அம்னோ பேச்சுரிமையை முக்கியமற்ற அடிக்குறிப்பாக மாற்றிவிடலாகாது: ரயிஸ் அறிவுறுத்து

முன்னாள்   அமைச்சர்   ரயிஸ்   யாத்திம்   அம்னோ   பேச்சுரிமையையும்  தலைவர்களைக்  குறை  சொல்லும்   உரிமையையும்   முக்கியமற்ற   அடிக்குறிப்பாக   நினைத்து   ஒதுக்கிவிடக்  கூடாது    என்றார். அம்னோ   தகவல்   தலைவர்   அனுவார்  மூசாவின்  கூற்றுக்கு  எதிர்வினையாக    ரயிஸ்   நேற்றிரவு   முகநூலில்  இவ்வாறு   பதிவிட்டிருந்தார்.  1எம்டிபி   ஊழல்மீது   மலேசிய     அதிகாரிகள்   விசாரணை   செய்ய   வேண்டும்  …

தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்பட்டதால் சிலாங்கூரில் ஹரப்பானும் பாஸும் 7…

தீவகற்ப   மலேசியாவுக்கான இறுதி  தேர்தல்  தொகுதி  எல்லை  நிர்ணய  அறிக்கை   இன்று   நாடாளுமன்றத்தில்    தாக்கல்   செய்யப்பட்டது.     ஆளும்   கட்சிக்குச்    சாதகமான    முறையில்     தேர்தல்   தொகுதிகளை   நிர்ணயம்   செய்துள்ள   அந்த   அறிக்கை     14வது   பொதுத்  தேர்தலில்    பிஎன்    வெற்றிக்கு   வழிகோலுவதாகக்  கருதப்படுகிறது. அறிக்கைக்கு   மக்களவையின்  ஒப்புதலைப்  பெறுவது  ஒரு  பிரச்னையாக …

தாப்பாவில் சரவணனுக்கு எதிராக ரயிஸ் உசேன் களமிறக்கப்படுவாராம்

எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  பெர்சத்துவின்   தலைமை  வியூக  வகுப்பாளர்  ரயிஸ்  உசேன்    தாப்பாவில்  இளைஞர்,   விளையாட்டு   துணை   அமைச்சர்  எம்.சரவணனுக்கு   எதிராகக்   களமிறக்கப்படுவார். கட்சி  வட்டாரங்கள்   இதனைத்   தெரிவித்தன. இதன்   தொடர்பில்   அவர்  நாளை  அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  ஒன்றைச்    செய்வார்   என்று  கூறப்படுகிறது. மலேசியாகினி   ரயிசைத்   தொடர்பு  கொண்டபோது  …

சாலே: பொய்ச் செய்திச் சட்டம் 1எம்டிபி விவாதத்தை ஒடுக்குவதற்கு அல்ல…

தொடர்பு,  பல்லூடக     அமைச்சர்    சாலே    சைட்  கெருவாக்   பொய்ச்  செய்திகள்   தடுப்புச்   சட்டம்  1எம்டிபி  மீது விவாதங்கள்  நடப்பதைத்   தடுப்பதற்காகக்  கொண்டுவரப்பட்ட    சட்டம்   அல்ல    என்கிறார். “அது  உண்மையல்ல.  1எம்டிபி  குறித்து   விவாதிப்பதற்கோ   பேசுவதற்கோ   எந்தத்   தடையுமில்லை”,  என்றவர்   தம்  வலைப்பதிவில்   கூறினார். தவறான   தகவல்கள்  “செய்திகள்”  என்றும் …

தேர்தல் ஆணையத்தின் மோசடி அறிக்கைக்கு எதிராகப் பெர்சே ஆர்ப்பாட்டம்

  நியாயமான, நேர்மையான மற்றும் தூய்மையான தேர்தலுக்காகப் போராடும் அமைப்பான பெர்சே தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கைக்கு எதிரான போராட்டத்தில் இன்று நாடாளுமன்றத்தில் களமிறங்கியது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை பிரதமர் நஜிப் ரசாக் இன்று காலை மணி 11.30 அளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.…

