின் நிலைமையை மீளமைத்து, அமைதியாகவும் சமாதானமாக கொண்டாடப்படுவதற்கு நன்றி தெரிவித்தார். “ஹஜ்…

அன்பளிப்பை வாங்க மறுத்த அமைச்சர் அந்தோனி லோக்

  'அன்பளிப்பு-இல்லை' என்ற அரசாங்கத்தின் கொள்கையை வலியுறுத்திய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், அவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க மறுத்து விட்டார். "நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரிம500க்கும் கூடுதலானது", என்று கூறிய அமைச்சர் அந்தோனி, அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். அந்த போனின்…

திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை பற்றிய நிதி அமைச்சரின்…

  மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை காணாமல் போய் விட்டது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் விடுத்திருந்த அறிக்கை மீது போலீஸ் இன்று அவரது வாக்குமூலத்தைப் போலீஸ் பதிவு செய்தது. தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 409 இன் கீழ்…

ஜோ லாவின் அசாதாரணமான செல்வாக்கை சிஇபி வெல்ல முடியாது, ஹரப்பான்…

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசாங்கத்தின் மீது வணிகர் ஜோ லா கொண்டிருக்கும் அசாதாரணமான செல்வாக்கை மேன்மக்கள் மன்றம் (சிஇபி) விஞ்ச முடியாது என்று பக்கத்தான் ஹரப்பான் செனட்டர் ராஜா கமருல் பாரின் ஷா ராஜா அஹமட் கூறுகிறார். சிஇபியை நஜிப் குறை கூறியிருந்தார். அதற்குப் பதில்…

மகாதிர்: டயிம் சிஇபி-இல் தொடர்ந்து இருக்க வேண்டும்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , பெருமக்கள் மன்றத்தின் (சிஇபி) சேவை, அதிலும் குறிப்பாக அதன் தலைவர் டயிம் சைனுடினின் சேவை போதும் என்று நினைக்கவில்லை. “இல்லை, இல்லை, இல்லை. அவர் (டயிம்) கூறலாம் 100 நாள் ஆகிவிட்டது என்று. நான் அதன் பணி 100 நாள்களுக்கு மட்டும்தான்…

மூசா மருத்துவ ஆலோசனையையும் மீறி நாடு திரும்புகிறார்

முன்னாள் சாபா முதல்வர் மூசா அமான், லண்டன், கிளமெண்டைன் சர்ச்சில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சொந்த மாநிலத்துக்குத் திரும்புகிறார். மருத்துவர்கள் வேண்டாமென்று ஆலோசனை கூறினாலும் மூசா சாபாவுக்குத் திரும்புவதில் உறுதியாக உள்ளார் என அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜோ விட் கூறினார். மூசாவின் சிறப்பு உதவியாளராக இருந்த…

‘கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டும்’ என்ற பட்டியலில் முதன்மையான இடத்தில் நிதி…

அரசாங்க அமைப்புகளில் கண்டிப்பாக சீர்திருத்தப்பட வேண்டியவை பற்றிய பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, டைம் ஸைனுடின் கருத்துப்படி, நிதி அமைச்சு. அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம், இந்த பரிந்துரை கடந்த 100 நாள்களாக மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். இதில்…

பிஎன் கட்டுப்பாட்டிலுள்ள செனட் விற்பனைகள் வரி மசோதாவை ஏற்றுக் கொண்டது

  பிஎன் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற மேளவை, தேவான் நெகாரா, எதிர்பாராத நிலையில் விற்பனைகள் வரி மசோதா 2018-ஐ ஏற்றுக் கொண்டுள்ளது. இது திரும்பி வரும் விற்பணைகள் மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) சார்ந்த ஐந்து மசோதாக்களில் ஒன்றாகும். இந்த மசோதா குரல் ஒலி வாக்குகள் வழி ஏற்றுக்…

மலேசியாவின் அரசு வருமான இன்னல்களைப் போக்க ‘பரிவிரக்கமுள்ள’ சீனா உதவும்,…

  மலேசியா எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான நிலை மீது சீனா பரிவிரக்கம் காட்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமட் நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பெரும் நன்மைகளைக் காண முடியும் என்று மகாதிர் இன்று பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லி கெகியாங்குடன் நடைபெற்ற ஒரு…

‘ஐயா, கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க’: மசீசமீது போக்குவரத்து அமைச்சர் பாய்ச்சல்

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) போக்குவரத்து சம்மன்களை இரத்துச் செய்யும் முடிவைக் குறைகூறும் மசீசவினரைக் கடுமையாகச் சாடினார். மசீச அரசாங்கத்தில் இருந்தபோது ஏற்படுத்தி வைத்ததுதான் இந்த ஏஇஎஸ் பிரச்னை என்றாரவர். “யார் குறை சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், மசீச தலைவர்கள் குறை சொல்லக்…

சாபாவுக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பகுதி பெறும் தகுதி…

சாபா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி, நேற்று தம் சுற்றுப்பயணத்தின் உச்சக் கட்டமாக அம்மாநிலத்துக்கு நாட்டின் வளத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுத்தர பாடுபடப் போவதாகக் கூறினார். “மலேசியா உருவாகக் காரணமான மூன்று பிரதேசங்களில் ஒன்று சாபா....சாபாவை 14 மாநிலங்களில் ஒன்றாக கருதக் கூடாது.…