ஜோ லோ உல்லாசப் படகை 1எம்டிபி பணத்திலிருந்துதான் வாங்கினார், டிஒஜே…

  மலேசியரான ஜோ லோ யுஎஸ்$250 மில்லியன் மதிப்பிலான உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை 1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட பணத்திலிருந்துதான் வாங்கினார் என்று அமெரிக்க நீதித் துறை மீண்டும் கூறுகிறது. நேற்று, டிஒஜே மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் 1எம்டிபியிலிருந்து பல பில்லியன் டாலர்கள் திருடப்பட்டதில் முக்கியமானவராக…

குவா மூசாங் பிகேஆர் உறுப்பினர்கள் 80 பேர் பாஸ் கட்சியில்…

பிகேஆர் கட்சி மீது நம்பிக்கை இழந்ததால், பிகேஆர் குவா மூசாங்கைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி, இன்று பாஸ் கட்சியில் இணைந்தனர் பக்காத்தான் ஹராப்பான் தனது இலக்கை இழந்து, அதன் அசல் போராட்டத்திலிருந்து விலகி சென்றுகொண்டிருப்பதால், தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக, பிகேஆர் குவா மூசாங் தொகுதியின்…

தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை: தடையை மீறிய ஆய்வாளர்…

அரசியல்  ஆய்வாளர்  வொங்  சின்  ஹுவாட்,   மக்களவையின்     தடையாணையையும்  மீறி   தேர்தல்  ஆணையத்தின்   தேர்தல் தொகுதி  எல்லை  நிர்ணய  அறிக்கையின் உள்ளடக்கத்தை    ஒரு   பொதுக்    கருத்தரங்கில்    வெளியிட்டார். “நாட்டுக்காக  சட்டத்தை  மீறப்  போகிறேன். “அறிக்கைக்குத்   தடையாணை  போடப்பட்டுள்ளது......ஏனென்றால்   எம்பிகள்   அதன்மீது   வாக்களிப்பதற்குமுன்    அதில்  உள்ள  பலவற்றை   மலேசியர்கள்    அறியக்கூடாது   …

‘முகம் கடுகடுவென்றிருக்கும், ஆனால், மனசு தங்கம்’ -கூ நான்

பிகேஆர்    எம்பி    நூருல்     இஸ்ஸா    கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர்   தெங்கு   அட்னான்    தெங்கு   மன்சூரைப்  புன்னகையுடன்  பேசச்  சொல்ல    அதற்கு   அமைச்சர்   அளித்த  பதிலால்  மக்களவை   கலகலப்பானது. பிகேஆர்  எம்பி    டான்   கீ  குவோங்   அரசாங்கத்தின்   வாடகைவழி   சொந்தமாக்கிக்கொள்ளும்   திட்டம்  குறித்துக்   கேட்ட   கேள்விக்கு   அமைச்சர்   பதிலளிக்கையில்    குரலை …

1எம்பிடி குறித்து மெளனம் காத்து நஜிப்பை அழித்து விடாதீர்கள்: அமைச்சர்களுக்கு…

அமைச்சர்கள்    1எம்டிபி  குறித்து  பேசாதிருப்பது  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   அழிவுக்குத்     துணைபோவதற்கு  ஒப்பாகும்   என்கிறார்  முன்னாள்   தகவல்   அமைச்சர்  ரயிஸ்   யாத்திம். “பொருளியலாளர்கள்   பிரதமர்  திருடர்   என்று  சொல்லி  இழித்துரைக்கிறார்கள்.  நான்     சும்மா  இருக்க   மாட்டேன். “சும்மா  இருந்து  விட்டால்  ,  அமைச்சர்கள்  அந்த  விவகாரம்  பற்றி …

மஇகா வேட்பாளர் பட்டியல் குறித்து சுப்ரா மெளனம்

ம இகா    தலைவர்   டாக்டர்    எஸ்.சுப்ரமணியம்   14வது  பொதுத்   தேர்தலில்  போட்டியிடும்   மஇகாவின்   வேட்பாளர்களின்  பெயர்களை   வெளியிட   மறுக்கிறார். வேட்பாளர்கள்   அடையாளம்   காணப்பட்டு  விட்டதாகக்  கூறிய  சுப்ரமணியம்,   இப்போது    எந்தெந்த   தொகுதிகளை      வைத்துக்கொள்வது   எவற்றை  மற்ற   பங்காளைக்    கட்சிகளோடு   மாற்றிக்  கொள்வது    என  மஇகா  பிஎன்   தலைமையுடன்   விவாதித்துக் …

கெராக்கான் வேட்பாளர் பட்டியல் தயார்

கெராக்கான்  கட்சி  14வது   பொதுத்   தேர்தலுக்கான   அதன்   வேட்பாளர்  பட்டியலை   இறுதி   செய்துள்ளது. நேற்று   கட்சித்    தலைமையகத்தில்    கூடிய    மத்திய    செயல்  குழு       வேட்பாளர்களைக்  கவனமாக   மதிப்பிட்டு   முடிவு   செய்திருப்பதாக    கட்சித்  தலைவர்   மா  சியு  கியோங்   கூறினார். இறுதி  செய்யப்பட்ட   வேட்பாளர்  பட்டியல்   பிஎன்  தலைவர்    நஜிப்   …

அன்வார் இப்ராஹிம்-இன் ஈர்ப்பு நஜிப்பிடம் உண்டு

பிரதமர் நஜிப், முன்னாள் அம்னோ தலைவர்களின் குணங்களைப் பெற்றிருக்கிறார் என, அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார். முன்னாள் பிரதமரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம்-இன் கவர்ச்சியும் அவரிடம் உள்ளது என்று அனுவார் முசா தெரிவித்தார். “துன் அப்துல்லா படாவியின்…

நஜிப் தொடர்ந்து இருந்தால் நாடு குட்டிச்சுவர்தான், மகாதிர் கூறுகிறார்

  பக்கத்தான் ஹரப்பான் நாட்டிற்கு மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை நம்ப மறுப்பவர்கள் சிலர் இருக்கின்றனர் என்பதை இன்று ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் மகாதிர், இதற்கான மாற்று மிக மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்தார். சூழ்நிலையை மாற்றியமைக்க பக்கத்தான் ஹரப்பானால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தைக் கொண்டவர்கள்…

ஜமால்: வரும் புதன்கிழமை, மஞ்சள் சட்டை இருந்தால், சிவப்பு சட்டையும்…

எதிர்வரும் புதன்கிழமையன்று, தேர்தல் தொகுதி வரையரை மறுபரிசீலனைக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் ‘பெர்சே’-வின் நடவடிக்கையைத் தடுக்க, 10,000 உறுப்பினர்களை அணிதிரட்ட உள்ளதாக ‘செஞ்சட்டை’ இயக்கத் தலைவர் ஜமால் முகமட் யுனூஸ் சற்றும் தயங்காது எச்சரித்துள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், குழப்பத்தை ஏற்படுத்தவும் அரசாங்கத்தை அவமதிக்கவும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

பொய்ச் செய்தி தடுப்புச் சட்டவரைவு ஊடகங்களைக் கட்டுப்படுத்தும், பத்திரிக்கையாளர் சங்கம்…

பொய்ச் செய்திகள் பரப்பும் நபர்களை இலக்காகக் கொண்ட பொய்ச் செய்தி தடுப்புச் சட்டவரைவு, ஊடகங்கச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் என தீபகற்ப மலேசியா தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. "இந்த மசோதா, ஊடகங்களுக்குப் பரந்தளவில் விளைவை ஏற்படுத்தும். ஏனென்றால், செய்தியின் ஆதாரங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் நிதியாளர்கள் மீது கடுமையான தண்டனைகள்…

‘இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லும் சுதந்திரம்கூட இனி மலேசியர்களுக்கு…

பொய்செய்தித்   தடுப்புச்   சட்டம்  என்பது  மற்றொரு   அடக்குமுறை   கருவி   என்கிறார்  மலேசியாகினி   தலைமைச்  செய்தியாசிரியார்   ஸ்டீபன்   கான். மலேசியாகினியை   அதன்  தலைமைச்  செயல்  அதிகாரி   பிரமேஷ்   சந்திரனுடன்   கூட்டாக   நிறுவியவரான    கான்,    ‘1984’  நாவலில்  ஜார்ஜ்  ஆர்வெல்  கூறியிருந்ததை     நினைவு  கூர்ந்தார். “ஜார்ஜ்  ஆர்வெல்   எழுதினார்,  ‘சுதந்திரம்    என்றால் …

பொய்ச் செய்திகளுக்கு ரிம500ஆயிரம் தண்டம், 10 ஆண்டுச் சிறை

இன்று   நாடாளுமன்றத்தில்   தாக்கல்   செய்யப்பட்ட   பொய்ச்  செய்தித்   தடுப்புச்   சட்டவரைவு   “பொய்ச்  செய்திகள்”   பரப்புவோருக்கு  ரிம500,000   வரை  அபராதம்  அல்லது  பத்தாண்டுச்   சிறை  அல்லது   இரண்டும்     சேர்த்து    விதிக்க  வகை   செய்கிறது. “செய்திகளோ,  தகவல்களோ,  தரவுகளோ,  அறிக்கைகளோ  அவை  கட்டுரைகளாகவோ  காணொளிகளாகவோ,  ஒலிப்பதிவுகளாகவோ   அல்லது   வேறு   எந்த   வகையினதாக   …

பங்களா-கேட் விவகாரம்: இன்று விசாரணை தொடங்கியது

பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்  எங்,  இரு-மாடி   பங்களா    வாங்கிய  விவகாரம்மீதான   வழக்கு   இன்று  பினாங்கு   உயர்  நீதிமன்றத்தில்   விசாரணைக்கு     வந்தது. பினாங்கு  முதலமைச்சர்    ஒருவர்மீது    ஊழல்  வழக்கு    தொடரப்படுவது   இதுவே  முதல்முறை   என்பதால்   இவ்வழக்கு  மிகுந்த  பரபரப்பை    ஏற்படுத்தியுள்ளது. வழக்குவிசாரணை   23  நாள்களுக்கு   மே  இறுதிவரை   நீடிக்கும்   …

சரவாக் வாக்காளர் ‘உலகின் மிக வயதானவரா?’

சரவாக்    வாக்காளர்  பட்டியலைப்   பார்த்துக்கொண்டு  வந்த       பெட்ராஜெயா   டிஏபி  சோசலிஸ்ட்  இளைஞர்  பகுதி   விளம்பரப்  பிரிவுச்  செயலாளர்     அப்துல்  அசீஸ்  இசா  அதில்    முகமட்   சைட்  பின்  முகம்மட்  அர்ஷாட்   முகம்மட்  சைட்     என்ற   பெயரைப்   பார்த்து   அதிர்ந்து   போனார். பெயர்  அதிர்ச்சி    அளிக்கவில்லை,   அவர்   1868,  ஜனவரி …

1எம்டிபி : நடுநிலை என்பது, தீயவர்களைப் பாதுகாப்பது என்பதல்ல என்கிறார்…

1எம்டிபி பிரச்சனையில், பாஸ்-இன் நடுநிலைமை, அது குற்றத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் இல்லை, என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். தவறு என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, யாரையும் தண்டிக்க கட்சி விரும்பவில்லை என்பதால் பாஸ் இந்த நிலைபாட்டை எடுத்துள்ளது என்று அவர் சொன்னார். "இந்த நடுநிலை,…

அமைச்சர்: நாட்டின் பொருளாதார நிலை நிச்சயமற்ற நிலையில் இருந்தாலும், வெற்றிகரமாகவே…

அண்மைய காலமாக, நாட்டின் பொருளாதார நிலைமை நிச்சயமற்று இருந்தபோதிலும், வெற்றிகரமாகவே இருப்பதாக இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் காணி கூறினார். கணிக்க இயலாதப் பொருளாதாரச் சூழலில் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நிர்ணயிக்கப்பட்ட அதன் பிரதான செயல்திறன் குறியீட்டு (கேபிஐ) இலக்கை அது அடைந்துள்ளது என்று…

போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்படும்

  போலியான செய்தி எதிர்ப்புச் சட்ட மசோதா மக்களவையில் முதல் வாசிப்புக்காக நாளை தாக்கல் செய்யப்படும். போலியான செய்திக்கு எதிர்ப்புச் சட்டம் இயற்றும் கருத்தை சட்டத்துறை அமைச்சர் அஸலினா ஓத்னான் சைட் கடந்த ஜனவரியில் வெளியிட்டார். அதற்காக புத்ரா ஜெயா ஒரு சிறப்புக் குழுவை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.…